என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
அமித் ஷா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்- பிரதமருக்கு விஜய் வசந்த் வலியுறுத்தல்
Byமாலை மலர்19 Dec 2024 3:00 PM IST
- அமித்ஷா மீது நடவடிக்கை கோரி பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.
- அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் சொற்கள் இந்திய அரசியலமைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது.
கன்னியாகுமரி:
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சமீபத்தில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு மீதான விவாதத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை கோரி பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.
அமித்ஷா அவர்களின் அம்பேத்கர் குறித்த சொற்கள் இந்திய அரசியலமைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவே அரசு அண்ணல் அம்பேத்கருக்கும் அவரது சேவைகளுக்கும் செலுத்தும் உண்மையான மரியாதை என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
X