search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி விரட்டிய போலீஸ்.. பேரணியில் பஜ்ரங் புனியா பங்கேற்பு
    X

    டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி விரட்டிய போலீஸ்.. பேரணியில் பஜ்ரங் புனியா பங்கேற்பு

    • இன்று காலை 6 மணி முதல் வருகிற 17-ந் தேதி வரை இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது
    • பாகிஸ்தான் எல்லையை போல ஷம்பு எல்லை நடத்தப்படுகிறது

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப் பிரதேச மற்றும் அரியானாவின் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    டிசம்பர் 6 ஆம் தேதி முதல் டெல்லி நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இருப்பினும் மத்திய அரசு செவி சாய்க்கும் வரை போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மீண்டும் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி நடந்த முயன்றனர்.

    விவசாயிகள் குவிவதை தடுக்கும் வகையில் அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள 12 கிராமங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் வருகிற 17-ந் தேதி வரை இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இன்று நண்பகலில் 101 விவசாயிகள் அடங்கிய குழு டெல்லி நோக்கி பேரணியை தொடங்கிய நிலையில் [ஹரியானா-பஞ்சாப்] ஷம்பு எல்லையில் அவர்கள் கூடியபோது அரியானா போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை கலைக்க முயன்றனர். இதில் 10 விவசாயிகள் வரை காயமடைந்தனர்.

    இன்றைய போராட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினரும் மல்யுத்த வீரருமான பஜ்ரங் புனியா, ஷம்பு எல்லையில் விவசாயிகளுடன் இணைந்தார்.

    இந்த தாக்குதல் குறித்து பேசிய அவர், விவசாயிகளை நாங்கள் தடுக்கவில்லை என்று ஒரு பக்கம் அரசு சொல்லிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துகிறது. பாகிஸ்தான் எல்லையை போல ஷம்பு எல்லை நடத்தப்படுகிறது. அரசியல் தலைவர்கள் டெல்லி சென்று போராட்டம் நடத்தும் போது அனுமதி வாங்கிதான் செல்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

    Next Story
    ×