search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேலை விட ஈரான் பயப்படும் இன்னொரு விஷயம்.. டிரம்பும் நானும் சேர்ந்து.. நேதன்யாகு திடீர் வீடியோ
    X

    இஸ்ரேலை விட ஈரான் பயப்படும் இன்னொரு விஷயம்.. டிரம்பும் நானும் சேர்ந்து.. நேதன்யாகு திடீர் வீடியோ

    • இஸ்ரேல் முதலில் ஈரான் அணு நிலையங்கள் மீதுதான் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பிரசுரத்தில் கூறினார்.
    • அயத்துல்லா கமேனிக்கு இஸ்ரேலை விட பயம் தரும் விஷயம் ஒன்று இருக்கிறது.

    பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் இஸ்ரேல் மத்திய கிழக்கில் முக்கிய நாடாக விளங்கும் ஈரானையும் குறிவைத்து வருகிறது. காசா போருக்கு எதிராக இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பைட்டர் ஜெட்கள் மூலம் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்கியது. ஈரான் அணுசக்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது எந்த நேரமும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அபாய சூழல் நிலவி வருகிறது. ஆனால் இஸ்ரேலுக்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு கடிவாளம் போட்ட நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் தனது பிரசாரத்தின்போது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் ஒரு கருத்தை தெரிவித்தார்.

    அதாவது, இஸ்ரேல் முதலில் ஈரான் அணு நிலையங்கள் மீதுதான் தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஈரான் மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அவர், [ஈரான் மதத்தலைவர்] அயத்துல்லா கமேனிக்கு இஸ்ரேலை விட பயம் தரும் விஷயம் ஒன்று இருக்கிறது.

    அது நீங்கள் தான்.. ஈரான் மக்கள். அதனால்தான் அவர்கள் உங்கள் நம்பிக்கைகளை நசுக்குவதற்கும் உங்கள் கனவுகளைத் தடுக்கவும் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறார்கள்.

    நம்பிக்கையை இழக்காதீர்கள், சுதந்திர உலகில் இஸ்ரேலும் மற்றவர்களும் உங்களுடன் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார். மேலும் இஸ்ரேலை தாக்க நினைத்தால் ஈரானின் மொத்த பொருளாதாரமும் முடங்கும் என்றும் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்கிடையே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் கடந்த சில நாள்களில்மூன்று பேசியிருக்கிறேன். இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டணியை இன்னும் வலிமையாக இணைப்பது குறித்துப் பேசினோம்" என்று நேதன்யாகு பேசியதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் டிரம்ப்பும் நானும் இணைந்து ஈரான் விவகாரத்தை கவனித்து வருகிறோம் என்றும் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×