என் மலர்
மயிலாடுதுறை
- இந்து மேனிலைப்பள்ளி கூடுதல் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விழுக்காடு இரண்டிலும் முதலிடம்.
- பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கலெக்டர் மகாபாரதி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
சீர்காழி:
சீர்காழியில் நடைபெற்ற மரபு சார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் இக்கல்வியாண்டில் மேல்நிலை 2-ம் ஆண்டு மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் சீர்காழி தாலுக்காவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி கூடுதல் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விழுக்காடு இரண்டிலும் முதலிடம் பெற்றமைக்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பியை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குநர் ஜே.சேகர், சீர்காழி நகர மன்ற உறுப்பினர் வேல்முருகன் மற்றும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ்.முரளிதரன் , என்.துளசிரங்கன் , ஏ.வரதராஜன் கலந்து கொண்டனர்.
- மானிய குழு திட்டத்தின் கீழ் ஒன்றிய உறுப்பினர்களுக்கு கூடுதலாக வளர்ச்சி பணிகள் வழங்க வேண்டும்.
- சேதம் அடைந்த நிலையில் உள்ள திட்டை சாலையை சீரமைக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரணக்கூட்டம் அவை கூடத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், சரவணன் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமுத்துகுமார் வரவேற்றார். தொடர்ந்து மன்ற பொருள்களை கணக்கர் சரவணன் வாசித்தார்.
கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடந்த விவாதங்கள் வருமாறு,உறுப்பினர் பஞ்சு குமார்(திமுக) பேசுகையில், மணிக்கிராமம் ஊராட்சியில் சாலைக்கார தெரு, பள்ளி கூட தெரு ஆகிய தெருக்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனை சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
உறுப்பினர் நடராஜன் (அதிமுக) பேசுகையில் 15வது நிதி மானிய குழு திட்டத்தின் கீழ் ஒன்றிய உறுப்பினர்களுக்கு கூடுதலாக வளர்ச்சி பணிகள் வழங்க வேண்டும். கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மங்கைமடம்கடைவீதியில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றார்.
உறுப்பினர் விஜயகுமார்(அதிமுக) பேசுகையில், சேதம் அடைந்த நிலையில் உள்ள திட்டை சாலையை சீரமைக்க வேண்டும். புதுத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளப்பள்ளம் கிராமத்தில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேலைக்குச் செல்லாமல் குடிநீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உறுப்பினர் தென்னரசு (திமுக) பேசுகையில் எடக்குடி வடபாதி ஊராட்சியில் சேதம் அடைந்த நிலையில் உள்ள மயான கொட்டகை மற்றும் மண் சாலைகளை சீரமைத்து தர வேண்டும். ரேஷன் கடைகள் வாரம் முழுவதும் பொருள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி :
ஊராட்சிகளில் அனுமதி இன்றி பலர் குடிநீர் இணைப்புகளை பெற்று குடிநீரை வீணாக்கி வருகின்றனர். இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது எனவே அனுமதி பெறாமல் இணைப்பு பெற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உறுப்பினர் நிலவழகி பேசுகையில், எனது பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் அமைத்து தர வேண்டும்.
கீழமூவர்கரை பகுதியில் புதிதாக ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்றார்.
தலைவர் கமலஜோதி தேவேந்திரன் பேசுகையில் உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும். கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் 3-வது மரபுசார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
- பாரம்பரிய நெல் மற்றும் இதர பயிர் சாகுபடி முறைகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதி சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சர்வதேச சிறுதானிய ஆண்டு-2023 மற்றும் மரபுசார் பன்முக தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதுகுறித்து கலெக்டர் மகாபாரதி பேசியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் 3-வது மரபுசார் பன்முகத் தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் பாரம்பரிய நெல் மற்றும் இதர பயிர் சாகுபடி முறைகளையும், அவற்றை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் முறைகளையும், இங்கு வந்துள்ள விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
நிகழ்ச்சியில், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால், சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- தர்மர் பிறப்பு, திரவுபதி பிறப்பு உள்ளிட்ட கதை பாட்டு நிகழ்ச்சிகள் தினமும் நடந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழபெரம்பூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு திருவிழா சித்திரை மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அல்லி திருமணம், தர்மர் பிறப்பு , திரவுபதி பிறப்பு உள்ளிட்ட கதை பாட்டு நிகழ்ச்சிகள் தினமும் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான படுகள நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சாமி வீதியுலா, கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை கீழபெரம்பூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.
- ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 2 செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
- சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை சிவக்குமார் ஆய்வு செய்துள்ளார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு கடைவீதியில் செல்போன் மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் சிவக்குமார் (வயது48). இவர் நேற்று முன்தினம் இரவு செல்போன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையில் இருந்த ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 2 செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
உடனடியாக தனது கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை சிவக்குமார் ஆய்வு செய்துள்ளார். அதில் மணல்மேடு மாதாகோவில் தெருவை சேர்ந்த நிலவழகன் (40) என்பவர் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து செல்போன்களை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதுகுறித்து அவர் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளுடன் சென்று மணல்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலவழகனை கைது செய்தனர்.
- சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
- குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் லதா வரவேற்றார்.
இதில் மாநிலத்தலைவர் கலா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்ட செயலாளர் ராமதேவன், மாநில செயலாளர் சிவபழனி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடையும், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.முடிவில் மாவட்ட பொருளாளர் வேம்பு நன்றி கூறினார்.
- சீர்காழி சபாநாயக முதலியார் மேல்நிலைப்பள்ளியில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
- மதிப்பு கூட்டுதல் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும் நடத்தப்பட உள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடை பெறுகிறது.
வேளாண்மை யில் பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய பயிர்களின் முக்கியத்துவத்தை விவசாயிகளுக்கு தெரிவிக்கும் வகையில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சீர்காழி சபாநாயக முதலியார் மேல்நிலைப்பள்ளியில் நாளை
(30-ந்தேதி) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் பாரம்பரிய பயிர் ரகங்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும் நடத்தப்பட உள்ளது.
எனவே, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொள்ளிடம் சீயாளம் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகவிழா நடந்தது.
- விழாவை முன்னிட்டு முதல் நாள் விநாயகர் பூஜை, கோ பூஜை நடந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சீயாளம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது.
மிகவும் பழமையான இந்த கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு முதல் நாள் விநாயகர் பூஜை, கோ பூஜை நடந்தது.
தொடர்ந்து யாகசாலை பிரவேசம் தொடங்கி, முதல் நாள் யாகசாலை பூஜை அதனைத்தொடர்ந்து மாலை இரண்டாம் கால யாக பூஜையும், நேற்று காலை மூன்றாவது காலயாக பூஜை தொடங்கி நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், மகா மாரியம்மன் மூலவர் குடமுழுக்கு விழாவும் நடைபெற்றது.
இதையடுத்து காத்தவராயன் ஆரியமாலா, பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கும் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் உள்ளூர் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பிளஸ்-2-வில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தகுதியுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-
ஹெச்சிஎல் நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு ஹெச்சிஎல் டெக்னாலஜில் வேலைவாய்ப்புடன் இராஜஸ்தான் மாநிலத்தி லுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லுரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் பிசிஏ பட்டப்படிப்பு அமிட்டி பல்கலைகழகத்தில் பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.காம்., மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம்., பல்கலைகழகத்தில் ஒருங்கிணைந்த மேலாண்மை
பட்டபடிப்பு சேர்ந்து படித்திடவும், வாய்ப்பும் பெற்றுதரப்படும்.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் 2022 -ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இ எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் இப்படிப்பி ற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.
இத்திட்டத்தில் வருடாரந்திர ஊதியமாக ரூ.1,70,000- முதல் ரூ.2,20,000- வரை பெறலாம்.
மேலும் திறமைக்கேற்ற வாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம்.
இப்பயிற்சியில் சேர தாட்கோ இணைதளம்
www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவல கத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்க ளுடன் பதிவேற்றம் செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தாட்கோ மேலாளர் அலுவல கத்தை அணுகவும் தொலை பேசி எண்:04364-211217.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விளைநிலங்களில் அதிகபட்சமாக தேங்கும் மழை நீரை எளிதில் வெளியேற்றி விடலாம்.
- கோடை காலத்திலேயே இந்த 2 வாய்க்கால்களையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் கோரைபள்ளம் மற்றும் கீழேரி ஆகிய 2 வாய்க்கால்கள் அப்பகுதியில் முக்கிய பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வருகின்றது.
இந்த 2 வாய்க்கால்கள் மூலம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதியும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் வடிகால் வசதியையும் பெறுகின்றன
இந்த இரு வாய்க்கால்களும் அப்பகுதியில் உள்ள பிரதான கெண்டைமடை வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால்களாக பிரிந்து மாதிரவேளூருக்கு அருகில் கடந்த 1904-ம் ஆண்டு தெற்கு ராஜன் வாய்க்காலுக்கு கீழே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாக சென்று கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது.
இந்த வாய்க்கால்களை தூர்வாருவதன் மூலம் மழைக்காலத்தில் அப்பகுதியில் உள்ள சுமார் 3,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் அதிகபட்சமாக தேங்கும் மழை நீரை எளிதில் வெளியேற்றி விடலாம்.
மேலும் அப்பகுதியில் நிலங்களுக்கு சீரான பாசன வசதியும் கிடைக்கும் எனவே கோடை காலத்திலேயே இந்த 2 வாய்க்கால்களையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
கோரிக்கையின் பேரில் மயிலாடுதுறை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சண்முகம் உத்தரவின் பேரிலும், சீர்காழி உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரிலும் நேற்று கொள்ளிடம் உதவி பொறியாளர் சிவசங்கரன், பாசன ஆய்வாளர்கள் சீனிவாசன், முருகேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லின் எந்திரம் மூலம் கீழேரி மற்றும் கோரைபள்ளம் ஆகிய இரு பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியை தொடங்கினர்.
மேலும் இரண்டு தினங்களில் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள 2 வாய்க்கால்களும் முழுமையாக தூர்வாரி ஆழப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது கோடைகாலத்திலேயே விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று வாய்க்கால்களை தூர்வாரும் பணி தொடங்கியதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.