என் மலர்
தமிழ்நாடு
தவழ்ந்து வந்த முதியவர்- கண்டு கொள்ளாத மருத்துவ ஊழியர்கள்
- மீண்டும் தவறுகள் நடக்காதபடி கவனித்து கொள்வதாக மருத்துவர்கள் உறுதி அளித்தார்கள்.
- லால்குடி சென்ற அமைச்சர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை:
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுற்றுப்பயணம் செல்லும் பகுதிகளில் முன் அறிவிப்பு இல்லாமல் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பார்ப்பது வழக்கம்.
தற்போது திருச்சி பகுதியில் இருக்கும் அவர் இன்று அதிகாலையில் நடைபயிற்சியை முடித்து விட்டு ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென்று சென்றார்.
அப்போது காலில் அடிபட்டிருந்த முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் தவழ்ந்து வந்ததை பார்த்தார். அவரை சக்கர நாற்காலியில் அழைத்து செல்ல ஆஸ்பத்திரி ஊழியர்கள் யாரும் முன்வரவில்லை. அந்த நோயாளியிடம் அமைச்சர் விசாரித்து விட்டு சக்கர நாற்காலி எடுத்து வரும்படி கூறினார்.
அமைச்சர் வந்திருப்பதை அறிந்ததும் ஓடி வந்தார்கள் ஊழியர்கள். பின்னர் அவரை சக்கர நாற்காலியில் ஏற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனுப்பி வைத்தார். அவருக்கு செலவுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டி மற்றும் நோயாளிகள் சிலரது உறவினர்களிடம் ஆஸ்பத்திரியில் நன்றாக கவனிக்கிறார்களா? ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்று கேட்டார்.
அதன் பிறகு ஆஸ்பத்திரிக்குள் சென்றவர் மருத்துவர்களிடம் நடக்க இயலாதவர் தவழ்ந்து வந்ததை சுட்டிக்காட்டி இதை =யெல்லாம் கவனிக்க வேண்டாமா? என்று கடிந்து கொண்டார்.
மீண்டும் தவறுகள் நடக்காதபடி கவனித்து கொள்வதாக மருத்துவர்கள் உறுதி அளித்தார்கள். பின்னர் லால்குடி சென்ற அமைச்சர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொண்டார்.