என் மலர்
தென்காசி
- மாவட்டத்தில் தமிழ் வழி கல்வியில் பொதுத்தேர்வில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற 4 மாணவர்களுக்கு பரிசுகளை மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார்.
- நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மை ஆணையத்தின் கீழ் இய ங்கும், முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழ ங்கும் விழா மாவட்ட கலெ க்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், 107 பெண்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்களும்,16 பெண்களுக்கு மாவு ஆட்டும் எந்திரங்களும், 14 மாணவி களுக்கு கல்வி உதவித்தொ கையும்,11 பெண்களுக்கு குடிசை தொழில் உதவிகள் என ரூ.13 லட்சத்து 54,200 மதிப்பில் 149 பயனாளிகளுக்கு உதவியும், மாவட்டத்தில் தமிழ் வழி கல்வியில் பொதுத்தேர்வில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற கடையநல்லூர் ஷப்ரின் இமானா 590, செங்கோட்டை கலைச் செல்வி 583, சங்கரன் கோவில் முத்து லட்சுமி 583, தென்காசி கார்த்திகா 582 ஆகியோர்களுக்கு பரிசு களையும், மாநில சிறுபான் மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன், தென்காசி பழனி நாடார் எம்.எல்.ஏ, மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவர் தமிழ் செல்வி போஸ், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர்,தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிர மணியன், வடகரை பேரூ ராட்சி தலைவர், கவுரவ செயலாளர் முகம்மது சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்
- கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி ஆகியோர் பங்கேற்று முகாமினை தொடங்கி வைத்தனர்.
- முகாமில் புதிதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.
தென்காசி:
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்புணர்வு குழு, பாவூர்சத்திரம் அஞ்சல் அலுவலகம் இணை ந்து நடத்தும் ஆதார் சிறப்பு முகாம் பாவூர் சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் 4 நாட்கள் நடைபெறுகிறது.
அரிமா சங்கத்தலைவர் கே.ஆர்.பி. இளங்கோ தலைமை தாங்கினார். சங்க செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, பள்ளி தலை மை ஆசிரியை ஜான்சி ராணி ஆகியோர் பங்கேற்று முகாமினை தொடங்கி வைத்தனர். முகாமில் புதிதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர், கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர், அஞ்சலக தென்காசி கோட்ட ஆய்வாளர் ராமசாமி, துணை அஞ்சல் அதிகாரி ஜெயக்குமார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஆனந்தசெல்வி, உறுப்பினர் சங்கர், அரிமா சங்க உடனடி முன்னாள் தலைவர் அருணாசலம், முன்னாள் செயலாளர் கலைச்செல்வன், செய லாளர் (தேர்வு) சசி ஞான சேகரன், பொருளாளர் (தேர்வு) சினேகாபாரதி, விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.
முகாமானது வருகிற (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. எனவே புதிதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகள் தேவைப்படுவோர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- கடையின் அருகே உள்ள காலியிடத்தில் திருமலைகுமார் சுமார் 23 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்து மேலத்தெருவை சேர்ந்தவர் திருமலைகுமார்(வயது 40). இவர் அப்பகுதியில் நெல்லை-தென்காசி சாலையில் பலசரக்கு கடை வைத்துள்ளார்.
இவர் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் வி.கே.புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது கடையின் அருகே உள்ள காலியிடத்தில் அவர் சுமார் 23 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். புகையிலையையும் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.
- கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி வந்த கனரக லாரி, தனியார் பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
- இதில் பஸ்சை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மெக்கானிக் காயமடைந்தார்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள திரவியநகர் பகுதியில் தனியார் பஸ் ஒன்று பழுதானதால் அதன் டிரைவர் சாலை ஓரம் பஸ்சை நிறுத்திவிட்டு மெக்கானிக்கை வரவழைத்து அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி வந்த கனரக லாரி, தனியார் பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மெக்கானிக் காயமடைந்தார். மேலும் மெக்கானிக்கின் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்கமும் சேதம் அடைந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாவூர்சத்திரம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய கனிமவள லாரியின் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். லாரி ஓட்டுநர் தூக்கத்தில் சாலையோரம் நின்ற தனியார் பஸ் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக லாரிகள் கடையம்-தென்காசி சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அவை அசுர வேகத்தில் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே விதிகளுக்கு புறம்பாக அதிகளவில் கனிம வளங்களை ஏற்றி செல்வதோடு மட்டுமின்றி அசுர வேகத்திலும் செல்லும் லாரிகள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- கடையநல்லூர் முப்பிடாதி அம்மன் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
- 9-ம் திருநாளான நேற்று அதிகாலை அம்மன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் முப்பிடாதி அம்மன் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி அம்பாள் தீர்த்த உற்சவம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. தினமும் கும்பஜெபம் ,ஹோமம், அபிஷேகம் ,தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
கடந்த 10 நாட்களாக ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் ஆடல், பாடல், செண்டைமேளம், இன்னிசைக் கச்சேரி ,வில்லுப்பாட்டு என ஒவ்வொரு நாளும் இரவில் நடைபெற்றது. அதன் பின்னர் இரவில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.விழாவின் 9-ம் திருநாளில் நேற்று அதிகாலை அம்மன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம்,மதியம் முப்பிடாதி அம்மன் கோவில் சன்னதி முன்பிருந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். நியூ பஜார், மெயின் பஜார், தேசிய நெடுஞ்சாலை, முப்பிடாதி அம்மன் கோவில் தெரு என பிரதான இடங்களில் தேரோட்டம் நடைபெற்றது. இரவில் ஊஞ்சல் தீபாராதனை நடைபெற்றது. தேரோட்டத்தில் கிருஷ்ணாபுரம், மேலக்கடையநல்லூர், மாவடிக்கால் ,முத்துகிருஷ்ணாபுரம், பண்பொழி, திருமலை கோவியில், அச்சன்புதூர், செங்கோட்டை என பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- நேற்று உதயகுமார் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு குளிக்க சென்றார்.
- தீயணைப்பு வீரர்கள் 2 மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றியபோது அதில் உதயகுமார் இறந்து கிடந்தார்.
நெல்லை:
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரை அடுத்த பெரியூர் கண்டியபேரியை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 41). விவசாயி. அப்பகுதியில் காளியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது.
இதில் நேற்று நடந்த மஞ்சள்பால் ஆடுதலில் பங்கேற்றுவிட்டு உதயகுமார் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு குளிக்க சென்றார். அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்தார். அப்போது அவரது உடலில் காயம் ஏற்பட்டு நீரில் மூழ்கினார்.
இந்நிலையில் குளிக்க சென்ற உதயகுமார் வெகுநேரமாகியும் வராததால், அவரது உறவினர்கள் அங்கு தேடி சென்றபோது கிணற்று அருகே அவரது ஆடைகள் மட்டும் இருந்தது. இதனால் அவர் மூழ்கியிருக்கலாம் என நினைத்து சங்கர ன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அங்கு வந்த வீரர்கள் 2 மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றியபோது அதில் உதயகுமார் இறந்து கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தொடர்ந்து கரிவலம்வந்த நல்லூர் போலீசார் அவரது உடலை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தென்காசி-பழைய குற்றாலம் சாலையில் உள்ள ஆயிரப்பேரி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
- பாரில் வேலை பார்க்கும் வசந்த் என்பவர் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
தென்காசி:
தென்காசி-பழைய குற்றாலம் சாலையில் உள்ள ஆயிரப்பேரி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை ஒட்டி பார் உள்ளது.
நேற்றிரவு வழக்கம்போல் பாரை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். அப்போது சில மர்ம நபர்கள் பாருக்குள் புகுந்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா மற்றும் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். பின்னர் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த ரூ.58 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்தனர்.
இதுகுறித்து பாரில் வேலை பார்க்கும் வசந்த் என்பவர் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
- கலா மாநில அளவில் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.
- முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின், கலாவை நேரில் அழைத்து பணி ஆணையை வழங்கினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள ரெட்டியார்பட்டி கிராமத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின் மகளான கலா (23).
காவலர் தேர்வு
கரிவலம்வந்தநல்லூரில் உள்ள அகாடமியில் படித்து கடந்த ஆண்டு நடைபெற்ற காவலர் தகுதிக்கான தேர்வில் பங்கேற்றார். எழுத்து, உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் பங்கு பெற்ற கலா மாநில அளவில் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதனைதொடந்து கடந்த வாரம் முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின், கலாவை நேரில் அழைத்து தமிழக காவல்துறைத்தலைவர் சைலேந்திரபாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா ஆகியோர் முன்னிலையில் காவலர் பணிக்கான பணி ஆணையை வழங்கினார்.
எம்.எல்.ஏ. வாழ்த்து
முதல்-அமைச்சரிடம், பணி ஆணை பெற்ற மாணவி கலாவை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நேரடியாக கரிவலம்வந்தநல்லூர் பயிற்சி நிலையத்திற்கு சென்று வாழ்த்தி பரிசு மற்றும் மரக்கன்று வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதில் அகாடமி ஜான்சன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, மதிமாரிமுத்து, நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ், பஞ்சாயத்து தலைவர் தினேஷ் மற்றும் பெற்றோர்கள், அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பயிற்சி வகுப்பை கலெக்டர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
- சுமார் 150 மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை முழு நேர அரசு பொதுநுாலக கட்டிடத்தில் நான் முதல்வன் திட்டம் வாயிலாக சுமார் 150 மாணவர்களுக்கு மத்திய தேர்வாணயம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற செயலாளா் மயிலேறும்பெருமாள், பயிற்சி அலுவலா் சதாசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரம்யா வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து கலெக்டர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் நுாலக வாசகர் வட்ட செயலாளா் செண்பக குற்றாலம், நூலகர் ராமசாமி, நுாலக அரசுத்தேர்வு பொறுப்பாளா் விழுதுகள்சேகர் உள்பட பலா் கலந்து கொண்டனா். பயிற்சி வகுப்பில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.
- கண்ணாட்சி முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- இன்று காலை முளைப்பாரி கரைத்தல் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோவில் கொடைவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா கடந்த 23-ந் தேதி கால் நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் நாள்தோறும் கண்ணாட்சி முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 28-ந்தேதி காலை கும்பாபிஷேகம், மகாதீபாராதனை, முழுக்காப்பு தரிசனம், இரவு அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடந்தது. 29-ந்தேதி மாலை குடியழைப்பு, நேற்று உச்சிக்கால பூஜை, பொங்கலிடுதல், முளைப்பாரி எடுத்தல், அக்கினி சட்டி எடுத்தல், குற்றாலம் தீர்த்தம் கொண்டு வருதல், இரவு கொடைவிழா நடந்தது. இன்று காலை முளைப்பாரி கரைத்தல் நடந்தது. மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெறுகிறது.