என் மலர்
வழிபாடு
மரணம் என்றால் என்ன... மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும்?
- மரணம் என்பது மனிதனால் கற்பனை செய்ய முடியாத உண்மை.
- மரணம் பற்றி கருடபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
மரணம் என்பது மனிதனால் கற்பனை செய்ய முடியாத உண்மை. ஒரு மனிதன் எவ்வாறு இறக்கிறான். அவனது இறக்கும் போது என்ன நடக்கும் மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பது யாரும் தெரியாது. ஒரு மனிதன் இறக்கும் போது அவனது உடலுக்கும், ஆன்மாவுக்கும் இடையே போராட்டம் நடக்கும் என்று கருட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிலநேரங்களில் ஆன்மா உடலை விட்டு அவ்வளவு சுலபமாக வெளியேற் முடியாது. ஆன்மா உடலை விட்டு வெளியேறும் போது அது உடலில் ஏதோ ஒரு புள்ளியில் வெளியேறலாம். ஒட்டுமொத்தமாக உயிர் பிரிவது என்பது ஆன்மா மூலாதார சக்கரத்தில் இருந்து வெளியேறுகிறது என்றும் அதனால் தான் ஆன்மா மீண்டும் உள்ளே நுழைவதை தடுக்க இறந்தவரின் கால் கட்டை விரல்கள் கட்டப்படுகின்றன. சிலநேரங்களில் ஆன்மா கண்கள், மூக்கு, வாய் வழியாக வெளியேறுகிறது.
உடல் மிகவும் பலவீனமாக இருந்தாலும் ஒரு நபர் மரணப்படுக்கையில் இருந்தாலும், ஆன்மா உடலை விட்டு வெளியேற சிரமப்படும். அதேபோல பலரும் பல நாட்கள் படுக்கையில் கிடந்தாலும், முடிக்கப்படாத வேலைகள் எஞ்சியிருப்பதாக ஆன்மா உணரும் போது உடலை விட்டு உயிர் பிரியாது.
கருடபுராணத்தின்படி இறப்பு என்பது ஒரு உயிர் இந்த உலகில் பிறந்த நோக்கம் முடிந்த பின்னர் ஆன்மா அந்த உடலில் இருந்து வெளியேறுவதை குறிக்கிறது.
ஆன்மா பிரிந்த பிறகும் அதாவது ஒரு மனிதன் இறந்த பிறகும் பல நாட்கள் இறந்தவரை சுற்றிக் கொண்டு இருக்கும். இதனால் தான் பல நாட்கள் காரியம் செய்து, உரிய மந்திரங்கள் கூறி ஆன்மா அலையாமல் இருக்க பித்ரு லோகத்துக்கு செல்ல காரியங்கள் செய்யப்படுகிறது.