என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி.யிடம் தோற்ற சிஎஸ்கே: டோனி செய்தது என்ன தெரியுமா?
- முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
ஐபிஎல் 2024 சீசனில் 68வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 191 ரன்கள் மட்டுமே எடுத்து
தோல்வி அடைந்தது. அத்துடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் சி.எஸ்.கே. இழந்தது.
போட்டியில் தோல்வி அடைந்ததால் எம்.எஸ்.டோனி கோபம் அடைந்ததாகவும், அதனால் போட்டி முடிந்ததும் அவர் எதிரணி வீரர்கள் யாருக்கும் கை கொடுக்காமல் சென்றார் என கூறப்பட்டது.
இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் யாரி என்ற யூடியூப் சேனலுக்கு ஹர்பஜன் சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாக சுஷாந்த் மேத்தா என்பவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
எம்.எஸ்.டோனி ஏன் ஆர்.சி.பி. வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்றார் என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், டோனி கை குலுக்காமல் சென்றது மட்டுமின்றி அங்கு டிவி ஒன்றையும் உடைத்துள்ளார். அங்கிருந்த எதையோ ஒன்றை பலமாக குத்தியுள்ளார். அந்த ஷாட்டை அடிக்காததால் அவர் மிகவும் கோபமாக இருந்ததாக தெரிவித்தார் என பதிவிட்டுள்ளார்.