search icon
என் மலர்tooltip icon

    துபாய்

    • ஹாரி புரூக்கை பின்னுக்கு தள்ளி ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறினார்.
    • நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 867 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார் .

    துபாய்:

    டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 895 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டதால், சக வீரரான ஹாரி புரூக்கை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

    ஹாரி புரூக் 876 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 867 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார் .

    ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 5வது இடத்தில் உள்ளார். இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் 6வது இடத்திலும் உள்ளார்.

    இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் 4வது இடத்திலும் , ரிஷப் பண்ட் 9-வது இடத்திலும் , சுப்மன் கில் 16-வது இடத்திலும், விராட் கோலி 20வது இடத்திலும், ரோகித் சர்மா 30-வது வது இடத்திலும் உள்ளனர்.

    • துபாய் ‘ஷேக்‌’குகளின் பகட்டான வாழ்வும் மற்றவர்களை வாயை பிளக்கவே செய்யும்.
    • காரில் மறுபக்கமாக இருந்த 2 பேர் தங்களுடைய உடலை வெளியே நீட்டி டீ கோப்பைகளை உயர்த்தி காட்டியவாறு செல்கிறார்கள்.

    துபாய் நகரம் செல்வ செழிப்புமிக்கது. இந்த நாட்டின் ஆடம்பரம் வளர்ந்த நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கிறது. உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா இதற்கு சான்று. அங்கு வசிக்கும் துபாய் 'ஷேக்'குகளின் பகட்டான வாழ்வும் மற்றவர்களை வாயை பிளக்கவே செய்யும்.

    தற்போது துபாயில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் வெள்ளை நிற அங்கி மற்றும் தலைப்பாகை என பாரம்பரிய உடையணிந்த 2 ஆண்கள் சாலையோர டீக்கடையில் உட்கார்ந்தபடி டீ குடிக்கிறார்கள். அப்போது சொகுசு கார் ஒன்று ஒருபக்கமாக சாய்ந்தபடி அவர்கள் அருகே ஓடி சாகசத்தில் ஈடுபட்டு செல்கிறது. அப்போது அதே காரில் மறுபக்கமாக இருந்த 2 பேர் தங்களுடைய உடலை வெளியே நீட்டி டீ கோப்பைகளை உயர்த்தி காட்டியவாறு செல்கிறார்கள்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி 7½ கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், 20 லட்சம் 'லைக்'குகளை குவித்து காட்டுத்தீப்போல பரவி வருகிறது.



    • இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது.
    • இதில் ஷூட் அவுட் சுற்றில் இந்தியா வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

    மஸ்கட்:

    9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது.

    லீக் சுற்று முடிவில் சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் தென் கொரியாவை சீனா வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின. முதல் பாதியில் சீனா 1-0 என முன்னிலை பெற்றது. போட்டியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை பெற்றது.

    இதையடுத்து, ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் சீனாவை வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • முதல் அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டது.
    • இதில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா இறுதிக்கு முன்னேறியது.

    மஸ்கட்:

    9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

    லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் சீனா (4 வெற்றியுடன் 12 புள்ளி) முதலிடமும், இந்தியா (3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் ஜப்பான் (12 புள்ளி) முதலிடமும், தென் கொரியா (9 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது.

    இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    • மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி மஸ்கட்டில் நடந்துவருகிறது.
    • இதில் தாய்லாந்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    மஸ்கட்:

    9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.

    இதில் ஏ பிரிவில் இடம்பிடித்த இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை நேற்று சந்தித்தது. இதில் சிறப்பாக ஆடிய இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது

    இறுதியில், ஆட்ட நேர முடிவில் 9-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இந்திய அணியில் தீபிகா 4 கோலும், கனிகா சிவாச் 3 கோலும் அடித்தனர். இதனால் ஏ பிரிவில் இருந்து 3 வெற்றியுடன் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது .

    • இந்திய அணி 57.29 புள்ளிகளுடன் இந்திய அணி 3வது இடத்தில் உள்ளது.
    • 59.26 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2வது இடத்தில் உள்ளது.

    துபாய்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடைபெற்றது. டேஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் அடித்தார்.

    இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2வது இன்னிங்சில் 175 ரன்களில் ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது . 60.71 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. தோல்வி அடைந்த இந்திய அணி 57.29 புள்ளிகளுடன் இந்திய அணி 3வது இடத்தில் உள்ளது. 59.26 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 50.00 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

    • வழியில் அதிக நடமாட்டம் இருந்த போதிலும் யாரும் கார் மீது இருந்த தங்க நகைகளை பார்த்துவிட்டு, அதை எடுக்காமல் செல்கின்றனர்.
    • சில பயனர்கள் துபாயின் பாதுகாப்பை பாராட்டினர். சிலர் வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.

    துபாயில் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளத்தில் பிரபலமான லெய்லா அப்ஷோங்கர் என்ற இளம்பெண் நடத்திய சோதனை குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், துபாயின் பரபரப்பான சாலையில் லெய்லா அப்ஷோங்கர் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரின் முன்புற பேனட்டில் தனது தங்க நெக்லஸ் மற்றும் காதணிகளை வைக்கிறார். பின்னர் அந்த வழியில் செல்பவர்களை கவனிப்பதற்காக அருகே உள்ள நகைக்கடைக்கு சென்று மறைந்து கொள்கிறார். வழியில் அதிக நடமாட்டம் இருந்த போதிலும் யாரும் கார் மீது இருந்த தங்க நகைகளை பார்த்துவிட்டு, அதை எடுக்காமல் செல்கின்றனர்.

    சுமார் அரை மணி நேரம் சோதனைக்கு பிறகு லெய்லா அப்ஷோங்கர் கூறுகையில், அரை மணி நேரம் ஆகியும் இந்த தங்கத்தை யாரும் தொடவில்லை. துபாய் உலகிலேயே பாதுகாப்பான நாடு இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம், இது வினோதமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றதோடு விவாதத்தையும் தூண்டி உள்ளது. சில பயனர்கள் துபாயின் பாதுகாப்பை பாராட்டினர். சிலர் வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.



    • நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி அறிவித்தது.
    • இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.

    அதன்படி, நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

    சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப், தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற காரணமாக இருந்து ஆட்ட நாயகன் விருது பெற்றவர் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நாடின் டி கிளர்க், இங்கிலாந்து வீராங்கனை டேனி வியாட்-ஹாட்ஜ், வங்கதேசத்தை சேர்ந்த ஷர்மின் அக்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    • புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகியவை உள்ளன.
    • நியூசிலாந்துக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளை ஐசிசி குறைத்துள்ளது.

    துபாய்:

    ஐசிசி நடத்தும் 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இன்னும் 16 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது.

    இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடும் போட்டியிடுகின்றன.

    புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் உள்ளன.

    இதற்கிடையே, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி தாமதமாக பந்து வீசியதால் அந்த அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளைக் குறைத்துள்ளது.

    இதனால் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • தற்போது துபாயில் சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
    • கல்வித்துறை வளர்ச்சிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    துபாய்:

    இந்தியா மற்றும் அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே சிறப்பான நட்புறவு நிலவி இருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் அரசுமுறை பயணமாக நேற்று அமீரகம் வருகை புரிந்தார். அவரை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் வரவேற்றார்.

    இந்த வருகையின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

    சிம்பயோசிஸ் சர்வதேச (டீம்ட் யுனிவர்சிட்டி) என்ற தனியார், நிகர்நிலை பல்கலைக்கழகம் இந்தியாவின் புனே நகரில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் பெங்களூரு, ஐதராபாத், நாசிக், நொய்டா, நாக்பூர் போன்ற பல்வேறு நகர வளாகங்களில் அமைந்துள்ளது.

    தற்போது துபாயில் சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பல்கலைக்கழகத்தை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா மற்றும் அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மாற்று எரிசக்தி, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகம் இருந்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக அமீரகத்துக்கு வந்ததையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சாதனை முயற்சியாக கூட்டு பொருளாதார ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த புதிய பல்கலைக்கழகம் துபாயில் தொடங்கப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் பணியிடங்களுக்கு ஏற்ற வகையில் இந்தியா தயாராகி வருகிறது.

    மேலும் இருநாடுகளுக்கு இடையே மின்சார வாகனம், தூய்மை மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள், மாற்று எரிசக்தி, விண்வெளி, சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மேம்பட உதவியாக இருக்கும். கல்வித்துறை வளர்ச்சிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விழாவில் அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், பல்கலைக்கழக அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து துபாய் அல் ஜடாப் பகுதியில் அமைந்துள்ள முகம்மது பின் ராஷித் நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய மந்திரி பங்கேற்று 'ஒய் பாரத் மேட்டர்ஸ்' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

    இதையடுத்து துபாய் துறைமுக பகுதியில் அமைய இருக்கும் 'பாரத் மார்ட்' என்ற வணிக வளாகத்தின் திட்டப்பணிகளை துறைமுக அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆய்வு செய்தார்.

    • அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை பாகிஸ்தானின் நோமன் அலி வென்றார்.
    • சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் மெலி கெர் பெற்றுள்ளார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.

    அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்திருந்தது.

    ஐ.சி.சி வெளியிட்ட பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தானின் நோமன் அலி, தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா, நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இதேபோல், சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் நியூசிலாந்தின் மெலி கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், வெஸ்ட் இண்டீசின் டியான்ட்ரா டாட்டின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதை வென்றவர்கள் விவரங்களை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

    அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை பாகிஸ்தானின் நோமன் அலியும், சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் மெலி கெர்ரும் வென்றுள்ளனர்.

    • யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் சரிந்து 4-வது இடம் பிடித்துள்ளார்.
    • இந்திய வீரர் ரிஷப் பண்ட் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.

    இந்த பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திலும், நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் ஹாரி புரூக் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் சரிந்து 4-வது இடம் பிடித்துள்ளார்.

    இந்திய வீரர் ரிஷப் பண்ட் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடியதால், 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    நட்சத்திர வீரரான விராட் கோலி 22-வது இடமும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா 26-வது இடமும் பிடித்துள்ளனர்.

    ×