என் மலர்
உலகம்
X
மாயமான ரஷியா ஹெலிகாப்டர்: விபத்தில் சிக்கியதில் 22 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்1 Sept 2024 7:47 PM IST
- மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தினர்.
- மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனத் தகவல்.
ரஷியாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா கிராமத்தில் உள்ள தளத்திற்கு நேற்று புறப்பட்டது. ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிட நேரங்களில் தனது தொடர்பை துண்டித்தது.
இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேர் பயணித்தனர்.
மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், காணாமல் போன ரஷிய ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த 22 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டறியப்பட்டன. மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Next Story
×
X