search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷியாவில் 100 குடியேற்ற பகுதிகளை கைப்பற்றிய உக்ரைன் ராணுவம்.. 600 ரஷிய வீரர்கள் அதிரடி கைது
    X

    ரஷியாவில் 100 குடியேற்ற பகுதிகளை கைப்பற்றிய உக்ரைன் ராணுவம்.. 600 ரஷிய வீரர்கள் அதிரடி கைது

    • உக்ரைன் படைகளை எதிர்கொள்ள தற்போது 30,000 ரஷிய ராணுவ வீரர்கள் கூர்க்ஸ் பிராந்தியத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • இரு நாட்டு எல்லைக்குள் இடையில் ஒரு பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்க இந்த தாக்குதல் என்று ஜெலன்ஸ்கி கூறினார்

    உக்ரைன் ரஷியா போர் தீவிரமாகி வரும் நிலையில் ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் மக்கள் வாழும் 100 குடியேற்ற பகுதிகளை [settlements] கைப்பற்றியுள்ளதாகவும் 600 ரஷிய வீரர்களைக் கைது செய்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2022 இல் தொடங்கி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில் சமீப காலமாக உக்ரைன் ரஷியா மீது பெரிய அளவிலான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.

    கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதலைமுறையாக ரஷியாவுக்குள் நுழைந்த உக்ரைன் படைகள் கூர்க்ஸ் பிராந்தியத்தில் சரமாரியாகத் தாக்குதல் நடத்தின. இதனால் அங்குள்ள மக்கள் வெளியேற்ட்டப்பட்டு, ரஷிய ராணுவம் குவிக்கப்பட்டது . இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ரஷிய மண்ணில் வெளிநாட்டுப் படைகள் முன்னெடுத்த மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

    இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, எல்லையிலிருந்து ரஷியா நடத்தும் தாக்குதலை நிறுத்துவதற்காகத்தான் இந்த முயற்சி. இரு நாட்டு எல்லைக்குள் இடையில் ஒரு பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்குவதற்குத்தான் இந்த தாக்குதல். மற்ற எந்த நோக்கமும் கிடையாது என்று தெரிவித்தார். ஆனால் உக்ரைன் படைகள் ரஷிய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அதிபர் புதின் குற்றம்சாட்டியிருந்தார்.

    உக்ரைன் படைகளை எதிர்கொள்ள தற்போது 30,000 ரஷிய ராணுவ வீரர்கள் கூர்க்ஸ் பிராந்தியத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைன் படைகளைச் சுற்றிவளைத்துப் பாதுகாப்பு அதற்கு மேல் அவர்கள் முன்னேற முடியாத படி பாதுகாப்பு வளையத்தை உருவாக்க முயன்று வருகின்றனர். இந்த நிலையில்தான் உக்ரைன் தரைப்படை தளபதி சிர்ஸ்கி [Syrsky] கூர்க்ஸ் பிராந்தியத்தில் இறுதிவரை நடத்திய தாக்குதல்களில் 600 ரஷிய படை வீரர்களைக் கைது செய்துள்ளோம் என்றும் 100 குடியிருப்பு பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் நேற்று முன் தினம் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நூற்றுக்கணக்கான மிசைல்கள் மற்றும் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் மின்சார சேவை கட்டமைப்பை அழிக்க ரஷியா குறி வைத்துவருகிறது. மேலும் உக்ரைன் படைகளும் ரஷ்யாவின் சராதோவ் பகுதியில் டிரோன்களை ஏவித் தாக்குதல் தாக்குதல் நடத்தின

    Next Story
    ×