என் மலர்
புதிய கேஜெட்டுகள்
மிட் ரேஞ்சில் மிரட்டிய விவோ - புது ஸ்மார்ட்போன் அறிமுகம்
- ஆண்ட்ராய்டு 14 சார்ந்த பன்டச் ஓஎஸ் 14 வழங்கப்பட்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய Y300 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IP64 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் விவோ Y300 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த பன்டச் ஓஎஸ் 14 வழங்கப்பட்டுள்ளது.
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ Y300 5ஜி மாடல் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் விவோ Y300 5ஜி ஸ்மார்ட்போன் பேண்டம் பர்ப்பிள், எமிரால்டு கிரீன் மற்றும் டைட்டானியம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடலின் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.