என் மலர்
சிவகங்கை
- மதுக்கடைகளில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- கடைகளில் உள்ள வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
தேவகோட்டை
தமிழகத்தில் தற்போது அரசு மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தேவ கோட்டை கோட்டாட்சியர் பால்துரை நகரில் உள்ள அரசு மதுபான கடைகளில் ஆய்வு செய்தார்.
மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா? மதுபாட்டில் அரசு விலைப்பட்டியல் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். மது கடைகளில் அரசு விலை பட்டியல் நுகர்வோருக்கு தெரியும் படி இருக்க வேண்டும் என்று பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
அனுமதி இல்லாத பார்கள் செயல்படுகிறா? டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் பணியில் உள்ளார்களா? என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார். கடைகளில் உள்ள வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
பார்கள் இல்லாத மது கடைகளின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டிகள், தரமாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.
- கண்ணுடையநாயகி அம்மன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளினார்.
- இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் தேரோட்டம் நடந்தது.
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் கண்ணுடையநாயகி அம்மன் கோவில் உள்ளது. தென் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் முக்கியமான கோவிலாகும்.
இங்கு கடந்த மே மாதம் 24-ந் தேதி வைகாசி திருவிழா கொடியேற்றத்து டன் விழா தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய விழாவான வெள்ளி ரத புறப்பாடு நேற்று இரவு நடைபெற்றது.
வண்ண மலர்களாலும் வண்ணமின் விளக்கு களாலும் அலங்கரிக்கப் பட்டவெள்ளி தேரில் தேரோடும் வீதிகளில் கண்ணுடைய நாயகி அம்மன் பவனி வந்தார். விழாவில் தென் மாவட்டங்க ளில் இருந்தும் மலேசியா சிங்கப்பூர் மற்றும் வெளி நாடு நகரத்தார் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
இன்றுவெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் தேரோட்டம் நடந்தது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகிநாச்சியார் உத்திரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் பா. இளங்கோ, கண்காணிப் பாளர் ஜெயகணேசன், மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தார்கள்.
முன்னதாக பக்தர்கள் காவடி எடுத்தும் கரும்பு தொட்டில் கட்டியும், முடி இறக்கி தங்களது வேண்டு தலை நிறைவேற்றினார்கள்.
- தர்ம முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- யாகசாலை பூஜை மேடை அமைத்து அதில் புனித நீர் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மானம்பாக்கி யில் தெற்கு எல்கையில் அமைந்துள்ள தர்ம முனீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி கோவில் அருகே யாகசாலை பூஜை மேடை அமைத்து அதில் புனித நீர் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன.
4-ம்கால பூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதியானதும் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் புனித நீர் கடங்களை சுமந்து மேளதாளம் முழங்க கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.
அதன் பின்னர் தர்ம முனீஸ்வரர் மூலவர் விமானக்கோபுர கலசத்தின் மீதும் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்கள் மீதும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றிகும்பாபிஷேகம் நடத்தினர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கெண்டனர்.
- காளையார் கோவில் தெப்பத்திருவிழா நடந்தது.
- வைகாசி விசாக தெப்பத் திருவிழா இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் சொர்ண காளீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோயிலில் கடந்த 26 -ந் தேதி வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப் பட்ட தேரில் ஸ்வர்ணவல்லிஅம்மன் சமேத சொர்ண காளீஸ்வரர் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தெப்பத் திருவிழா இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ கண்காணிப் பாளர் பால சரவணன், மற்றும் ஸ்தானிகர் காளீஸ்வர குழுக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
- சிவகங்கை மாவட்டத்தில் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
- விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள பிரதான கால்வாய்களில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள், வைகை ஆற்றில் கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்ேபாது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் நீர்வள ஆதாரங்களை மேம்ப டுத்தவும், நிலத்தடி நீர்மட்ட த்தை மேம்ப டுத்தவும் பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், கட்டிக்குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு வைகை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டும் பணி மதிப்பீட்டு தொகை ரூ.3060.00 லட்சங்கள் மதிப்பீட்டில் தமிழக அரசால் கட்டிக்குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு வைகை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்ட மாநில நிதியின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டு பணி நடைபெற்று வருகின்றது.
இந்த அணைக்கட்டு கட்டுவதால் கட்டிக்குளம், முத்தனேந்தல், மிளகனூர், துத்திக்குளம், கிருங்காக்கோட்டை, கீழமேல்குடி, கால்பிரிவு மற்றும் மானாமதுரை ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு, இதன் மூலம் 6316.10 ஏக்கர் பயன்பெறும். மேலும், இந்த அணைக்கட்டு கட்டப்படுவதால் பதினெட்டான்கோட்டை, வாகுடி மற்றும் செம்பராயனேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள குடிநீர் மற்றும் விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீர்வளத்துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை (சருகனியாறு கோட்டம்) செயற்பொறி யாளர் ஏ.வி.பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவிப்பொறியாளர்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், பூமிநாதன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
- எம்.ஆர்.எஸ்.பி பவானி அன் கோ திறப்பு விழா நடந்தது.
- நான்காவது கிளையை காரைக்குடி செக்காலை ரோட்டில் தொடங்கியது.
காரைக்குடி
மதுரையில் ரெடிமேட் கதவுகள், பிளைவுட்ஸ், கண்ணாடிகள், லாமி னேட்ஸ், ஹார்டுவேர் பொருட்களின் புகழ்பெற்ற விற்பனை நிறுவனமான எம்.ஆர்.எஸ்.பி பவானி அன் கோ நிறுவனம் மதுரை, கோவை, சிவகாசி ஆகிய ஊர்களைத் தொடர்ந்து தனது நான்காவது கிளையை காரைக்குடி செக்காலை ரோட்டில் தொடங்கியது.
இதனை நிர்வாக இயக்குநர்கள் எம்.ஆர்.எஸ்.பிரபாகரன், எம்.ஆர்.எஸ்.பி.பவானி ஆகியோர் தலைமையேற்று திறந்து வைத்தனர். எம்.ஆர்.எஸ்.பி.சிவராஜ் மணிமாலா மற்றும் எம்.ஆர்.எஸ்.பி.வசந்தராஜ் கீர்த்திகா தம்பதியினர் வரவேற்றனர்.
மதுரை பி.எஸ்.எம்.என் மாரியப்ப நாடார் அன் கோ உரிமையாளர் கணேசன் பொற்செல்வி தம்பதியர் மற்றும் மதுரை எஸ்.வி.எஸ் வெற்றிவேல் நாடார், கோந்து கடை உரிமை யாளர் மோகன் செல்வி தம்பதியர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
இதில் காரைக்குடி கட்டுமான பொறியா ளர்கள் சங்க நிர்வாகிகள், பில்டர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள், ஆர்க்கி டெக்சர் வல்லு நர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதிேயார்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
- முன்னதாக பனங்குடி ஜோசப் வரவேற்று பேசி னார்.
காளையார்கோவில்
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பனைவெல்லம் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துக்குமார் ஏற்பாட்டில் கல்லல் சாந்தி ராணி முதியோர் இல்லத்தில் கல்லல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நா. நெடுஞ்செழி யன் தலைமை யில் முதியோர்களுக்கு கேக் மற்றும் பிரியாணி, வழங்கப்பட்டது. கல்லல் ஊராட்சி மன்ற தலைவரும், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவருமான சுப. வடிவேலு முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராமச்சந்திரன் நீதிபதி, சந்திரசேகரன், மார்க்கண்டேயன், முகமது கனி, ஊராட்சி மன்ற தலைவர் உடையப்பா செல்வம், சேதுபதி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்ட பனைவெல்லம் கூட்டுறவு சங்க தலைவர் முத்துக்குமார், துணைத் தலைவர் மாரி, முன்னாள் தலைவர் குழந்தைவேலு உட்பட நிர்வாகிகள் செய்திருந்தார் கள். முன்னதாக பனங்குடி ஜோசப் வரவேற்று பேசி னார். காளையார்கோவில் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சொக்கு ரமேஷ் நன்றி கூறினார்.
- சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி விளையாட்டு விழா நடந்தது.
- குதிரையேற்ற பயிற்சியாளர் வினய் தேசிய கொடியை ஏந்தியபடி குதிரையில் வலம்வந்தார்
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசாலை யன்கோட்டை யில் உள்ள கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கர வேளா ண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 8-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி யின் தாளாளர் சேது குமணன் தலைமை தாங்கினார்.முதல்வர் கருணாநிதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டா லின், அழகப்பா பல்கலை கழக உடற்கல்வி கல்லூரி யின் பொறுப்பு முதல்வர் முரளி ராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் சதீஷ்கு மார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் கொடி ஏற்ற ப்பட்ட பின்பு கல்லுரியின் குதிரை யேற்ற பயிற்சி யாளர் வினய் தேசிய கொடியை ஏந்தியபடி குதிரையில் வலம்வந்தார்.தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைக்க, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற சேது பாஸ்கரா வேளான் கல்லூரி மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியபடி மைதானத்தை சுற்றி வந்தனர். கல்லூரி யின் உதவி உடற்கல்வி இயக்குனர் சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தி னர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டா லின், மாணவர்களின் தன்னம் பிக்கையை தூண்டும் வகையில் விளையாட்டு துறையில் சாதித்த பல்வேறு சாதனையாளர்க ளின் வாழ்க்கை நிகழ்வு களை கூறினார். விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரி யர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்க ளுக்கு சிறப்பு விருந்தினர்கள், கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் பரிசு களை வழங்கினர்.
- தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
- ஏற்பாடு களை ஒன்றிய நகர இளை ஞரணி அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வடக்கு ஒன்றியம் மற்றும் நெற்குப்பை பேரூர் இளை ஞர் அணி சார்பாக திராவிட மாடல் அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் வேலங்குடி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நடை பெற்றது.
இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் விரமதி மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாமி கண்ணு, நெற்குப்பை நகரச் செயலாளர் கே.பி.எஸ். பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட கவுன்சிலர் ஏ.டி.என்.ரவி, ஒன்றிய கவுன்சிலர் கே.ஆர்.ராமசாமி, வாழ்த்துரை வழங்கினார்கள். தி.மு.க. அரசு புரிந்த பல்வேறு சாதனைகளை கழக பேச்சாளர் கரூர் முரளி பங்கேற்று சிறப்புரை யாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தமிழ் நம்பி, ஒன்றிய வழக்கறிஞர் அணி நாகூர் கனி, கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், மகி பாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், கழக நிர்வாகிகளான கஸ்தூரி சின்னையா, மாரி யப்பன், ரஞ்சித், சோம சுந்தரம், திருநாவுக்கரசு, குமார், கருணாநிதி, விக்னேஸ்வரன், கணேசன், மணிக்குமார், முருகேசன், பாஸ்கர், ராமநாதன் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர், நகர கழக கிளைக்கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
நெற்குப்பை நகர இளைஞரணி அமைப் பாளர் பாண்டியன் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஒன்றிய நகர இளை ஞரணி அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.
- ரூ.1.04 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில், அரசின் பல்வேறு துறைக ளின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகை யில் பல்வேறு மேம் பாட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
அவ்வாறாக மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் நிலைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் கள ஆய்வுகள் மேற்கொண்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
அதன்படி எஸ்.புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆஷாஅஜீத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்வேறு துறை களின் சார்பில் அந்த பகுதி களில் நடைபெற்றுவரும். ரூ1.04கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மரம் நடுதல், மண் வரப்பு கட்டுதல், பள்ளி சுற்றுச்சுவர் கட்டும்பணி, அங்கன்வாடி கட்டிடம், கலையரங்கம் கட்டும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டார். தொடர்ந்து 8 மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ55.25 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
இந்த ஆய்வுகளின் போது எஸ்.புதூர் ஒன்றியக்குழு தலைவர் விஜயா, உதவிசெயற் பொறியாளர் முருகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் ராஜேஸ்வரன், சத்யன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- அரசு விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
- மாணவ-மாணவிகள் அரசின் இந்த சலுகைகளைப் பெற்று, பயனடையலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசால் சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ- மாணவிகளுக்கு என 21 மாணவர் பள்ளி விடுதிகளும், 14 மாணவி பள்ளி விடுதிகளும், 5 மாணவர்கள் கல்லூரி , பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளும், 5 மாணவிகள் கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளும் என மொத்தம் 45 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிக்கும் மாணவ- மாணவிகள் சேர தகுதியு டையவர்கள் ஆவார்கள்.
அனைத்து விடுதி மாணவர், மாணவிகளுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 4 இணைச்சீருடைகளும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவி களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்களும் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பி டத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்ததொலைவு விதி மாணவிகளுக்கு பொ ருந்தாது.
தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்ப ங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பா ளினிகளிடம் இருந்தோ அல்லது கலெக்டர் அலுவ லகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில