என் மலர்
தமிழ்நாடு
X
10 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள கிராமம்- குடிநீர் இன்றி, தூக்கம் தொலைத்து நிற்பதாக மக்கள் வேதனை
Byமாலை மலர்6 Sept 2024 7:34 AM IST
- மின்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் சீர் முடியாத நிலையில் உள்ளது.
- மின் மோட்டார்களை இயக்க முடியாததால் நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் தண்ணீர் இன்றி காய்வதாக விவசாயிகளும் வேதனையுடன் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், திருப்புவனம் அருகே உள்ள தட்டான் குளம் கிராமத்தில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் 10 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளனர்.
பலத்த காற்று மழையால் ஆல மர கிளை விழுந்து மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் 2 மின்கம்பங்கள் சேதம் அடைந்தது. முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றும் செலவை யார் ஏற்பது? என மின்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் சீர் முடியாத நிலையில் உள்ளது.
இதனால், 10 நாட்களாக மின்சாரம் இல்லாததால் குடிநீர் இன்றி, தூக்கம் தொலைத்து நிற்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், மின் மோட்டார்களை இயக்க முடியாததால் நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் தண்ணீர் இன்றி காய்வதாக விவசாயிகளும் வேதனையுடன் தெரிவித்தனர்.
Next Story
×
X