என் மலர்
தென் ஆப்பிரிக்கா
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 329 ரன்கள் குவித்தது.
கேப் டவுன்:
பாகிஸ்தான் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவரில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது ரிஸ்வான் 80 ரன்னும், பாபர் அசாம் 73 ரன்னும், கம்ரான் குலாம் 63 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மாகாபா 4 விக்கெட்டும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணியின் ஹென்ரிச் கிளாசன் மட்டும் அதிரடியாக ஆடினார். அவர் 74 பந்தில் 4 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 97 ரன்கள் குவித்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 43.1 ஓவரில் 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியுள்ளது.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹின் அப்ரிடி 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- சிடோ புயல் காரணமாக மொசாம்பிக் நாட்டில் மட்டும் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
- நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆப்பிரிக்கா நாட்டை புரட்டிப்போட்ட சிடோ புயலில் தாக்கத்தால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'சிடோ' என பெயரிடப்பட்டது.
கடந்த சில நாட்களாக கிழக்கு ஆப்பிரிக்கா அருகே கடலில் நிலை கொண்டுள்ள இந்த புயலின் தாக்கத்தால், மலாவியில் கனமழை கொட்டி வருகிறது.
இதனால் அங்கு ஊருக்குள் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல், அண்டை நாடான மொசாம்பிக்கையும் 'சிடோ' புயல் தாக்கியது. குறிப்பாக நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால், அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
புயல் காரணமாக மொசாம்பிக் நாட்டில் மட்டும் 34 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
- முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
- மழை காரணமாக 3வது டி20 போட்டி ரத்துசெய்யப்படுகிறது என நடுவர்கள் அறிவித்தனர்.
ஜோகன்னஸ்பர்க்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்கில் நேற்று நடைபெற இருந்தது. அப்பகுதியில்
மழை தொடர்ந்து பெய்தது. இதனால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனாலும் மழை நிற்காமல் பெய்தது. இதையடுத்து, மழை காரணமாக போட்டி ரத்துசெய்யப்படுகிறது என நடுவர்கள் அறிவித்தனர் .
போட்டி கைவிடப்பட்டாலும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 206 ரன்களை எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 210 ரன்களை எடுத்து வென்றது.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி செஞ்சுரியனில் இன்று நடைபெறறது.
டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. சயீம் அயூப் 98 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பாபர் அசாம் 31 ரன்னிலும், இர்பான் கான் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டன் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரீசா ஹென்ரிக்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசி சதம் கடந்து அசத்தினார். அவருக்கு வான் டெர் டுசன் நன்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 157 ரன்கள் சேர்த்த நிலையில் ஹென்ரிக்ஸ் 117 ரன்னில் வெளியேறினார். 63 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 117 ரன்களை எடுத்தார். வான் டெர் டுசன் அரை சதம் கடந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஓவரில் 3 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 206 ரன்களைக் குவித்தது.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி செஞ்சுரியனில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமாக முகமது ரிஸ்வான் 11 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய பாபர் அசாம் சயீம் அயூபுடன் ஜோடி சேர்ந்தார். 2வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்த நிலையில் பாபர் அசாம் 31 ரன்னில் அவுட்டானார். இர்பான் கான் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய சயீம் அயூப் அரை சதம் கடந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 206 குவித்தது. சயீம் அயூப் 98 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.
- கொடிய விஷத்தன்மை கொண்ட இந்த பாம்புகள் தென் ஆப்ரிக்கா வனப்பகுதிகளில் அதிகமாக காணப்படும்.
- வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அதிலும் நாகப்பாம்புகள் படமெடுத்து ஆடுவதை பார்க்கும் போது மிகவும் பயமாக இருக்கும். இந்நிலையில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டெல்லென்போஷ் நகரில் வசிக்கும் ஒருவரது வீட்டில் படுக்கை அறையில் இருந்து சத்தம் வந்தது. இதனால் குடும்பத்தினர் படுக்கை அறை முழுவதும் சோதனை நடத்திய போது, அங்கு தலையணைக்குள் இருந்து சத்தம் அதிகமாக கேட்டது. அப்போது தலையணைக்கு அடியில் விஷப்பாம்பு பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வன ஆர்வலருக்கு தகவல் தெரிவித்ததும் அவர் அங்கு விரைந்து வந்தார். பின்னர் தலையணையை தூக்கி அதன் அடியில் மறைந்திருந்த விஷ நாகப்பாம்பை திறமையாக அகற்றினார். அந்த விஷப்பாம்பு அடர்கருப்பு மற்றும் வெளிர் பழுப்பு, மஞ்சள் கலந்து காணப்பட்டது. கொடிய விஷத்தன்மை கொண்ட இந்த பாம்புகள் தென் ஆப்ரிக்கா வனப்பகுதிகளில் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் குடியிருப்புகளுக்குள் புகுந்த அந்த பாம்பை வன ஆர்வலர் அப்புறப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்தது.
- இலங்கையின் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
கெபேஹா:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் நாடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன் சிறப்பாக ஆடி சதமடித்தனர். அரை சதமடித்த பவுமா 78 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இலங்கை சார்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டும், அசிதா பெர்னண்டோ 3, விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய இலங்கை இரண்டாவது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 89 ரன்னில் வெளியேறினார்.
- முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது.
கெபேஹா:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் டோனி-டி-சோர்சி முதல் பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஸ்டப்ஸ் 4 ரன்னும், எய்டன் மார்க்ரம் 20 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய ரியான் ரிக்கல்டன்-பவுமா ஜோடி பொறுப்புடன் விளையாடியது. அரைசதம் அடித்து அசத்திய பவுமா 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக ஆடி சதமடித்த ரிக்கல்டன் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்கோ ஜான்சன் 4 ரன்னில் ஆட்டமிழக்க முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இறுதியில், முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. கைல் வெர்ரைன் 48 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
இலங்கை சார்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டும், அசிதா பெர்னண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- லோன்வாபோ சோட்சோபே ஒருகாலத்தில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பந்து வீச்சாளராக இருந்தவர்.
- டி20 சேலஞ் தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ததாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் மேட்ச் பிக்சிங் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
2015-16 ஆண்டு நடைபெற்ற டி20 சேலஞ் தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ததாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட லோன்வாபோ சோட்சோபே ஒருகாலத்தில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பந்து வீச்சாளராக இருந்தவர்.
2016 மற்றும் 2017 க்கு இடையில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தென்னாப்பிரிக்க அணியால் தடை விதிக்கப்பட்ட 7 வீரர்களில் இந்த மூவரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 42 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.
- 516 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.
டர்பன்:
இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 42 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 7 விக்கெட்டும், கோட்சி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
149 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. 4வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ், பவுமா ஜோடி இணைந்து பொறுப்புடன் ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர்.
4வது விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டப்ஸ் 122 ரன்னில் அவுட்டானார். பவுமா 113 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 366 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 516 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 5 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் இரு தினங்கள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா எஞ்சியுள்ள 5 விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது.
- டர்பன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
டர்பன்:
இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டர்பனில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 9 ரன்னும், டோனி டி ஜோர்ஜி 4 ரன்னும் எடுத்தனர். ஸ்டப்ஸ் 16 ரன்னும், டேவிட் பெடிங்காம் 4 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 80 ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கேப்டன் பவுமா (28), கைல் வெர்ரின்னே (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
கனமழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டத்தை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர்.
இலங்கை அணி சார்பில் லஹிரு குமாரா 2 விக்கெட் வீழ்த்தினார்.
- இலங்கை தென் ஆப்பிரிக்காவில் பயணம்செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .
கேப்டவுன்:
இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால், இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
தென் ஆப்பிரிக்க அணி விவரம் வருமாறு:
டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், ஜெரால்ட் கோட்சி, டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், கைல் வேரின் .