என் மலர்
இந்தியா
மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: சச்சின் பைலட்
- மகா விகாஸ் அகாடி ஒன்றுபட்டுள்ளது.
- மகாராஷ்டிராவில் மெஜாரிட்டி பெற்ற ஓரில் நாள் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நாளை வாக்குகள் எண்ணப்படுகின்றன.
தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளன. சில கருத்துக்கணிப்பில் தொங்கு சட்டசபை அமையும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட்டில் இந்தியா கூட்டணி பெற்றி பெறும் என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சச்சின் பைலட் கூறுகையில் "மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை பொய்யாக்குவோம். மகா விகாஸ் அகாடி ஒன்றுபட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மெஜாரிட்டி பெற்ற ஓரில் நாள் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும்.
பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி கூட்டு சேர்ந்த பா.ஜ.க.வுக்கு தூக்கமின்மையை கொடுப்பார்கள்.
மகாராஷடிரா, ஜார்க்கண்ட் முடிவுகள் பா.ஜ.க.-வுக்கு கள உண்மையை வழங்கும்" என்றார்.