search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    காசா முனையில் இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. குழந்தைகள் உள்பட 33 பேர் உயிரிழப்பு
    X

    காசா முனையில் இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. குழந்தைகள் உள்பட 33 பேர் உயிரிழப்பு

    • பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
    • போரை முடிவுக்கு கொண்டுவர நம்பிக்கை தெரிவித்துள்ளன.

    காசா முனையில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டில் நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுதகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டிய நிலையிலும், இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. தற்போதைய அமெரிக்க அரசு மற்றும் புதிதாக ஆட்சி அமைக்க இருக்கும் அமெரிக்க நிர்வாகங்கள் அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய அமெரிக்க அதிபர் பதவியேற்கும் முன் போரை முடிவுக்கு கொண்டுவர நம்பிக்கை தெரிவித்துள்ளன.

    எனினும், இது தொடர்பான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன. சமீபத்திய தாக்குதலை மருத்துவமனையின் அருகாமையில் இருந்த ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்க முயற்சிப்பதாக இராணுவம் கூறுகிறது. ஹமாஸ் அமைப்பினர் மக்கள் மத்தியில் மறைந்திருப்பதாக குற்றம் சாட்டுகிறது. இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

    Next Story
    ×