search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை சமந்தா விவாகரத்து விவகாரம்: தெலுங்கானா மந்திரிக்கு நாகர்ஜுனா கண்டனம்
    X

    நடிகை சமந்தா விவாகரத்து விவகாரம்: தெலுங்கானா மந்திரிக்கு நாகர்ஜுனா கண்டனம்

    • கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தாலும், சரியான காரணத்தை அவர்கள் கூறவில்லை.
    • சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவே காரணம் என்றார் தெலுங்கானா மந்திரி.

    ஐதராபாத்:

    தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017-ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன்பின், ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

    கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தாலும், சரியான காரணத்தை அவர்கள் வெளிப்படையாக கூறவில்லை.

    தற்போது, நாக சைதன்யா நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய உள்ளார். சில மாதத்துக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

    இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்தின் மந்திரியான கோண்டா சுரேகா சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவ் தான் காரணம். அவர் செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள் எனக்கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

    இந்நிலையில், தெலுங்கானா மந்திரி சுரேகாவின் இந்தப் பேட்டிக்கு நடிகர் நாகர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, நாகர்ஜுனா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை எதிரிகளை விமர்சிக்கப் பயன்படுத்தாதீர்கள். தயவுசெய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள், குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×