என் மலர்
தமிழ்நாடு
ரெயில் படிக்கட்டில் பயணித்து நொடியில் உயிரைவிட்ட இளைஞர்- அதிர வைக்கும் சிசிடிவி காட்சி
- வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்துள்ளார்.
- நடைமேடையில் விழுந்த வேகத்தில் சுமார் 150 மீட்டர் இழுத்து செல்லப்பட்டார்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில், படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்து ரெயிலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் (24) என்பவர், வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்துள்ளார்.
அப்போது, சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் வேகமாக சென்றுக்கொண்டிருந்தபோது, பாலமுருகன் தவறி விழுந்துள்ளார்.
நடைமேடையில் விழுந்த வேகத்தில் சுமார் 150 மீட்டர் இழுத்து செல்லப்பட்ட பாலமுருகன் இறுதியில் ரெயிலுக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் அதிரவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ரெயில் படிகட்டில் பயணித்து நொடியில் உயிரைவிட்ட இளைஞர்- அதிர வைக்கும் சிசிடிவி காட்சி#chennai #train #Accident #saidapet #news #mmnews #maalaimalar pic.twitter.com/oqzmVBNxDp
— Maalai Malar தமிழ் (@maalaimalar) October 3, 2024