என் மலர்
உலகம்
அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு
- ரஷிய அதிபர் புதினை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார்.
- அப்போது பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார்.
மாஸ்கோ:
உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி முயற்சி எடுத்து, உக்ரைன் அரசும் அதற்கு ஒத்துழைத்தால் பேச்சு வார்த்தையில் பங்கேற்க ரஷியாவும் தயங்காது என அதிபர் புதின் சமீபத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் ரஷியா சென்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார்.
இதுதொடர்பாக, அதிபர் புதின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா-ரஷியா இடையே இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், அக்டோபர் 22 முதல் 24 வரை நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரவேண்டும் என பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷிய பயணத்தின்போது உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, அதிபர் புதினுடன் ஆலோசிப்பார் என தெரிகிறது.
பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.