search icon
என் மலர்tooltip icon

    சென்னை

    • சி.பி.சி.ஐ.டி. காலதாமதமின்றி அனைத்து வழக்குகளையும் விசாரிப்பது போல அமைச்சரின் கூற்று உள்ளது.
    • பல வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, கள்ளச்சாராயம் தயாரிப்பவர், விற்பனையாளர் மற்றும் காவல் துறையினருக்கு மத்தியில் தொடர்பு இருப்பதாகவும், சி.பி.சி.ஐ.டி., நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளாது என்றும் தெரிவித்து, இந்த வழக்கினை மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முதலமைச்சர் முடிவெடுத்து விரைவில் அறிவிப்பார் என்று சொல்வது குற்றவாளிகளுக்கு உதவி புரிவது போல் உள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

    சி.பி.சி.ஐ.டி. காலதாமதமின்றி அனைத்து வழக்குகளையும் விசாரிப்பது போல அமைச்சரின் கூற்று உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு 90 நாட்களில் முடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 1,276 நாட்கள் கடந்தும் வழக்கு முடிக்கப்படவில்லை.

    திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் உயிரிழப்பு குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும், எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. வேங்கைவயல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. இதுபோன்று பல வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே, சி.பி.சி.ஐ.டி. வசம் இருந்தால் வழக்குகள் விரைந்து முடிக்கப்படும் என்ற அமைச்சரின் கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்பது சட்டம் ஒழுங்கு சீர்கேடு.
    • கொடநாடு கொலை கொள்ளை நடந்தது அதிமுக ஆட்சியில் தான்.

    கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்டதை வரவேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    * ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றம் சென்ற இபிஎஸ் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அறிக்கை வெளியிடுகிறார்.

    * சிபிஐ விசாரணைக்கு தடை கோரி மேல்முறையீடு செய்யக்கூடாது என யோக்கியனை போன்று பேசுகிறார் இபிஎஸ்.

    * தனக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு இபிஎஸ் போனது ஏன்?

    * கண்டெய்னரில் பணம் கைப்பற்றிய விவகாரத்தில் சிபிஐ இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.

    * கண்டெய்னரில் 570 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது யாருடையது என்று இன்று வரை தெரியவில்லை.

    * கள்ளக்குறிச்சி வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    * உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

    * தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் சம்பந்தமில்லை என்பதை இபிஎஸ் அறிய வேண்டும்.

    * கண்டெய்னரில் பணம் கைப்பற்றிய விவகாரத்தில் சிபிஐ இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.

    * தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்பது சட்டம் ஒழுங்கு சீர்கேடு.

    * கொடநாடு கொலை கொள்ளை நடந்தது அதிமுக ஆட்சியில் தான்.

    * தஞ்சையில் நடந்த கொலையை வைத்து கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை என பேசுவது நியாயமல்ல.

    * ஆசிரியர் கொலை சம்பவம், காதல் விவகாரம் காரணமாக நடந்துள்ளது, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    * அதிமுக ஆட்சியில் நடந்த ஆசிரியர்கள் கொலைகளை பட்டியலிட்டு அவர் பேசினார். 

    • உலகெங்கிலும் பரந்து விரிந்திருக்கும் மீனவ சமுதாய மக்களின் வாழ்க்கையைப் போற்றும் விதமாக கொண்டாடப்படும் உலக மீனவர்கள் தினம் இன்று.
    • மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டிடவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    உலகெங்கிலும் பரந்து விரிந்திருக்கும் மீனவ சமுதாய மக்களின் வாழ்க்கையைப் போற்றும் விதமாக கொண்டாடப்படும் உலக மீனவர்கள் தினம் இன்று.

    மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர்களாலும், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களாலும் மிகுந்த இன்னல்களுக்குள்ளாகி வரும் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டிடவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வாய்க்கு வந்தபடி வன்மத்தைக் கக்குவது விமர்சனமல்ல அவதூறாகும்!
    • எவர் நம்மை விமர்சிப்பவர்கள் என்பதையறிந்தே நம் எதிர்வினைகள் அமையவேண்டும்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே. வணக்கம்!

    களமிறங்கிச் செயல்படுவோர் யாவராயினும் அவர்கள் விமர்சனங்களுக்கு ஆளாவது தவிர்க்க இயலாதது. அதன்படியே கருத்தியல் தளங்களிலும் செயற்பாட்டுக் களங்களிலும் தொடர்ந்து மக்களோடு நின்று பாடாற்றிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

    விமர்சனங்கள் எவ்வாறாயினும் அவற்றை உள்வாங்கிக் கொள்ளும் பொறுமையையும் பின்னர் அவற்றினடிப்படையில் சுய விமர்சனம் செய்துகொள்கிற துணிவையும் பெறுவது தான் வெற்றிகரமான அடுத்தகட்ட நகர்வுகளுக்கும் முற்போக்கான வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும்.

    அப்படியே நாம். நம் மீதான விமர்சனங்களையும் உள்வாங்கிக் கொண்டு, அவை நேர்மையான, ஆக்கபூர்வமான விமர்சனங்களாக இருந்தால், அவற்றிலிருந்து நம்மை நாமே சுய விமர்சனங்களுக்கு உட்படுத்திக் கொள்வதை நடைமுறையாகக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்கேற்ப தேவையான மாற்றங்களையும் ஏற்றுக் கொள்கிறோம்.

    ஆனால், நம்மைப் பற்றிய விமர்சனங்கள் எத்தகையவையாக உள்ளன? அவை பெரும்பாலும் திட்டமிட்ட பொய்யுரைகளாகவும் ஆதாரமற்ற அவதூறுவாகவுமே அள்ளி இறைக்கப்படுகின்றன.

    கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாகவே நமது களப்பணிகள் மற்றும் வளர்ச்சி நிலைகளுக்கேற்ப, நமக்கு எதிரானவர்கள் விமர்சனங்கள் என்னும் பெயரால் மிகவும் அப்பட்டமான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். அவை மிகவும் கேடான உள்நோக்கம் கொண்டவை.

    சமூகம், பண்பாடு, மற்றும் அரசியல் தளங்களில், நாம் கைக் கொண்டுள்ள கருத்தியல் மற்றும் நிலைப்பாடுகள், நமது களம் மற்றும் செயற்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராக வெவ்வேறு வகையிலான பகைவர்கள் அவ்வப்போது உருவாகி வருகின்றனர். அவர்கள் நம்மை வீழ்த்துவதற்குக் கையாண்டுவரும் உத்திகள் ஏராளம். அவற்றுள் முதன்மையான ஒன்றுதான் அவதூறு பரப்புதலாகும்.

    விமர்சனம் என்பது வேறு!

    அவதூறு என்பது வேறு!

    விமர்சனம் என்பது ஒருவரின் அல்லது ஒரு இயக்கத்தின் கொள்கை கோட்பாடுகள் மற்றும் களப்பணிகள் ஆகியவற்றில் காணும் நிறைகுறைகளை மதிப்பீடு செய்வதாகும். குறைபாடுகளை மட்டுமே சுட்டிக்காட்டாமல் நிறைகளையும் வரவேற்றுப் பாராட்டுவதும்தான் விமர்சனமாகும். ஆனால், அவ்வாறின்றி வாய்க்கு வந்தபடி வன்மத்தைக் கக்குவது விமர்சனமல்ல அவதூறாகும்!

    நம்மை விமர்சிப்பவர்களில் இருவகை உண்டு. நம் மீது நம்பிக்கையும். நமது வளர்ச்சியில் அக்கறையும் கொண்டவர்கள் ஒருவகை.

    நம்மை ஏற்க மனமில்லாத, நம் வளர்ச்சியை முற்றிலும் விரும்பாத, நம்மை வீழ்த்தி மகிழ்ந்தாட காத்திருக்கும் சதிகாரர்கள் இன்னொரு வகை.

    முதல் வகையினர், கொள்கை- கோட்பாடுகள் சார்ந்து குறைகளைச் சுட்டிக்காட்டினாலும், அதில் ஆக்கப்பூர்வமான அறிவுறுத்தல்கள் இருக்கும். அவர்களின் விமர்சனங்களில் கடுமையான காய்தல் இருந்தாலும் காயப்படுத்துதல் இருக்காது. அவற்றை உள்வாங்கிக் கொள்வதற்கும் சுயவிமர்சனம் செய்து நம்மை நாமே சீர்செய்து கொள்வதற்கும் அவை இடமளிக்கும்.

    ஆனால், இரண்டாம் வகையினர், கொள்கை சார்ந்து விமர்சிப்பதைவிட வெறுப்பை உமிழ்வதிலேயே குறியாய் இருப்பர். அருவருப்பான சுடுசொற்களை அள்ளி வீசுவர். உணர்ச்சிகளைத் தூண்டி, உள்ளத்தைக் கீறி நம்மை நிலைகுலைய வைப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பர்.

    நாகரிகம் என்பது அவர்கள் அறியாத ஒன்று. அண்டப் புளுகுகளே அவர்களுக்கான தொழில் முதலீடு நீதி, நேர்மை போன்ற அறம்சார் பண்புகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பிருக்காது. அவதூறு பரப்புதலே அவர்களின் சாதனைகள். அவர்கள் அமைப்புசாரா உதிரிகள் ஏதேனும் அமைப்பைச் சார்ந்திருந்தாலும் அவ்வமைப்புக்கு எவ்வகையிலும் கட்டுப்படாத தான்தோன்றிகள்.

    அவர்கள் தனிநபராயிலும் அல்லது அமைப்பைச் சார்ந்தவராயினும் அவர்களிடம் கருத்தியல் தெரிமில்லையேல்; களமாடும் திறமில்லையேல் அவர்களால் எவரோடும் தெனோடும் இணைந்தோ இணங்கியோ இயங்கிட இயலாது.

    இவர்கள் தமக்குத்தாமே தனிமைப்பட்டு தற்பெருமைப் பேசி தம்பட்டமடிப்பதில் தனிசுகம் காண்பர். 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என என ஏறுக்கு மாறாய் செயல்பட்டு இறுமாப்புக் கொள்வர். இடக்கு முடக்காய் இட்டுக்கட்டிப் பேசுவர். எடுப்பார் கைப்பிள்ளைகளாய் ஏவல்களைச் செய்வர். எளியோரை இகழ்ந்து ஏகடியும் பண்ணுவர். வலுத்தோரின் பார்வைக்கேற்ப வாலாட்டி மகிழ்வர். நிலைகெட்ட மாந்தர், நெறிகெட்ட வீணர்.

    மக்களோடு தொடர்பில்லாத இவர்களா நம்மை மதிப்பீடு செய்வது? எவர் நம்மை விமர்சிப்பவர்கள் என்பதையறிந்தே நம் எதிர்வினைகள் அமையவேண்டும்.

    கொண்ட கொள்கைக்கென தம் வாழ்வைத் தொலைத்தவர்கள், வலியைச் சுமப்பவர்கள், மக்களை நேசிக்கும் மாந்தநேயம் உள்ளவர்கள் செய்யும் விமர்சனங்களை நாம் புறம்தள்ள இயலாது. அவர்கள் கொள்கை அடிப்படையில் நம் எதிரிகள் என்னும் நிலையில், அவர்களின் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றும் பொறுப்பு நமக்கு உண்டு. அது தவிர்க்கமுடியாதது.

    ஆனால், எதிலும் உறுதியில்லா உதிரிகளா நமது எதிரிகள்? ஆதாரம் ஏதுமின்றி இவர்கள் பரப்பும் அவதூறுகளா நம்மை அசைக்கும் ஆயதங்கள்?

    காழ்ப்புணர்வால் வன்மம் சுக்குவோரைக் கண்டும் காணாமல் கடந்து செல்வோம்! காலமெல்லாம் மக்களுக்காகக் கடமையாற்றுவதில் கவனம் குவிப்போம்!

    ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்கொள்வோம்!

    ஆதாரமில்லாத அவதூறுகளைப் புறம்தள்ளுவோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்கிழக்கு வங்கக்கடலில் 23-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
    • மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் 23-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் காரைக்காலில் மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற சட்டசபை தேர்தலில் விஜயுடன் திருமாளவன் கூட்டணி வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
    • புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என திருமாவளவன் கூறியிருந்தார்.

    அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. இதனால் வருகிற சட்டசபை தேர்தலில் விஜயுடன் திருமாளவன் கூட்டணி வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

    இந்த செய்தியை திருமாவளவன் பல முறை மறுப்பு தெரிவித்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் விலகுவதாக கூறப்பட்டது. இதனால் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என திருமாவளவன் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், சென்னையில் நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருமாவளவன் பங்கேற்க மறுப்பதாக கூறப்படுகிறது.

    • 2022-ம் ஆண்டு சுவிட்சர்லாந்திற்கும், 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கும் ஊழியர்களை அழைத்து சென்றனர்.
    • ஊழியர்களை கவுரவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சமீப காலமாக நிறுவனங்களில் பல வருடங்களாக பணிபுரியும் ஊழியர்களுக்கு வெகுமதி, விலைமதிப்புள்ள பொருட்களை வழங்கும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் முந்தைய ஆண்டிற்கான நிறுவனத்தின் நிதி இலக்குகளை அடைவதில் முக்கிய பங்கு வகித்த ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 1000 ஊழியர்களை சம்பளத்துடன் கூடிய ஒரு வார பயணமாக ஸ்பெயினுக்கு அழைத்து செல்கிறது சென்னை நிறுவனம்.

    சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்ட், ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவுக்கு 1,000 ஊழியர்களை அழைத்து செல்கிறது. இது நிறுவனத்தின் "லாபம்-பங்கு பொனான்சா" திட்டத்தின் கீழ் செயல்படுத்த உள்ளது. அதாவது நிறுவனத்தின் கடந்த நிதியாண்டின் விற்பனை இலக்கை அடைவதில் முக்கிய பங்காற்றிய ஊழியர்களை கவுரவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த திட்டத்தை காசாகிராண்ட் கடந்த 2013-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, துபாய், மலேசியா மற்றும் லண்டன் உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளுக்கு ஊழியர்களை அந்நிறுவனம் அழைத்து சென்றுள்ளது. பெருந்தொற்று காலமான கொரோனா நேரத்திலும் காசாகிராண்ட் இந்த திட்டத்தை செயல்படுத்தியது. 2021-ம் ஆண்டு துபாய் மற்றும் அபுதாபிக்கும், 2022-ம் ஆண்டு சுவிட்சர்லாந்திற்கும், 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கும் ஊழியர்களை அழைத்து சென்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விலை மளமளவென சரிந்து வந்தது. கடந்த 17-ந்தேதி வரை விலை குறைந்து காணப்பட்ட நிலையில், அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 935-க்கும், ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக கடந்த 18-ந்தேதியில் இருந்து விலை உயரத் தொடங்கியது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.480-ம், அதற்கு மறுநாள் (19-ந்தேதி) சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்து இருந்தது. இதனையடுத்து நேற்றும் தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது.

    அதன்படி நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 65-க்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 115-க்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 920-க்கும் விற்பனை ஆனது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,145-க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,160-க்கும் விற்பனையாகிறது.

    இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ரஷியா-உக்ரைன் இடையே மீண்டும் போர்ப்பதற்றம் ஏற்பட்டதன் விளைவாக தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் சென்றுள்ளது. இதன் காரணமாக அதன் விலை உயரத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.



    வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    20-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920

    19-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,520

    18-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    17-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480

    16-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    20-11-2024- ஒரு கிராம் ரூ. 101

    19-11-2024- ஒரு கிராம் ரூ. 101

    18-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    17-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    16-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.
    • தென்கிழக்கு வங்கக்கடலில் 23-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது

    சென்னை:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.

    இதனால் தென்கிழக்கு வங்கக்கடலில் 23-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் 25-ந்தேதி கனமழையும், 26-ந்தேதி மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் வரும் 26-ந்தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • பொன்னேரி பகுதியில் கடவூர், அரசூர், அயநல்லூர், ஆண்டவொயல்.விடத்தண்டலம், கொள்ளுமேடு.

    சென்னை:

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வில்லிவாக்கத்தில் சிட்கோ நகர் 1 முதல் 10 பிளாக், அம்மன்குட்டி, நேரு நகர், தெற்கு & வடக்கு ஜெகநாதன் நகர், எம்.டி.எச் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, திரு நகர், அகத்தியர் நகர், பொன்விழா நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி, பாரதி நகர்.

    பொன்னேரி பகுதியில் கடவூர், அரசூர், அயநல்லூர், ஆண்டவொயல்.விடத்தண்டலம், கொள்ளுமேடு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றி சாதனை படைத்து வருவது மக்களுக்கு புரிகிறது.
    • அரசு ஆஸ்பத்திரிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை, மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா? என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆட்சி, மருத்துவ துறையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றி சாதனை படைத்து வருவது மக்களுக்கு புரிகிறது.

    சிலருக்கு புரிய வேண்டும் என்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை சாதனை பட்டியலை மீண்டும் நினைவு கூர்கிறேன். மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48, கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம், இதயம் காப்போம் திட்டம், சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம், பாதம் பாதுகாப்போம் திட்டம், தொழிலாளர் தேடி மருத்துவம், மக்களைத்தேடி ஆய்வக திட்டம், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம், கண்ணொளி காப்போம் திட்டம்.

    மேலும், மருத்துவ கட்டமைப்புகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ பணி நியமனங்கள் என்று சொன்னால் பட்டியல் நீளும். மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பாராட்டும், விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது உலக அளவில் உச்சபட்ச அங்கீகாரம் என்பதை எடப்பாடி பழனிசாமி அறிந்திருப்பாரா? அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மக்கள் இன்னல்களை பட்டியலிட்டால் ஆயிரம் பக்கம் கொண்ட தனிப் புத்தகமே போடலாம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மருத்துவத்துறை சேவை, தரம் உயர்ந்துள்ளது என்பதற்கு மத்திய அரசு வாரி வழங்கி உள்ள விருதுகளே சாட்சி. தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இதுவரை பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 614, இதில், தி.மு.க. ஆட்சியில் பொறுப்பேற்ற பிறகு பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 545.

    அதேபோல் மகப்பேறு துறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்ட சான்றிதழ். இதில், தமிழகம் இதுவரை பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 84, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 55. இவைதான், மக்கள் விரோத ஆட்சிக்கும், மக்கள் நலன் விரும்பும் ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு.

    தற்போது, அரசு ஆஸ்பத்திரிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அரசியலுக்காக ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர்காய நினைக்காதீர்கள். எதிர்க்கட்சி தலைவர் என்பதை உணராமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியை மட்டுமே மனதில் கொண்டு அறிக்கை வெளியிடுவதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி, எரிச்சல்சாமியாக மக்களுக்கு காட்சியளிக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது.
    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்தது.

    திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று ஒன்றிரண்டு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக ராமநாதபுரத்தில் முகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. பாம்பனில் அதிகபட்சமாக 28 செ.மீட்டர் மழை பெய்தது.

    இன்று காலை வரை சில இடங்களில் மழை தொடர்ந்தது. இந்த நிலையில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்குவாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×