என் மலர்
இந்தியா
இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரசை நீக்குங்கள்: மற்ற கட்சிகளிடம் கேட்கும் ஆம் ஆத்மி
- டெல்லி அரசுக்கு எதிராக அஜய் மக்கான் வெள்ளை அறிக்கை வெளியிட்டதால் கடுங்கோபம்.
- அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தியா கூட்டணி கட்சிகளிடம் காங்கிரசை கோரிக்கை.
டெல்லி மாநிலத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகளும் தனித்து பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
நேற்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளரான அஜய் மக்கான் டெல்லி மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, மாநகராட்சி வசதிகள், காற்றுமாசு ஆகியவை தொடர்பாக ஆம் ஆதமி, பா.ஜ.க.-வுக்கு எதிராக 12 குறிப்புகள் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
இது ஆம் ஆத்மி கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அஜய் மக்கானுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை நீக்க மற்ற கட்சிகளிடம் கேட்க இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லி மாநில முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரை, டெல்லி தேர்தலில் பாஜக-வுக்கு காங்கிரஸ் உதவி செய்து கொண்டிருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.
சஞ்சய் சிங் கூறுகையில் "டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆதாயம் அடைய காங்கிரஸ் கட்சி எல்லாவைற்றையும் செய்து கொண்டிருக்கிறது. அஜய் மக்கான் பாஜக ஸ்கிரிப்டைப் படிக்கிறார். பாஜக-வின் உத்தரவின் பேரில் அறிக்கைகளை வெளியிடுகிறார், பாஜக-வின் அறிவுறுத்தலின் பேரில் ஆம் ஆத்மி தலைவர்களை குறிவைக்கிறார்.
நேற்று அனைத்து எல்லையையும் மீறிவிட்டார். எங்களது தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தேசவிரோதி என அழைத்துள்ளார். காங்கிரஸ் அல்லது அஜய் மக்கான் டெல்லியின் எந்த பா.ஜ.க தலைவரையும் தேசவிரோதி என அழைக்கவில்லை" என்றார்.