என் மலர்
இந்தியா
பெண்களை சைட் அடிக்க... நிதிஷ் குமாரை கொச்சைப்படுத்தி பேசிய லாலு- வலுக்கும் கண்டனங்கள்
- மகிளா சம்வாத் யாத்ராவில் நிதிஷ் குமார் கலந்த கொள்ள இருக்கிறார்.
- பெண்களை உற்றுப்பார்க்க நிதிஷ் செல்வதாக லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்திருந்தார்.
பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதஷ் குமார் டிசம்பர் 15-ந்தேதி நடைபெறும் பெண்களுடன் உரையாடும் பேரணியில் (Mahila Samwad Yatra) கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். பெண்களுடன் நேரடியாக ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்ட மாநில அரசின் முயற்சியான மகிளா சம்வாத் யாத்திரையைத் தொடங்குவதற்கான திட்டங்களை நிதிஷ் குமார் அறிவித்தார்.
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்தபோது, அவர்கள் (நிதிஷ் குமார்) பெண்களை உற்றுப்பார்க்க செல்கிறார்கள்" எனக் குறிப்பிட்டார்.
இந்த கருத்து மூலம் பெண்களை லாலு பிரசாத் யாதவ் இழிப்படுத்தியுள்ளார் என பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரவித்துள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் ரஞ்சன் "கடந்த காலங்களில் பீகார் மக்கள் தன்னை எப்படி சகித்துக்கொண்டார்கள் என்பது லாலுவுக்கு தெரியாது. இவர்கள் கேவலமான மனநிலை கொண்டவர்கள். அவர்களுடைய உண்மையான கேரக்டர் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
பீகார் துணை முதல்வர் சம்ராத் சவுத்ரி "லாலுவின் இதுபோன்ற கருத்துகள் கவலை அளிக்கிறது. லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனைக்கு செல்வது குறித்து பரிலீசனை செய்ய வெணடும். அவருடைய மனநிலை மோசமடைந்துள்ளது" என்றார்.
மற்றொரு துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா "லாலுஜி கடைசி காலக்கட்டத்தில் உள்ளார். அவர் என்ன நினைக்கிறார், என்ன சொல்கிறார் என்பது குறித்து அவருக்கு தெரியவில்லை" என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் சீனியர் தலைவர் கே.சி. தியாகி "அரசியலில் இதற்கு முன்னதாக இதுபோன்ற கருத்தை நாம் கேட்டடு இல்லை. முதலமைச்சர் பதவியில் இருந்து ஒருவர் இதுபோன்ற கருத்தை தெரிவித்து இருப்பது, கண்டனத்திற்கு தகுதியானது. பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்கு மம்தா பானர்ஜி மற்றம் சோனியா காந்தி கண்டனம் தெரிவிக்க வேண்டும். பீகார் தேர்தலில் பெண்கள் லாலுக்கு படம் கற்பிப்பார்கள்" என்றார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி "இது sexist கருத்து. லாலுவின் சொந்த குடும்ப உறுப்பினர்கள் கூட இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அவருக்கு அறிவுறுத்தலாம்" என்றார்.