search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருமணத்தில் பட்டாசு வெடிக்க சண்டை.. பெண் வீட்டார் 7 பேர் மீது காரை ஏற்றிய கொடூரம்
    X

    திருமணத்தில் பட்டாசு வெடிக்க சண்டை.. பெண் வீட்டார் 7 பேர் மீது காரை ஏற்றிய கொடூரம்

    • மாப்பிள்ளை வீட்டார் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு மணமகள் கிராமத்துக்கு வருகை தந்தனர்.
    • காரை ஏற்றிய நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

    ராஜஸ்தானில் திருமணத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பான சண்டையில் மணமகன் வீட்டை சேர்ந்த நபர் பெண் வீட்டை சேர்ந்த 7 பேர் மீது வண்டியை ஏற்றியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் தௌசா[Dausa] வில் மணமகள் கிராமத்தில் வைத்து திருமணம் நடைபெற உள்ளதால் மாப்பிள்ளை வீட்டார் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அங்கு வருகை தந்துள்ளனர்.

    மாப்பிளை வீட்டாரோடு தனது காரில் அவர்களின் உறவினர் ஒருவரும் வந்துள்ளார். இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு வெளியே பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது அங்கு தனது காரை மாப்பிளை வீட்டாரோடு வந்தவர் பார்க்கிங் செய்ய முயன்றுள்ளார்.

    இதனால் அவருக்கும் பெண் வீட்டு ஆட்கள் 7 பேர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த நபர் கோபத்தில் தனது காரை இயங்கி முன்னாள் நின்ற அந்த 7 பேர் மீதும் ஏற்றியுள்ளார். இதனால் அந்த 7 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 7 பேரில் ஒருவரின் நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது காரை ஏற்றிய நபர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×