search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா கூட்டணியில் மம்தாவுக்கு கூடிய மவுசு.. தலைமை தாங்க டபுள் ஓகே சொன்ன லாலு பிரசாத் - தேஜஸ்வி
    X

    இந்தியா கூட்டணியில் மம்தாவுக்கு கூடிய மவுசு.. தலைமை தாங்க டபுள் ஓகே சொன்ன லாலு பிரசாத் - தேஜஸ்வி

    • தலைமை தங்குவதாக கூற அவருக்கு முழு உரிமை உள்ளது என்று சரத் பவார் தெரிவித்திருந்தார்.
    • எந்த தலைவரும் கூட்டணியை வழிநடத்துவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என தேஜஸ்வி யாதவ் கூறினார்

    மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணிக்குத் தலைமையேற்க வேண்டும் என்று ஆர்ஜேடி தலைவர் லாலு யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

    கடந்த வாரம் [டிசம்பர் 6, வெள்ளிக்கிழமை] கொல்கத்தாவில் தனியார் ஊடகத்துக்கு மம்தா பேட்டியளித்தபோது, நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன், ஆனால் அவர்களால் [எதிர்க்கட்சிகள்] அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? நான் அனைத்து தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுடனும் சிறந்த உறவைப் பேணுகிறேன் என்றார்.

    ஏன் இந்தியா கூட்டணிக்குத் தலைமை ஏற்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த மம்தா, வாய்ப்பு கிடைத்தால் கொல்கத்தாவில் இருந்தே இந்தியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.

    இதனைத்தொடர்ந்து மாகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்சிபி தலைவர் சரத் பவார், மமதா திறமையான தலைவர், எதிர்க்கட்சி கூட்டணிக்குதலைமை தங்குவதாக கூற அவருக்கு முழு உரிமை உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் பீகாரில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மம்தாவை தலைமை ஏற்க வலியுறுத்தி பேசியுள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், மம்தாவை இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் அனுமதிக்க வேண்டும். ஆனால் மம்தாவுக்கு காங்கிரஸின் எதிர்ப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று பேசியிருக்கிறார்.

    முன்னதாக, லாலுவின் மகனும் மூத்த ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், மம்தா பானர்ஜி உட்பட இந்திய கூட்டணியின் எந்த மூத்த தலைவரும் கூட்டணியை வழிநடத்துவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியிருந்தார், ஆனால் ஒருமித்த கருத்து மூலம் முடிவு எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அரியானா மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் தோல்விகளாலும், கூட்டணியில் காங்கிரசின் மோசமான செயல்பட்டாலும் இந்தியா கூட்டணி மாநில கட்சிகள் ராகுல் காந்தி மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் வரிசையாக அனைவரும் மம்தாவை ஆதரிப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

    Next Story
    ×