என் மலர்
இந்தியா
அரியானா: ஓடும் ரெயிலில் வெடித்துச் சிதறிய பட்டாசுகள்.. தீவிபத்தில் 4 பேர் படுகாயம்
- பயணிகள் ரெயில் ரோஹ்தக் அருகே வந்துகொண்டிருந்தது.
- சல்பர் பொட்டாசிய துப்பாக்கி அழுத்தம் காரணமாக வெடித்தது.
அரியானாவில் ஓடும் ரெயிலில் ஏற்பட்ட வெடிவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை அரியானாவில் ஜிந்த் பகுதியில் இருந்து டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில் ரோஹ்தக் அருகே வந்துகொண்டிருந்தபோது ஒருவரின் பையில் இருந்த வெடிபொருள் திடீரென தீப்பற்றியுள்ளது.
இதனால் ஒரு பகுதி ரெயில் பெட்டிகளில் தீ மளமளவென பரவி உள்ளது. இதில் 4 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனே ரெயில் நிறுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறை தீயை கட்டுக்குள் கொண்டுவந்தது. தீக்காயம் அடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தொடர்ந்து ரெயில் ரத்து செய்யப்பட்டு பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. பயணி ஒருவரின் பையில் இருந்த சல்பர் பொட்டாசிய துப்பாக்கி அழுத்தம் காரணமாக வெடித்ததில் பையில் இருந்த பட்டாசுகள் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.