என் மலர்
உள்ளூர் செய்திகள்
கையில் ரத்தம் சொட்ட சொட்ட பட்டாக்கத்தி, காயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த வாலிபர்
- பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் தகராறு.
- பணியில் இருந்த நர்சுகள் அலறியடித்து ஓட்டம்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள முத்துப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கு சிவபாண்டியன் மற் றும் பிரகதீஸ்வரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் வசித்து வருகின்றனர்.
இதற்கிடையே சிவபாண்டியனுக்கும் பிரகதீஸ்வரனுக்கும் இடையே பூர்வீகச் சொத்துக்களை பிரிப்பதில் தகராறு இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகதீஸ்வரன், அண்ணன் சிவபாண்டியனை தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார்.
பலத்த காயம் அடைந்த சிவபாண்டியன், அந்த சூழ்நிலையிலும் தம்பியின் கையில் இருந்த பட்டாக்கத்தியை பறித்தார். பின்னர் பிரகதீஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதையடுத்து பலத்த காயங்களுடன் சிவபாண்டியன் நேராக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். கையில் ரத்தம் சொட்ட சொட்ட பட்டாக்கத்தி, தலை, கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் வந்தவரை பார்த்த ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த செவிலியர்கள், காவலாளி ஆகியோர் பதறியடித்துக்கொண்டு ஓடினர்.
பின்னர் இதுபற்றி தனி அறையில் இருந்த டாக்டர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர் கள் சிவபாண்டியனிடம் விசாரித்தபோது சொத்து பிரச்சினை காரணமாக தனது தம்பி தன்னை வெட் டியதாகவும் அவரிடம் இருந்து பட்டாக்கத்திய பறித்து கொண்டு சிகிச் சைக்கு மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்