என் மலர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் மர்மமான முறையில் இறந்த டிரைவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
- கலெக்டர் அலுவலகத்தில் மனு
- மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனை செய்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குமரி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அவர்களிடம் கலெக்டர் ஸ்ரீதர் மனுக்களை பெற்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடுக்க ப்பட்ட மனுவில், மர்மமாக இறந்த குலசேகரம் கோட்டூர் கோணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சுந்தர்ராஜ் மரணம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.
செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் மக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் மரப்பாலம் மலைப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனை செய்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.