என் மலர்
கதம்பம்
மாதவிடாய் பிரச்சனையா..?
- 30 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும்.
- மிக எளிய மருத்துவம் ஒன்று உள்ளது.
மாதவிடாய் பிரச்சனை என்பது இன்று பெரும்பாலான பெண்களுக்கு உள்ளது. சிலருக்கு மாதவிடாய் வராமல் தள்ளிப் போய்கொண்டே இருக்கும். வேறுசிலருக்கு மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு கூடுதல் நாள் இருக்கும்.
இப்படிப்பட்டவர்களுக்கு மிக எளிய மருத்துவம் ஒன்று உள்ளது. நல்ல பயன் தரும். அதாவது மாதவிலக்கின் போது அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் 2 ஸ்பூன் கறிவேப்பிலைச் சாறு, 2 ஸ்பூன் அருகம்புல் சாறு தினமும் 3 வேளை சாப்பிட வேண்டும். 30 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும்.
மாதவிடாய் ஆகாமல் உள்ளவர்கள் அதுபோன்று 1 ஸ்பூன் கருவேப்பிலைச் சாறு, 1 ஸ்பூன் அருகம்புல் சாறு தினமும் 3 வேளை ஒருமாதம் சாப்பிட்டுவர மாதவிடாய் சீராய் வரும்.
கர்ப்பிணிப்பெண்களுக்கு சில சமயம் ரத்தக்கசிவு ஏற்படுவதுண்டு. அதனைக் கண்டு பயப்படதேவையில்லை. அவர்கள் மேற்கண்ட கறிவேப்பிலை மற்றும் அருகம்புல் சாற்றை மூன்று மூன்று ஸ்பூன் அளவு சாப்பிட்டுவர குணமாகும்.
கர்ப்பப்பையில் ஏற்படும் நீர்க் கட்டிகள், கொழுப்புக்கட்டிகள் போன்றவற்றுக்கு அவற்றில் சேரும் கழிவுகளே காரணம். அதனை சுத்தாமாக வைத்துக்கொண்டால் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.
இதற்கு இடுப்புக்குளியல் எடுத்துக் கொள்வது நல்லது. அந்த காலத்தில் நம்முடைய பாட்டி பூட்டிகள் ஆற்றிலோ குளத்திலோ இடுப்பளவு தண்ணீரில் இருந்து கொண்டு துணிமணிகள் துவைப்பார்கள். இடுப்புபகுதி தண்ணீரில் மூழ்கி இருப்பதால் பிறப்புறுப்பு சுத்தமாகிவிடும். சூடும் தணியும். அதனால் அவர்கள் இந்த விசயத்தில் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் அந்த வாய்ப்பு இப்போதுள்ள பெண்களுக்கு கிட்டுவதில்லை.
எனவே அவர்கள் வீடுகளில் குளியல் தொட்டி வைத்து அதில் அமர்ந்து குளித்து வந்தால் கர்ப்பப்பை பிரச்சனைகளை தவிர்க்கலாம். தினமும் முடியாதவர்கள் மாதவிடாய் வருவதற்கு முன்னர் 5 நாட்களும், வந்த பிறகு 5 நாட்களும் இவ்வாறு குளித்து வருவது நல்லது.
-இயற்கை மருத்துவர் கோ.சித்தர்