என் மலர்
ராணிப்பேட்டை
- மேலகுப்பத்தில் மா செடிகள் நடப்பட்டு சொட்டுநீர் பாசனம் அளிக்கப்பட்டு வருகிறது
- அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், மேலகுப்பம் கிராமத்தில் தரிசுநில மேம்பாட்டு திட் டத்தின்கீழ் தோட்டக்கலை துறையின் மூலம் மா செடிகள் நடப்பட்டு சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தபணிகளை தோட்டக்கலை இயக்குனர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், தோட்டக்கலை துணை இயக்குனர் லதாமகேஷ், வேளாண்மை துறை துணை இயக் குனர் செல்வராஜ், பொறியியல்துறை செயற்பொறியாளர் ரூபன்குமார், ரவிக்குமார் ஆற்காடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) வேலு, வேளாண்மை உதவி இயக்குனர் விக்னேஷ், துணை அலுவலர் கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
- உரத்தின் பயன்பாடு குறித்து விளக்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த போளிப்பாக்கம் கிராமத்தில் விவசாயிகளுக்கு நானோ யூரியா குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அ.ம.கிருஷ்ணன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
கலை நிகழ்ச்சியில் அனைத்து பயிர்களுக்கும் மேல் உரமாக யூரியா பயன்படுத் தப்பட்டு வருகிறது. நானோ யூரியா திரவமாக தெளிக்கலாம். நானோ பூரியா திரவம் 500 மில்லி லிட்டர் ஒரு மூட்டை பூரியாவிற்கு இணையான பயன்தரும், நானோ யூரியா திரவம் இலை வழியாக ஊடுருவி இலை முதல் வேர் வரைக்கும் சென்று தழைசத்து அளிக்கிறது.
மண் மற்றும் நீர் மாசடை யாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து மகசூலை அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகள் லாபம் பெறலாம் என்பது குறித்து கலை நிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக், தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வம், சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பெண்ணுக்கு வாந்தி, மயக்கம்
- ரெயில் 10 நிமிடம் தாமதமாக சென்றது
அரக்கோணம்:
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. இவர் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ளவதற்காக கேரளா மாநிலம் எர்ணாகுளம் சென்றிருந்தார்.
திருமணம் முடிந்து ராஜ முந்திரி செல்வதற்காக ஹைட்டா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். ரெயில் அரக்கோணம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது இந்திராணிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் டிக்கெட் பரிசோதரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் அரக்கோணத்திற்கு ரெயில் வந்ததும் உடனடியாக காத்திருந்த மருத்துவர்கள் இந்திராணிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதனால் ரெயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
- அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
வாலாஜா அடுத்த விசி.மோட்டூரில் அண்ணாவின் 54-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விசி.மோட்டூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து வாலாஜா நகரத்தில் உள்ள உருவ சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் காந்தி தலைமையில் அமைதி ஊர்வலமாக வந்து வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி வினோத்காந்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், துணை தலைவர் ராதாகிருஷ்ணன், வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி, நகர செயலாளர் தில்லை உள்பட மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குடிபோதையில் தொடர்ந்து தகராறு செய்ததால் கணவனை வெட்டி கொலை செய்ததாக அவர் கூறினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கலைச்செல்வியை கைது செய்தனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூர் வடமேட்டு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது48) கட்டிட மேஸ்திரி.
இவரது மனைவி கலைச்செல்வி (38) தனியார் ஷூ கம்பெனியில்வேலை செய்து வந்தார்.இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
ஏழுமலைக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.
இதனால் ஏழுமலை கலைசெல்வி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு ஏழுமலை அதிகப்படியாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டார்.
மேலும் கலைச்செல்வியை தொடர்ந்து திட்டி தாக்கினார். ஒரு கட்டத்தில் தன்னை தாக்க வந்த ஏழு மலையை தடுத்து அருகில் இருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ஏழுமலை துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்து வாலாஜா போலீசார் அங்கு சென்று ஏழுமலையின் பிணத்தை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை சம்பவம் குறித்து கலைச்செல்வியிடம் விசாரணை நடத்தினர்.
குடிபோதையில் தொடர்ந்து தகராறு செய்ததால் கணவனை வெட்டி கொலை செய்ததாக அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கலைச்செல்வியை கைது செய்தனர்.
குடிபோதையால் ஏற்பட்ட சண்டையில் கணவனை மனைவியே வெட்டிக்கொன்ற சம்பவம் வாலாஜா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- செடிகளை பார்வையிட்டார்
- அரசின் திட்டங்கள் முறையாக கிடைக்கின்றதா என சோதனை
அரக்கோணம்:
அரக்கோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாராஞ்சி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறை சார்பில் நெல்லி, பப்பாளி, பாதாம், எலுமிச்சை, தென்னை, புங்கம், புளியமரம் உள்ளிட்ட பல்வேறு செடிகள் மற்றும் மரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு அவை பயிரிடப்பட்டு வருகிறது.
செயல்படுத்திய திட்ட பணிகளை தோட்டக்கலை இயக்குனர் பிருந்தா தேவி நேற்று விவசாயிகளை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் விவசாயிகளிடம் தங்களுக்கு முறையாக மானியங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் முறையாக கிடைக்கின்றதா எனவும் அங்கு பயிரிடப்பட்டுள்ள செடிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அனைத்து ஊராட்சிகளிலும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிலத்தை பார்வையிட்டு விளக்கங்களை கேட்டறிந்தார்.
பின்னர் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை பிருந்தா தேவி கள ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது கலெக்டர் நேர்முக உதவியாளர் விசுவநாதன், இணை இயக்குனர் வடமலை, துணை இயக்குனர்கள் லதாமகேஷ், செல்வராஜ், உதவி இயக்குனர்கள் அசோக், ராஜ்குமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஹரிதாஸ் மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
- சிறப்பு தீபாராதனை நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவம் தொடங்கியது.
முதல் நாளான நேற்று பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப் பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மாலையில் ஊர் கோவிலில் இருந்து முக்கிய வீதிகளில் சாமி வலம் வந்தது. பின்னர் தக்கான்குளம் என்னும் பிரம்மதீர்த்த குளத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து குளத்தில் சாமி மூன்று முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி சோளிங்கர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- குடும்ப தகராறில் விபரீதம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அருகே நவ்லாக் புளியங்கண்ணு கோடதாப்பு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குட்டியப்பா (46) சிப்காட் தொழிற் பேட்டையில் கூலி வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி சரிதா (35) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குடிப்பழக்கத்துக்கு அடிமையான குட்டி யப்பா, குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது.
இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பினர்.அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்பால் போடப்பட்டிருந்து.
பலமுறை கதவை தட்டியும் திறக்கததால் சந்தேகம் அடைந்த சரிதா மற்றும் மகன்கள், வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது குட்டியப்பா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார்வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- மண் கடத்தியதால் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் வட்டம் பள்ளூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அனுமதியின்றி மண் எடுப்பதாக ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் கலெக்டரின் உத்தரவின் பேரில் நேற்று மாலை அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட குழுவினர் பள்ளுர் கிராமத்தில் அனுமதியின்றி மண் எடுத்துக் கொண்டிருந்த 3 டிப்பர் லாரிகளை கைப்பற்றி நெமிலி போலீஸ் நிலைத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தாசில்தார் அளித்த புகாரின் பேரில் நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியின் உரிமையாளர் யார்? தப்பியோடிய நபர்கள் யார்? என விசாரனை நடத்தி வருகின்றனர்.
- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
விருதுநகர் ரோசாப்பட்டி முருகன் தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 60). இவர் வாலாஜாவை அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமம் முசிறி சந்திப்பு சாலையில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந் தார். பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டபின் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து வாலாஜா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என பாட்டி கூறியதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த காற்றம் பாக்கம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன் மகள் கவியரசி (வயது 20). இவரது சிறு வயதிலேயே பெற்றோர்கள் இறந்துவிட்டனர்.
கவியரசிக்கு அண்ணன் ஒருவர் இருக்கி றார். அவர் ராணுவத்தில் வேலை செய்கிறார். இதனால் கவியரசி பாட்டி வள்ளியம்மாள் வீட்டிலேயே வளர்ந்து வந்தார். மேலும் சோளிங்கர் அருகே உள்ள தனியார் கல்லூ ரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கவியரசியை கல்லூரிக்கு செல்லவேண் டாம், வீட்டில் இருந்து படி என்று அவரது பாட்டி கூறியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த கவியரசி நேற்று முன் தினம் காலை 11 மணிக்கு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டுள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ராணிப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த னர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்து விட்டார்.
இதுகுறித்து கவியரசியின் சித்தப்பா நடராஜன், கொண்ட பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகையையொட்டி தீவிரம்
- ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது
அரக்கோணம்:
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து காட்பாடிக்கு ரெயில் மூலம் வரு கிறார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்குப்பட்ட பகுதிகளில் உள்ளரெயில் தண்டவாளம் மற்றும் ரெயில் நிலையங்களில் அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டுயாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் சலோமோன் ராஜா, தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான் ஷெரிப், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன், தாசன் மற்றும் சுமார் 300 போலீசார் துப்பாக் கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நடைபெற்றது.