என் மலர்
இந்தியா
X
ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்த மத்திய அரசு
Byமாலை மலர்4 Oct 2024 1:53 AM IST
- ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாளுக்கான ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும்.
- ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர்.
புதுடெல்லி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
மொத்தம் 11.72 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையாக ரூ.2.028.57 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸ் தொகையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் லோகோ பைலட்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X