என் மலர்
கிரிக்கெட் (Cricket)
டி20 கிரிக்கெட் விளையாடும் விதத்தையே நீங்கள் மாற்றியுள்ளீர்கள்: பாராட்டிய காவ்யா மாறன்
- ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா கோப்பை வென்றது.
- ஹைதராபாத் அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்த காவ்யா மாறன் அவர்களை பாராட்டி பேசினார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.
அப்போட்டியை நேரில் கண்டு ரசித்த ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், ஹைதராபாத் அணியின் தோல்வியை கண்டு கண்ணீர் விட்டு அழுதார். அதை மறைத்து சிரித்தபடியும் அவரது அணியின் வீரர்களுக்கு கைதட்டி வரவேற்றார்.
அதன் பிறகு ஹைதராபாத் அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்த அவர் வீரர்களுக்கு உத்வேகம் ஊட்டினார்.
அதில், "நீங்கள் அனைவரும் எங்களை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். அதை உங்களிடம் கூறவே நான் இங்கு வந்தேன். டி20 கிரிக்கெட் விளையாடும் விதத்தை நீங்கள் மாற்றியுள்ளீர்கள். இன்று எல்லாரும் நம்மை பற்றி பேசுகிறார்கள். எல்லா நாளும் நமக்கு வெற்றி கிடைப்பதில்லை. ஆனாலும் நீங்கள் அருமையாக விளையாடினீர்கள். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி, நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்" என்று பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.