search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அல்லு அர்ஜூன் கைது தேவையற்றது: காங்கிரஸ் மீது பி.அர்.எஸ். தலைவர் ராம ராவ் சாடல்
    X

    அல்லு அர்ஜூன் கைது தேவையற்றது: காங்கிரஸ் மீது பி.அர்.எஸ். தலைவர் ராம ராவ் சாடல்

    • தேசிய விருது பெற்ற நடிகரின் கைது, ஆட்சியாளர்களின் பாதுகாப்பின்மையின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.
    • இந்த விசயத்தில் உண்மையிலேயே தோல்வியடைந்தது யார்?.

    "புஷ்பா 2" படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. அப்படத்தின் கதாநாயகனான அல்லு அர்ஜூன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சிக்கடபல்லியில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்ப்பதற்காக சென்றார்.

    அப்போது அல்லு அர்ஜூனை நேரில் பார்ப்பதற்காக அதிக அளவில் கூட்டம் கூடியது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குழந்தை காயம் அடைந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை திடீரென அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரை விசாரணை நடத்துவதற்கான அழைத்து சென்றனர். பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் இந்த கைது தேவையற்றது என பி.ஆர்.எஸ். தலைவர் ராம ராவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பி.ஆர்.எஸ். செயல்தலைவர் ராம ராவ் கூறியதாவது-

    தேசிய விருது பெற்ற நடிகரின் கைது, ஆட்சியாளர்களின் பாதுகாப்பின்மையின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும். அல்லு அர்ஜுனை பொதுவான குற்றவாளியாக நடத்துவது தேவையற்றது மற்றும் பொருத்தமற்றது.

    உயிரிழந்த பெண்ணிற்கான நான் அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், இந்த விசயத்தில் உண்மையிலேயே தோல்வியடைந்தது யார்?. நேரடியாகப் பொறுப்பேற்காத ஒரு விஷயத்திற்காக அல்லு அர்ஜுனை ஒரு சாதாரண குற்றவாளியைப் போல நடத்துவது தேவையற்றது.

    இவ்வாறு ராம ராவ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×