என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சோனியா காந்திக்கு, விஜய்வசந்த் பிறந்தநாள் வாழ்த்து
Byமாலை மலர்9 Dec 2024 1:28 PM IST
- சோனியா காந்தியின் பிறந்த தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன்.
- தொலைநோக்கு திட்டங்கள் என்றும் சரித்திர புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும்.
கன்னியாகுமமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகம் போற்றும் மாதரசி அன்னை சோனியா காந்தியின் பிறந்த தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன்.
இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளுக்காகவும் அவர் முன்வைத்த தொலைநோக்கு திட்டங்கள் என்றும் சரித்திர புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும்.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த அவர்கள் மேற்கொண்ட கடின உழைப்புக்கு காங்கிரஸ் பேரியக்க தோழர்கள் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
X