search icon
என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • மத்திய காசாவின் டெய்ர் எர்-பலா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 30 பேர் பலியாகினர்.

    காசா:

    இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் கடந்த 9 மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து நடந்துவருகிறது. இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மத்திய காசாவின் டெய்ர் எர்-பலா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 30 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல் அரங்கேறியது.

    அமெரிக்காவுடன் கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்டஇஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த அமைதிப் பேச்சுவார்தை தோல்வி முகத்தில் உள்ளன. இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.
    • கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரில் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.

    இந்த நிலையில் காசாவில் இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    இதையடுத்து காசாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட பாதை வழியாக உடனே வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    போர் நடவடிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் தற்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இஸ்ரேல் ராணுவம் எச்ரிக்கையால் அவர்கள் பீதி அடைந்துள்ளனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மிகவும் கவலை அளிப்பதாக ஐ.நா. தெரிவித்து இருக்கிறது.

    • இஸ்ரேல் வான்தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் உயர் தலைவர் கொல்லப்பட்டார்.
    • பதிலடியாக இதுவரை இல்லாத அளவிற்கு ஏவகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது ஹிஸ்புல்லா.

    இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் மூன்று பிராந்தியங்களில் ஒன்றிற்கு தலைமை ஏற்ற முகமது நாமேஹ் நாசர் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் உள்ள பல ராணுவ தளங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது.

    இந்த தாக்குதல் இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத அளிவிற்கு நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கருதப்படுகிறது. இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்த ஏராளமான ஏவுகணைகள் மற்றும் வான்வழி இலக்குகளை இடைமறிக்கப்பட்டது. இது தொடர்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதா? என்பது குறத்து உடனடி தகவல் ஏதும் இல்ல என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    கடுமையான வெடிபொருட்கள் நிரப்பிய கட்யுஷா ராக்கெட்டுகள், ஃபலாக் ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன் பல்வேறு தளங்களை குறிவைத்து வெடிக்கும் டிரோன்களையும் செலுத்தியுள்ளது. மேலும் வியாக்கிழமையும் ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    லெபனான் ஹிஸ்புல்லா- இஸ்ரேல் ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இரு பக்க எல்லைகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். வடக்கு இஸ்ரேலில் 16 வீரர்கள், 11 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். லெபனானில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகமானோர் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள். டஜன் கணக்கில் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

    • நேதன்யாகு போரை சரிவர கையாளவில்லை என்று மக்கள் கொதிப்பில் உள்ளதாக தெரிகிறது.
    • நேதன்யாகு இல்லத்தின் அருகே திரண்ட போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டத்தொடங்கினர்.

    பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரின் விளைவுகள் விபரீதமானதாக மாறி வருகிறது. இஸ்ரேலிலும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போரை சரிவர கையாளவில்லை என்று மக்கள் கொதிப்பில் உள்ளதாக தெரிகிறது. அவ்வப்போது அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கொந்தளிப்பான சூழ்நிலையை கட்டுப்படுத்த கடுமையான நடவைடிகைகளை நேதன்யாகு மேற்கொண்டு வருகிறார்.

     

    அந்த வகையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் அல் - குத்ஸில் திரண்ட சுமார் 1,30,000 போராட்டக்காரர்கள் இஸ்ரேலில் புதிதாக தேர்தல் நடத்த வலியுறுத்தியும், காசாவில் பிணைகக் கைதிகளாக மீதமுள்ள 100 இஸ்ரேலியர்களை விரைவில் மீட்க கோரியும் போராட்டம் நடத்தினர்.

     

    இந்த போராட்டத்தை  ஒடுக்க இஸ்ரேல் போலீசார் கடுமையான முறைகளை பிரயோகித்தது  சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் பாரிஸ் சதுக்கத்தில் உள்ள பிரதமர்நேதன்யாகு இல்லத்தின் அருகே திரண்ட போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டத்தொடங்கினர்.

     

    அப்போது போலீஸ் ஒருவர் போராட்டக்காரிடம் மிகவும் கீழ்த்தரமான வகையில், ' நான் உன் தாயை பலாத்காரம் செய்வேன்' என்று மிரட்டியுள்ளார். போராட்டக்காரர்கள் சிலரை போலீஸ் கும்பல் ஆக்ரோஷமாக கையாளும் சமபாவங்கள்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று போராட்டம் நடந்த இடங்களிலெல்லாம் போலீசின் கடுமையான அணுகுமுறையை இஸ்ரேல் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளது. 

    • இஸ்ரேல் லெபனானுக்கு ராணுவத்தை அனுப்பும் பட்சத்தில் இஸ்ரேல் மீது தீவைரமான போரை முன்னெடுப்போம் என்று நேற்று நடந்த ஐ.நா கவுன்சில் கூட்டத்தில் ஈரான் எச்சரித்துள்ளது.
    • ஹிஸ்புல்லா பிரச்னையை தீர்க்க வழி தேடி வருவதாகவும் அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இஸ்ரேல் - பாலஸ்தீன போர் 

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 86,858 படுகாயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இஸ்ரேல் நடத்திய டதாக்குதலில் காசாவில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

     

    ஈரான் - ஹிபுல்லா - இஸ்ரேல் விவகாரம் 

    பலஸ்தீனத்துக்கு ஆதரவாக உலக நாடுகள் பல குரல் கொடுத்து வருகிறது. குறிப்பாக ஈரான் இந்த விவகாரதத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. ஈரானில் பிரதானமாக இயங்கி வரும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. பாலஸ்தீன் லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி நடத்தி வருகிறது.

    ஈரான் எச்சரிக்கை 

    இதனால் ஹிஸ்புல்லா எல்லையை விட்டு நீங்க வில்லையென்றால் லெபனானில் ராணுவ நடவைடிகைகளை மேற்கொண்டு ஹெஸ்புல்லாவை துடைதெரிய இஸ்ரேல் நேரம் பார்த்து காத்திருக்கிறது. இந்த நிலையில்தான் இஸ்ரேல் லெபனானுக்கு ராணுவத்தை அனுப்பும் பட்சத்தில் இஸ்ரேல் மீது தீவைரமான போரை முன்னெடுப்போம் என்று நேற்று நடந்த ஐ.நா கவுன்சில் கூட்டத்தில் ஈரான் எச்சரித்துள்ளது.

     

    இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கருத்து 

    இதற்கு பதிலடி கொடுத்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், இந்த ஒரு கருத்தே ஈரான் அரசை முழுவதுமாக அழித்தொழிக்க போதுமான காரணம் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோகாவ் காலண்ட் சுமூகமான முறையில் ஈரான் - ஹிஸ்புல்லா பிரச்னையை தீர்க்க வழி தேடி வருவதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஈரான் அதிபர் தேர்தல் 

    இதற்கிடையில் முன்னாள் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஷி (Ebrahim Raisi) ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தநிலையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்த நிலையில் ஈரான் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மிகக் குறைவாக 39.93 சதவீத வாக்குகளே பதிவாகின.

     

    மேலும் நேற்று வெளியான இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி யாருக்கும் பெரும்பாண்மை கிடைக்காததால் வரும் ஜூலை 5 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக மீண்டும தேர்தல் நடத்தப்படும் என்று அறிகிக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு நீதித் துறை தலைவர் இப்ராஹிம் ரய்லி உட்பட அந்நாட்டின் அணுசக்தி துறையின் முன்னாள் ஆலோசகர் சயீத் ஜலீல், முன்னாள் தளபதி மோசின் ரேசாய், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ரசா ஜகானி, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் ஹுசைன் காஜிஸ்தி, அந்நாட்டு மத்திய வங்கியின் தலைவர் அப்துல் நசீர் ஹிம்மதி, மிதவாத வேட்பாளர் மசூத் பெசெஷ்கியனி ஆகியோர் போட்டியிட்டனர்.

     

    • தூதரகத்துக்கு வில்-அம்புடன் நபர் ஒருவர் வந்தார்.
    • நபர் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    செர்பியா நாட்டு தலைநகர் பெல்கிரேடில் இஸ்ரேல் தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தூதரகத்துக்கு வில்-அம்புடன் நபர் ஒருவர் வந்தார்.

    அவர் திடீரென்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றார். அங்கிருந்த போலீஸ்காரர் மீது அம்பை எய்தாா். இதில் கழுத்தில் அம்பு பாய்ந்து காவலா் காயமடைந்தாா். உடனே போலீஸ்காரர் தற்காப்புக்காக அம்பு வைத்திருந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். இதில் அந்த நபா் உயிரிழந்தாா்.

    தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரரை மருத்துவ மனையில் சேர்த்தனர். அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலுடன் சொ்பியா நட்புறவை பேணி வரும் சூழலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக் கூறும்போது, `இது கொடூரமான பயங்கரவாத செயல். இது எந்த மதத்திற்கும் எந்த தேசத்திற்கும் காரணமாக இருக்க முடியாது. இது ஒரு தனிநபரின் குற்றம்' என்றார்.

    இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, `செர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே பயங்கரவாதத் தாக்குதலுக்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. தூதரகம் மூடப்பட்டுள்ளது மற்றும் தூதரகத்தின் எந்த ஊழியரும் காயமடையவில்லை. தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.

    • காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி.
    • புலனாய்வு அடிப்படையில் குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    காசா முனையில் நடத்திய தாக்குதலில் ஹமாசின் சீனியர் ஆயுத நிபுணர் கொல்லப்பட்டார். ரஃபா மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஹமாசின் ஆயுத தயாரிப்பு தலைமையகத்தின் திட்டம் மற்றும் மேம்பாட்டு பொறுப்பாளர் முகமது சாலா கொல்லப்பட்டார் எனத் தெரிவித்துள்ளது. புலனாய்வு அடிப்படையில் ரபா பகுதி மீதான இலக்கு தாக்குதல் (ஒரு இடத்தை குறிவைத்து தாக்குதல்) தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 37 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்தனர்.

    • காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • தாக்குதல் தொடர்பான முக்கிய முடிவுகள் போர் கேபினட்டில் எடுக்கப்படும்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. காசா மீதான தாக்குதல் இஸ்ரேலின் முழு ஒத்துழைப்பு மற்றும் சம்மதத்துடன் நடைபெற வேண்டும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு விரும்பினார். இதனால் போர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க அனைத்து கட்சிகள் அடங்கிய ஆறு பேர் கொண்ட போர் கேபினட் அமைக்கப்பட்டது. இதற்கு நேதன்யா தலைமை தாங்கினார்.

    இந்த நிலையில் போர் கேபினட்டை கலைப்பதாக நேதன்யாகு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜெனரல் பென்னி கான்ட்ஸ் வெளியேறிய நிலையில் நேதன்யாகு இந்த முடிவை எடுத்துள்ளார்.

    உள்ள தேசியவாத மற்றும் மதம் சார்ந்த கூட்டணி கட்சிகள் தேசிய பாதுகாப்புதுறை மந்திரி இடாமர் பென்-கிர், நிதி மந்திரி பெசாலால் ஸ்மொட்ரிச் ஆகியோரை போர் கேபினட்டில் சேர்க்க வேண்டும் வலியுறுத்தினர்.

    காசா மீதான போருக்கு பிந்தைய திட்டம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கும், போர் கேபினட்டில் அதிகாரிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    • காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது தாக்குதல்.
    • ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களை வான் தாக்குதல் மூலம் இஸ்ரேல் வீழ்த்தியுள்ளது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவடையாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது இஸ்ரேல் ராணுவம் ரபா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் போர் நிறுத்தம் ஏற்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இஸ்ரேல் மூன்று போர் நிறுத்த பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இதற்கு ஹமாஸ் அமைப்பினர் பதில் அளிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக முதல் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. மேலும், சில திருத்தங்களை மேற்கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதனால் போர் நிறுத்தத்திற்கு சாதகமான நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் லெபனான் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், இன்று வடக்கு இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இருந்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது நடத்தும் மிகப்பெரிய தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது. ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

    காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளையில் லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் முக்கியமான ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    55 வயதான தலேப் சமி அப்துல்லா (ஹிஸ்வுல்லாவின் மூத்த கமாண்டர்) போர் தொடங்கியபோது கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள். 70 பேர் அப்பாவி பொதுமக்கள் ஆவார்கள்.

    • 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
    • பிணைக் கைதிகளை இஸ்ரேல் சிறப்புப்படையினர் மீட்டனர்.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

    இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மேலும் 250-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர் களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்றனர்.

    இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசாவில் 36 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட போர் நிறுத்தத் தின்போது 100-க்கும் மேற்பட்ட பிணைக் கைதி களை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.

    இன்னும் அவர்களிடம் 120 பிணைக்கைதிகள் உள்ளனர். அவர்களை மீட்க இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்ட பிணைக்கைதி களில் ஒரு பெண் உள்பட 4 பேரை இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நேற்று மீட்டது. காசா முனையில் உள்ள நுசைரத் முகாமில் கடத்தி வைக்கப்பட்டிருந்த பிணைக் கைதிகளை இஸ்ரேல் சிறப்புப்படையினர் மீட்டனர்.

    இந்த மீட்பு நடவடிக்கையின் போது இஸ்ரேலிய சிறப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மீட்கப்பட்ட பிணைக்கைதிகள் நோவா அர்காமனி, மெயிர்ஜன், ஆண்ட்ரே, ஷால்மி சிவ் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இவர்கள் அனைவரும் இசை விழாவில் இருந்து கடத்தி செல்லப்பட்டவர்கள். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 4 பேரும் நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பிணைக் கைதிகள் மீட்பு நடவடிக்கையின்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 210 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 210 பேர் பலியானார்கள். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஹமாசின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • காசா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மாதமாக போர் நடந்து வருகிறது. ரபாவிலும் இருதரப்புக்கும் இடையே மோதல் நடக்கிறது.

    ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய காசாவில் உள்ள நுசி ராட்டில் பள்ளிக்கூடத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தரப்பும் உறுதிசெய்துள்ளது.

    இதுதொடர்பாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்திவிட்டு அதை சமாளிக்கப் பொய்க் கதைகளை இஸ்ரேல் சொல்லி வருகிறது என தெரிவித்தார்.

    • ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம்.
    • இஸ்ரேல் ராணுவத் தளம் மீது ராக்கெட்டுகள் வீசி தாக்குதல்.

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேல் போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் உள்ளது.

    அந்த இயக்கத்தினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஆளில்லா விமானத்தை(டிரோன்) சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.

    மேலும் எல்லை நகரமான கிரியாத் ஷ்மோனாவில் உள்ள இஸ்ரேல் ராணுவத் தளம் மீது ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் தெரிவித்தது.

    ×