என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
நாகர்கோவில் மாநகர தெற்கு பகுதி அ.தி.மு.க. பூத் முகவர்கள் கூட்டம்
Byமாலை மலர்27 Nov 2023 12:46 PM IST
- முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- தெற்கு பகுதி செயலாளர் வக்கீல் முருகேஷ்வரன் தலைமையில் நடந்தது.
நாகர்கோவில் :
குமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் மாநகர தெற்கு பகுதிக்குட்பட்ட பூத் கமிட்டி அமைக்கும் பூத் முகவர்கள் கூட்டம் தெற்கு பகுதி செயலாளர் வக்கீல் முருகேஷ்வரன் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மகளிர் அணி இணை செயலாளருமான ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பூத்கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினர். மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் சுகுமாரன், மாநில நிர்வாகிகள் கிருஷ்ணதாஸ், வக்கீல் சிவ செல்வராஜன், சாந்தினி பகவதியப்பன், பகுதி செயலாளர்கள் வக்கீல் ஜெயகோபால், ஜெவின் விசு, ஸ்ரீலிஜா, வட்ட செயலாளர்கள் ராஜாராம், ஜெயராஜ், முருகன், பாலசுந்தர், ராஜகோபால், சதீஷ், ராம்ஜி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story
×
X