search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு- பிப்ரவரியில் இடைத்தேர்தல்?
    X

    ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு- பிப்ரவரியில் இடைத்தேர்தல்?

    • ஒரே ஆட்சியில் மூன்றாவது முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்க போகின்றனர்.
    • ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 14-ந்தேதி காலமானார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவித்து தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லிக்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலோடு ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரே ஆட்சியில் மூன்றாவது முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்க போகின்றனர்.

    முன்னதாக, 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகனான ஈவேரா திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். இருப்பினும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதன் பின் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    சமீபத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 14-ந்தேதி காலமானார்.

    Next Story
    ×