search icon
என் மலர்tooltip icon

  பெரம்பலூர்

  • கோவிலில் சாமி முன்பு கட்டி இருந்த சுமார் 35 பல்வேறு அளவிலான வெண்கல மணிகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
  • கோவில் பூசாரி பிச்சப்பிள்ளை குன்னம் போலீசில் புகார் செய்தார்.

  அகரம்சீகூர்:

  பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள அசூர் கிராமத்தில் அசூர் கிராமத்தில் இருந்து அந்தூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் சேரா குலத்தார் காட்டு கோவில் உள்ளது.

  இந்த கோவிலில் அசூர் மற்றும் அந்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இந்த கோவிலில் பூசாரியாக பிச்சபிள்ளை என்பவர் இருந்து வருகிறார்.

  இந்நிலையில் கடந்த 14-ம் தேதி மாலை பூஜை செய்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார் பின்னர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை பூஜை செய்வதற்காக சென்றார்.

  அப்போது கோவிலில் சாமி முன்பு கட்டி இருந்த சுமார் 35 பல்வேறு அளவிலான வெண்கல மணிகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

  இது குறித்து கோவில் பூசாரி பிச்சப்பிள்ளை குன்னம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குன்னம் போலீசார் விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து கோவில் மணிகளை திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

  • பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.
  • நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று மழை பெய்ய தொடங்கியது.

  பெரம்பலூர்:

  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

  அதன்படி டெல்டா மாவட்டங்களில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது.

  பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பவில்லை. சில நீர்நிலைகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யும் என்று எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

  இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய மழை விட்டு விட்டு பெய்தது.

  பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

  • சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
  • தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம்களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

  அகரம்சீகூர்:

  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஆத்தூர் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி தீபா (வயது 42) மாற்றுத்திறனாளியான இவர் பெரம்பலூர் வி. களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

  பெரம்பலூர் குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (44). இவரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

  இவர்கள் 2 பேரையும் கடந்த 15-ந் தேதி முதல் காணவில்லை. மேலும் ஆசிரியை தீபா பயன்படுத்தி வந்த காரும் மாயமானது. அதைத்தொடர்ந்து மனைவியை காணவில்லை என தீபாவின் கணவர் பாலமுருகன் வி. களத்தூர் போலீஸ் நிலையத்திலும், கணவரை காணவில்லை என வெங்கடேசனின் மனைவி காயத்ரி பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

  இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கோவை பி1 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கடைவீதி பகுதியில் மாயமான ஆசிரியை தீபாவின் கார் 2 நாட்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருப்பதாக வி. களத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  பின்னர் போலீசார் விரைந்து சென்று காரைத்திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் ரத்தக் கறை படிந்த சுத்தியல், தீபா அணிந்திருந்த தாலி, கொலுசு, அவரின் ஏ.டி.எம். கார்டு வெங்கடேசனின் 2 செல்போன்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

  மேலும் இச்சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

  இதனிடையே ஆசிரியர் வெங்கடேசன் செல்போனில் இருந்து பாலியல் புரோக்கரான கோவை மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

  இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தீபா கதி என்ன என்பது குறித்து தனிப்படை கோவை, தேனி, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. கேரளாவிற்கும் தனிப்படை விரைந்துள்ளது.

  தனிப்படை போலீசார் விசாரணையில் ஆசிரியர் வெங்கடேசன் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. தீபா என்ன ஆனார் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. இதனிடையே கோவை, மதுரை, தேனி ஆகிய இடங்களில் ஏ.டி.எம்க.ளில் வெங்கடேசன் பணம் எடுத்த போது அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் ஆசிரியர் வெங்கடேசன் மட்டுமே இருப்பது பதிவாகியுள்ளது.

  வெங்கடேசன் தொடர்பு கொண்டு பேசுபவர்களின் செல்போன் எண்களை விசாரிக்கும் போது, அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் என்பது தெரிய வந்தது.

  தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம் களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

  மாயமான ஆசிரியர் வெங்கடேசன், தனது இருப்பிடத்தை போலீசர் அறிந்துவிடுவார்கள் என அவ்வப்போது சிம்கார்டுகளையும், தான் பதுங்கி இருக்கும் இடத்தையும் மாற்றி மாற்றி வருகிறார். இதனால் அவரை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  இதனால் தீபாவை வெங்கடேசன் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  வெங்கடேசன் சிக்கினால் மட்டுமே ஆசிரியை தீபா பற்றிய நிலை தெரியவரும் என்பதால் அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

  • தொடர் வைப்பு நிதி கணக்குகள் மட்டும் சுமார் 1,500 உள்ளன.
  • அஞ்சல் அலுவலர் நித்யா சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே அனுக்கூர் கிராம அஞ்சல் கிளை அலுவலகத்தில், அஞ்சல் அலுவலராக பணிபுரிந்து வந்தவர் நித்யா.

  இந்த அலுவலகத்தில் அனுக்கூர், அனுக்கூர் குடிகாடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் அஞ்சலக சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், காப்பீடு தொகை செலுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் வைத்துள்ளனர். இதில் தொடர் வைப்பு நிதி கணக்குகள் மட்டும் சுமார் 1,500 உள்ளன.

  இந்நிலையில் அஞ்சல் அலுவலர் நித்யா, பொதுமக்கள் பலர் அஞ்சலகத்தில் செலுத்தும் பணத்தை அவர்களது கணக்கில் வரவு வைக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அஞ்சல்துறை உயரதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அஞ்சல் அலுவலர் நித்யா சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் அனுக்கூர் அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை, அஞ்சல் துறை அதிகாரிகள் சந்தித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

  • உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அகரம்சீகூர் பகுதியில் 46 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
  • பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது

  அகரம்சீகூர்,

  பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீ கூர் கிராமத்தில் வேப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பாக இளைஞர் அணி மாநில செயலா ளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலின் 46-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 46 கிலோ கேக் மற்றும் லட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் முன்னிலை வ கித்தார். முன்னதாக வேப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் மருவத்தூர் சி.ராஜேந்திரன் தலை மையில் தி.மு.க. கொடி யேற்றினார்.நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சன் சம்பத், அவைத்தலைவர் கருணாநிதி, லப்பைக் குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஜாகிர் உசேன், மா வட்ட பிரதிநிதிகள் செல்வ ராஜ், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகம், ஒன்றிய பொருளாளர் செல்வராஜ் ஒன்றிய துணை செயலாளர் கௌதமன், ஒகளூர் பால் பண்ணை செக்ரட்டரி சக்திவேல், இளைஞர் அணி விக்னேஷ், சுப்ரியா வெங்கடேசன், நாகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
  • பத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

  குன்னம்:

  சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்றிரவு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சை நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்த லத்தீஷ்(வயது 37) என்பவர் ஓட்டினார்.

  பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திருச்சி-பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூர் கொண்டகாரபள்ளம் என்ற இடத்தில் வந்தது. அப்போது முன்னால் கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இருந்து திருச்சிக்கு இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் முசிறி மலையபுரம் சிந்தாமணி குறுக்கு தெருவை சேர்ந்த சரவணன்(31) என்பவர் ஓட்டினார்.

  எதிர்பாராத விதமாக ஆம்னிபஸ் லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த குமரி மாவட்டம் கல்குளம் அருகே உள்ள பழவிளையை சேர்ந்த பால்ராஜ் மகன் பிரதீஷ்(30) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

  பஸ்சில் வந்த மற்ற பயணிகள் விருதுநகர் மாவட்டம் சிவந்திப்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ்(52), நெல்லை மாவட்டம் மதுராநத்தம் நெடுங்கல் பகுதியை சேர்ந்த ஞானராஜ்(38), தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டை சேர்ந்த இசக்கியம்மாள்955), அவரது உறவினர்கள் லட்சுமி(45), ஜோதி(47), குமரன்(50), லாரி டிரைவர் சரவணன், ஆம்னி பஸ் டிரைவர் லத்தீஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

  அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அந்தோணிராஜ் பரிதாபமாக இறந்தார்.

  இதை தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

  இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

  பலியான பிரதீஷ், அந்தோணிராஜ் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான பிரதீஷ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

  காயம் அடைந்த ஞானசேகர் வள்ளியூரில் வேளாண் அதிகாரியாக உள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

  • தொடர்மழையால் தொழுதூர் அணைக்கட்டிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது
  • கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டார்

  பெரம்பலூர்,

  வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொழுதூர் அணைக்கட்டு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலைஅருகே, பெரம்பலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.

  அணைக்கட்டின் இடது கரையில் கால்வாய் வெட்டப்பட்டு, கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வெலிங்டன் நீர்த்தேக்கத்துக்கும், வலது கரையில் உள்ள கால்வாய் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒகளுர், வடக்கலூர், வடக்கலூர் அக்ரஹாரம் ஆகிய 3 ஏரிகளுக்கும் வெள்ளநீர் திருப்பி விடப்படுகிறது.

  தொழுதுார் அணைக்கட்டின் மூலம் மொத்தம் 26 ஏரிகளும், 10,468 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

  தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டம் வெள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், குறுக்கே கட்டப்பட்டுள்ள தொழுதூர் அணைக்கட்டிலிருந்தும், கீழக்குடிக்காடு அணைக்கட்டிலிருந்தும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டார்.

  வெள்ளாற்றிலிருந்து வரும் நீர் மூலம் கீழக்குடிகாடு அணைக்கட்டுக்கும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்மூலம் அத்தியூர் ஏரி, கிழுமத்தூர் ஏரி, வயலூர் ஏரி மற்றும் கைப்பெரம்பலூர் ஏரி ஆகிய 4 ஏரிகளுக்கு நீர் செல்கிறது. இந்த ஏரிகள் மூலம் மொத்தம் 1,193 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

  இந்த ஆய்வின்போது, குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் தினகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

  • பெரம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது
  • சொக்கப்பனை என்கின்ற சுடலை கொளுத்தப்பட்டது

  பெரம்பலூர்,

  பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது.

  எளம்பலூர் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மரிஷி மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதன்படி 41வது ஆண்டு மகாதீப திருவிழாவை யொட்டி எளம்பலூர் காகன்னை ஈஸ்வரர் கோயிலில் கோ மாதா பூஜை, அஸ்வ பூஜை நடந்தது. தொடர்ந்து பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வ ரர் கோயிலில் 5 அடி உயர மகா தீப செம்பு கொப்பரை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக பிரம்மரிஷி மலைக்கு கொண்டு வர ப்பட்டு பிரம்மரிஷ ிமலையாடிவாரத்தில் அமைந்துள்ள காகன்னை ஈஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டது. பின்னர் செம்பு கொப்பைரைக்கு பூஜை விழா நடந்தது.

  இதை தொடர்ந்து பிரம்மரிஷி மலையின் மேல் 2 ஆயிரம் மீட்டர் திரி, ஆயிரத்து 8 லிட்டர் நெய்யுடன், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு, 5 அடி உயர செப்புக் கொப்பரையில் மகாதீபத்தை கடலூர் எஸ்பி ராஜாராம், சிவகாமி அதிபன் போஸ் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

  அதேவேளையில் எளம்பலூர் பிரம்மரிஷி மலையடி வாரத்தில் அமைந்துள்ள காகன ஈஸ்வரர் கோயிலில் மகா தீபத்தை ஏற்றுதலை தொடங்கி வைத்த எஸ் பி சியாமளாதேவி, பிரபாகரன் எம்எல்ஏ ஆகியோர் ஏற்றி வைத்தனர். அதன் பின்னர் சாதுக்களுக்கு வஸ்திர தானம், காசு தானமும், பொதுமக்களுக்கு அன்னதா னமும் வழங்கப்பட்டது. விழாவில் திட்டக்குடி ராஜன், சன்மார்க்க சங்க தலைவர் சுந்தர்ராஜன், சிவசேனா கொள்கை பரப்புச் செயலாளர் சசிக்கு மார், டாக்டர் ராஜாசிதம்பரம் உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி, தவயோகிகள் சுந்தர மகாலிங்கம், தவசிநாதன் மற்றும் மகா சித்தர்கள் அறக்கட்டளை மெய்யன்பர்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்த னர்.

  பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை என்கின்ற சுடலை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஈசன் முன்னிலையில் சொக்கப்பனை எனும் சுடலை கொளுத்தப்பட்டது

  இதேபோல் பெருமாள் கோவில், மரகதவள்ளி தாயார் சமேத மதன கோபால சுவாமி, சஞ்சீவி ராயன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

  • பெரம்பலூர் ரோவர் கல்லூரியில் மருந்தியல் கண்காட்சி நடைபெற்றது
  • டாக்டர் ராஜா முகமது கண்காட்சி யை துவங்கி வைத்தார்

  பெரம்பலூர்,

  தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில் 62ம் தேசிய மருந்தியல் வாரவிழா வினையொட்டி 4-ம் நாள் மருந்தியல் கண்காட்சி நடைபெற்றது.

  இதில் சிறப்பு விருந்தின ராக டாக்டர் ராஜா முகமது கலந்துகொண்டு கண்காட்சி யை துவங்கிவைத்தார். ரோவர் கல்வி நிறுவனங்க ளின் நிறுவனர் மற்றும் மேலாண் தலைவர் கே.வரதராஜன் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் நெப்போலியன் சிறப்புரை ஆற்றினார்.

  துணை முதல்வர் மாரியம்மாள் நன்றி கூறினார். இந்த கண்காட்சியில் மருந்தியல் சம்பந்தமான 50க்கும் அதிகமான படைப்புகளை மாணவர்கள் தங்களுடைய தனித்துவத்தை கொண்டு வெளிப்படுத்தினர். மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள் விழா வினை ஒருங்கிணைத்தனர். விழாவில் தலைமை அலுவலக மேலாளர் ஆனந்தன், கல்வி மேலாளர் சத்திஷ்வரன் அலுவலக மேலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 

  • பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் 1.24 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது
  • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7,158 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது

  பெரம்பலூர்,

  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் சர்க்கரை ஆலை நேரு தொடக்கப்பள்ளி மற்றும் மங்களமேடு டி.இ.எல்.சி பள்ளிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கற்பகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்த தாவது:-

  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும், குறிப்பாக 1.1.2024-இல் 18 வயது பூர்த்தியடையும் இளம் வாக்காளர்கள் விடுமுறை நாள்களில் நடைபெறும் இம் முகாம்களை பயன் படுத்திக்கொள்ளலாம்.மாவட்டம் முழுவதும் கடந்த 25-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற்ற முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,554 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 89 விண்ணப்பங்களும், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 863 விண்ணப்பங்களும் வழங்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில், இதுவரை நடைபெற்ற முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7,158 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 588 விண்ணப்பங்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 5,247 விண்ணப்பங்களும் என மொத்தம் 1,23,993 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.