என் மலர்
உள்ளூர் செய்திகள்
இளம்பெண் மாயம்
- திருச்சி ராம்ஜிநகரில் இளம்பெண் மாயம்
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராம்ஜிநகர்
திருச்சி அருகே உள்ள ராம்ஜிநகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்தவர் சாந்தி (வயது 50). இவரது கணவர் ராமச்சந்திரன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் தீபிகா (26) இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தீபிகா கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற தீபிகா வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரது தாய் அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பதற்றம் அடைந்து அக்கம் பக்கத்தில் தேடிய போது அவர் எங்கும் காணவில்லை. தனது மகள் காணாமல் போனது குறித்து சாந்தி ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.