search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Karnataka: Viral Video Shows Alleged Theft Of Donation At Gaali Anjaneya Swamy Temple
    X

    ஆஞ்சநேயர் கோவிலின் உண்டியல் பணத்தை திருடும் பூசாரிகள் - சிசிடிவி காட்சிகள் வைரல்

    • கோவில் பூசாரிகளும் அதிகாரிகளும் இணைந்து பணத்தை திருடுவது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
    • கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும்.

    கர்நாடகாவில் உள்ள காளி ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் எண்ணப்படும் உண்டியல் பணத்தை கோவில் பூசாரிகள் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோவில் பூசாரிகளும் அதிகாரிகளும் இணைந்து பணத்தை திருடுவது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இணையத்தில் பலரும் இந்த வீடியோ தொடர்பாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டை போல கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும் என்று பலரும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்ததாக ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலின் தலைமை அர்ச்சகர் ராமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய ராமச்சந்திரா, "கோவில் பணத்தை திருடிய 2 செயற்குழு உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 2 சமையல்காரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எதிர்காலத்தில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோவில் வளாகத்தில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் நன்கொடை எண்ணும் பணியில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

    பக்தர்களின் காணிக்கைகளை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் கோயில் நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது. ஆஞ்சநேய ஸ்வாமிக்கு காணிக்கை செலுத்தும் போது பக்தர்கள் பயப்பட தேவையில்லை. பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை மோசடி செய்யவோ, திருடவோ வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×