என் மலர்
கள்ளக்குறிச்சி
- நண்பரின் மகள் திருமண நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
- மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு துரைசாமி அதிர்ச்சி அடைந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூர் கிராமம் பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் நேற்று மாலையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனது நண்பரின் மகள் திருமண நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிறகு துரைசாமி உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த பீரோ மற்றும் கப்போர்டுகள் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6பவுன் ஆரம், 4 பவுன் நெக்லஸ், அரை பவுன் டையுள்ள 5 மோதிரம், தோடுகள் 5 பவுன், , ஒரு பவுன் எடையுள்ள 5 காயின் உள்ளிட்ட மொத்தம் 25பவுன் தங்க நகை, பணம் 9 ஆயிரம் ரொக்கப்பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு துரைசாமி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து துரைசாமி சின்னசேலம் போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசார் குற்றவாளிகளை தேடும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி வீட்டை விட்டு விரட்டி இருக்கின்றனர்.
- இலாகி உள்ளிட்ட 9 பேரும் சேர்ந்து மாஜிதாவை கொலை மிரட்டல் விடுத்த தாக தெரிகிறது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் இலாகி (வயது 53). இவரது மனைவி மாஜிதா (45). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதுவரை குழந்தை இல்லை. இந்த நிலையில் மாஜி தாவை அவரது கணவர் இலாகி மற்றும் கொழுந்த னார் கலீம் (50), கலிம் மனைவி ஷர்மிளா, நஜு புதீன் மனைவி மலிகா, சாதிக் பாஷா மனைவி பர்வீன், ஜாபீர் என்கிற ஜாபர், சாதிக்பாஷா ஷாஹேர் மற்றும் இலாகி யின் 2-வது மனைவி பரிதா ஆகியோர் சேர்ந்து வரதட்சணை கொடுமைப்படுத்தி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி வீட்டை விட்டு விரட்டி இருக்கின்றனர்.
இந்த நிலையில் மாஜிதா சம்பவத்தன்று தனது வாழ்க்கைக்கு ஒரு வழி சொல்லும்படி கணவர் மற்றும் அவரது குடும்பத்தி னரிடம் நியாயம் கேட்டி ருக்கிறார். இதனால் ஆத்திர மடைந்த அவரது கணவர் இலாகி உள்ளிட்ட 9 பேரும் சேர்ந்து மாஜிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாஜிதா கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதிகா, மனைவியை கொடுமைப் படுத்திய கணவர் இலாகி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கணவர் இலாகியை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- துலாம்பூண்டி கிராமத்தில் சூதாட்டம் நடை பெறுவதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு புகார் கிடைத்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள துலாம்பூண்டி கிரா மத்தில் சூதாட்டம் நடை பெறுவதாக திருக்கோ விலூர் போலீசாருக்கு புகார் கிடைத்தது. புகாரின் பேரில் விரைந்து சென்ற திருக்கோ விலூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் பஸ் நிறுத்தம் பின்புறம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த துலாம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய திருக்கோவிலூரைச் சேர்ந்த தர்மா மற்றும் மாயக் கண்ணன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
- சின்னராசு ,சக்கரவர்த்தி ஆகியோர் விக்ரம் என்பவர் நிலத்தில் காப்பர் வயரை திருடினர்.
- மோட்டார் சைக்கிள் மற்றும் 5 கிலோ காப்பர் கம்பி ஆகியவற்றையும் போலீசார் பறி முதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள ஆவிகொளப்பாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னராசு (வயது 29). அதே ஊரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தியும் அதே ஊரில் உள்ள பெருமாள் நாயக்கர் வீதி யைச் சேர்ந்த விக்ரம் (30) என்பவர் நிலத்தில் காப்பர் வயரை திருடினர். அப்போது கையும் களவுமாக சின்னரா சாவை பிடித்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 5 கிலோ காப்பர் கம்பி ஆகியவற்றையும் போலீசார் பறி முதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருக்கோவிலூர் போலீசார் சின்னராசுவை கைது செய்தனர். தப்பிவிட்ட சக்கரவர்த்தியை வலை வீசி தேடி வருகின்றனர்.
- மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, உதவி இயக்குநர் ரத்தினமாலா ஆய்வு செய்தார்.
- ஊராட்சி செயலரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் மடப்பட்டு கிராம ஊராட்சி யில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சியின் கூட்ட அறிவிப்பு பதிவேடு, தீர்மான பதிவேடு, ஊராட்சி பதிவேடுகள் 1 முதல் 31 பதி வேடுகள் முறையாக பரா மரிக்காதது, மற்றும் ஊராட்சியின் தீர்மானம் செலவினசீட்டுகள் இல்லா மல் செலவினம் மேற்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டது.
மேலும், இந்த குறை பாடுகள் காரணமாக 1994 -ம் ஆண்டுதமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 (1) (அ) மற்றும் பிரிவு 206(1) (அ) -ன் கீழ்ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆகியோர்களுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஊராட்சிகள் சட்டம் 1994-ம் ஆண்டு பிரிவு 203-ன்படி, மடப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகியோர் கை யொப்பமிடும் அதிகா ரத்தினை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும், ஊராட்சி பணிகளையும், கணக்குகளையும் சரிவர செய்யாத காரணத்தினால் ஊராட்சி செயலரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப் பணிகளை கவனிக்க தவறிய சம்மந்தப்பட்ட அலு வலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும், இது போன்று ஊராட்சிகளில் முறைகேடுகளில் ஈடுபடு வோர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
- கதிர்வேல் தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டி ருந்தார்.
- கதிர்வேல் கீழே இறங்கி வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கதவின் அருகே நின்று கொண்டு இருப்பது தெரிய வந்தது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே வேங்கைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 34) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மேல் மாடியில் தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டி ருந்தார். அப்போது கீழ் வீட்டில் உள்ள அறை யில் கதிர்வேல் அண்ணன் பெருமாள் மனைவி கவிதா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டப்ப டாமல் சாத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நள்ளிரவில் வீட்டில் கதவை உடைப்பது போல் சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்த கதிர்வேல் கீழே இறங்கி வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கதவின் அருகே நின்று கொண்டு இருப்பது தெரிய வந்தது. இவரைப் பார்த்த கதிர்வேல் கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் இருந்து தப்பி ஓடினர். உள்ளே சென்று பார்த்த போது கவிதா படுத்திருந்த அறையை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு மற்றொரு அறையில் இருந்த பீரோ கதவை உடைத்து அதிலிருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குண சேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்த னர். மேலும் கைரேகை நிபுணர் ராஜவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தார். இது குறித்து கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 1432 -ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி வருகின்ற 6-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5, 12, 19 -ந்தேதி ஆகிய திங்கள் கிழமைகளில் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் 1432 -ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி வருகின்ற 6-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தவிர்த்து மற்ற நாட்களில் வருவாய் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது. அதன்படி, மாவட்ட கலெக்டர் தலைமையில் கள்ளக்குறிச்சி வட்டத்தில் வருகிற 5-ந் தேதி முதல் 12 -ந் தேதி வரையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் உளுந்தூ ர்பேட்டை வட்டத்தில் 5 -ந் தேதி முதல் 19-ந் தேதி வரையிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் திருக்கோவிலூர் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையிலும், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் கல்வராய ன்மலை வட்டத்தில் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையிலும், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் சின்னசேலம் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலும், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி தலைமையில் சங்கராபுரம் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது.
மேலும், 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவல கங்களில் வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் வருவாய்துறை தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். ஜமாபந்தி நடைபெறுவதால், மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5, 12, 19 -ந்தேதி ஆகிய திங்கள் கிழமைகளில் நடைபெறாது என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
- ஒயர் திருடிக் கொண்டிருந்த குமாரை மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த சந்திரமூலசமுத்திரம் கிராமத்தில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மின் ஒயர்களை அதே ஊரைச் சேர்ந்த குமார் (வயது 38) என்பவர் திருடிக் கொண்டிருந்தபோது அந்த கிராம மக்கள் பிடித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி இவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
- மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்பு ணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டியல் இனத்தவர் சுமார் 40 முதல் 50 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்பு ணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெ க்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசே கரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், டிட்கோ அறக்கட்டளை தலைவர் சுந்தரவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-
இந்த திட்டம் பட்டியலின மற்றும் பழங்குடியின தொழிலாளர்களை தொழிலதி பராக ஆக்குவதற்கும், பயன்பெறுவதற்காகவும், பொருளாதாரத்தை உயர்த்து வதற்காகவும், புதிய தொழில் முனைவோராக உருவாக்கு வதற்காகவும் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டியல் இனத்தவர் சுமார் 40 முதல் 50 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர். குறிப்பாக கல்வராயன் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் 90 சதவிதம் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் இத்தி ட்டதை அறிந்து செயல்ப டவேண்டும். அரசின் இந்த திட்டத்தை முழுமையாக அறிந்து முழு ஈடுபாட்டுடனும், முழு முயற்சியுடனும் செயல்ப டவேண்டும். படித்த இளை ஞர்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து தொழில் தொடங்கு வதற்கு மிகச்சிறந்த ஒன்றாகும். மேலும், அனைத்து வங்கி அலுவலர்களும் புதிதாக தொழில் தொடங்க இருக்கும் தொழில் முனைவோர்களுக்கு தகுந்த வழிகாட்டியாகவும், தொழிலில் உள்ள நுணுக்க ங்களையும் பற்றி பயனாளி களுக்கு தெளிவு படுத்தியும், அவர்களுக்கு தேவையான அறிவுறைகளை வழங்கி, தொழில் முனைவோராக உருவாக்கிட வேண்டும். மேலும், நடப்பு நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட த்தின்கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.106.05 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.37.13 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய விண்ணப்பங்கள் வங்கி களுக்கு பரிந்துரை செய்யப்ப ட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதனைதொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் அரசு திட்டங்களில் சிறப்பாக கடன் வழங்கிய வங்கி மேலாள ர்களுக்கு பாராட்டு கேடய ங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கருத்தரங்கில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள், சங்கத் தலைவர் பிர்மதேவன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) கதிர்சங்கர், மாவட்ட தாட்கோ மேலாளர் அனந்த மோகன், மாவட்ட தொழில் மைய திட்ட அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட தொழில் மைய உதவி ப்பொறியாளர் சிவநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் வங்கி மேலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.
- நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
- சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி(47) தனது வீட்டின் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து ராமசாமியைபோலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 13 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.