என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ராமநாதபுரம்
- மிச்சாங் புயல் கரையை கடந்த நிலையில் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
- வெறிச்சோடி கிடந்த ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் இன்று காலை முதல் களை கட்டத்தொடங்கியது.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் காரணமாக மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல கடந்த சனிக்கிழமை முதல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்து இருந்தது.
இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், சோளியகுடி, தொண்டி, கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க கடந்த நான்கு நாட்களாக செல்லாமல் அந்தந்த துறைமுங்களிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே மிச்சாங் புயல் கரையை கடந்த நிலையில் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடிக்க செல்ல அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்றனர்.
4 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்கு செல்வதாக அதிகப்படியான மீன் பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதனால் வெறிச்சோடி கிடந்த ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் இன்று காலை முதல் களை கட்டத்தொடங்கியது.
- புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளதை குறிக்கும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
- 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் 'மிச்சாங்' புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதுதொடர்பாக மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, கடலூர், நாகை, பாம்பன் ஆகிய 7 துறைமுகங்களில் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளதை குறிக்கும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
புயலின் அடுத்தகட்ட நகர்வை பொறுத்து, ஒவ்வொரு துறைமுகங்களில் மேலும் எச்சரிக்கை கூண்டுகள் அதிகரிக்கப்படும். புயலின் தன்மையை பொறுத்து மொத்தம் 11 கூண்டுகள் வரை ஏற்றுவார்கள். இதில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, துறைமுகத்தில் மோசமான வானிலை ஏற்பட்டுள்ளதையும், துறைமுகத்தில் இருக்கும் கப்பல்களுக்கு ஆபத்து என்பதையும் உணர்த்தும். அதுவே 11-ம் எண் கூண்டு வானிலை எச்சரிக்கை மையத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது. மோசமான நிலை என்பதை தெரிவிக்கும்.
பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி என ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பைபர் படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- ராமேசுவரம் கோவிலுக்கு வந்த ஐயப்ப பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
- நகராட்சி ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதலே கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இதனால் ராமேசுவரம், மண்டபத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. அதனை கடந்து செல்ல பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பல இடங்கள் தொடர் மழையால் சேறும், சகதியுமாக மாறியது.
ராமேசுவரம் கோவிலுக்கு வந்த ஐயப்ப பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் விடுதி அறைகளிலேயே தங்கினர். இன்று காலை மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் வழிபட்டனர்.
ராமேசுவரத்தில் நகராட்சி அலுவலகம் முன்பு, பொது மார்க்கெட், முனியசாமி கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கனமழை பெய்தாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காத நிலையில் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி குடையுடன் பள்ளிக்கு பெற்றோர்கள் அழைத்து வந்தனர்.
- சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த படகை நோக்கி சுங்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் அன்னிய ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க சஜாக் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக மிகவும் அருகாமையில் உள்ள அண்டை நாடான இலங்கைக்கு இங்கிருந்து மஞ்சள், பீடி உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையில் இருந்து வரி ஏய்ப்பு செய்து தமிழகத்திற்கு தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் கடத்தலும் வழக்கமான ஒன்றாகி விட்டது.
இதனை தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படை, கடற்படை போலீசார், அதிநவீன ஹோவர் கிராப்ட் படகுகள், சுங்கத்துறை உள்ளிட்டவை தீவிர கண்காணிப்பு பணியில் இருந்தபோதிலும் அதனையும் மீறி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
சமீபத்தில் இரண்டு முறை இலங்கையில் இருந்து தங்கம் கடத்தலும், அதிகாரிகளை பார்த்ததும் கடத்தல் கும்பல் தங்க கட்டிகளை கடலில் வீசி எறிந்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில் இலங்கையில் இருந்து ராமேசுவரத்திற்கு தங்கம் கடத்தப்பட இருப்பதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சுங்கத்துறை உதவி ஆணையர் ரவி அற்புதராஜ் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக ராமேசுவரத்தில் முகாமிட்டு கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று நள்ளிரவில் பாம்பன் முந்தல்முனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த படகை நோக்கி சுங்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அவர்களை வருவதை பார்த்ததும் அந்த படகில் இருந்து 4 மர்மநபர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர். இதையடுத்து அந்த படகை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.
இதில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள 3½ கிலோ எடையுள்ள தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அந்த தங்கத்தை கைப்பற்றியதோடு, தங்கம் கடத்தி வந்த நாட்டுப்படகையும் பறிமுதல் செய்து பாம்பன் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
தங்கம் கடத்தி வந்த மர்மநபர்கள் யார், எங்கு தங்கியிருக்கிறார்கள், யாருக்காக இந்த தங்கம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் அன்னிய ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க சஜாக் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
60 பேர் கொண்ட படையினர் 4 குழுக்களாக பிரிந்து 180 கிலோ மீட்டர் கடல் பரப்பில் நேற்று சஜாக் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்ட நிலையில் மறுநாளான இன்று இலங்கையில் இருந்து துணிச்சலாக தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது கடலோர காவல் படையினருக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
- கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்துவது, இங்கிருந்து மருந்துகள், மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்துவது நடந்து வருகிறது.
- மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.
தொண்டி:
தமிழகத்தில் 180 கி.மீ. நீள கடற்கரை மாவட்டமாக ராமநாதபுரம் விளங்கி வருகிறது. இங்கு ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மீனவர்கள் வாரத்தில் 3 நாட்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.
அண்டை நாடான இலங்கை, ராமநாதபுரத்துக்கு கடல் வழியாக 20 மைல் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இலங் கையில் இருந்து கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்துவது, இங்கிருந்து மருந்துகள், மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்துவது நடந்து வருகிறது.
இதனை தடுக்க கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் இலங்கையில் இருந்து அகதிகளாகவும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.
ராமநாதபுரம் மாவட்டத் தில் எஸ்.பி.பட்டனம் முதல் சாயல்குடி ரோஸ்மா நகர் வரை கடற்கரை உள்ளது. பாக் நீரினை, மன்னார் வளைகுடா பகுதிகளை உள்ளடக்கிய இந்தப்பகுதியில் அன்னிய ஊடுருவல், கடத்தல்களை தடுக்க இன்று கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் "சஜாக்" என்ற ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கூடுதல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் யாசர் மவுலானா, அய்யனார், முகமது தாரிக், கண்ணன் மற்றும் 60-க்கும் மேற்பட்ட கடலோர போலீசார் 4 குழுக்களாக பிரிந்து அதிவேக படகுகளில் கடலில் ரோந்து சென்று கண்காணிப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரை பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து மீனவர்கள் உடனடியாக கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடற்கரையில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் "சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.
- பால் பாக்கெட் கூட அதிக விலைக்கு வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்ணீருடன் கூறினர்.
- தமிழகத்துக்கு அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ராமேசுவரம்:
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள். மேலும் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
இவ்வாறான நிலையில் வாழ்வாதாரம் தேடி ஏராளமானோர் இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.
குறிப்பாக யாழ்ப்பாணம், தலைமன்னார் பகுதியில் இருந்து குடும்பம், குடும்பமாக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து படகுகளில் தனுஷ்கோடி, அரிச்சல் முனை கடற்கரை பகுதிக்கு வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இலங்கை தலைமன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்று அதிகாலை அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். முன்னதாக ராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இலங்கை அகதிகள் வந்துள்ளதாக தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைதொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் 7 அகதிகளையும் மீட்டு மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட னர். இதில் அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் தொல்புறத்தை சேர்ந்த நாகராஜ் (43), இவரது மனைவி வந்தினி (38) மற்றும் அனோ ஜன்ண (13), கஜிவன் (9), தனுஷ்கா (4), அஜந்தன் (18), கிசாலினி (17) ஆகியோர் படகுக்கு ரூ.1.50 லட்சம் கொடுத்து தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்தாக தெரிவித்தனர்.
மேலும் அங்கு வாழ்வதற்கான உகந்த சூழல் இல்லை என்றும், பால் பாக்கெட் கூட அதிக விலைக்கு வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்ணீருடன் கூறினர்.
விசாரணைக்கு பின்னர் 7 அகதிகளையும் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க உள்ளதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தெரிவித்தனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தற்போது வரை குறையாததால் அகதிகள் வருகை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- ராமநாதபுரத்தில் கிராம மக்களை சந்தித்து கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்.
- இப்பகுதிக்கு கூடுதலாக கிராம நிர்வாக அலுவலர் பணியமர்த்தப்படுவார் என கலெக்டர் கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம், உச்சிநத்தம் மற்றும் வி.சேதுராஜபுரம் ஊராட்சி களில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது கலெக்டர், பொதுமக்களிடம் தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர், சாலை வசதி, போக்குவரத்து வசதி, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
மேலும் மழைக்காலமாக உள்ளதால் தங்கள் பகுதிகளில் உள்ள கால்வாய் களில் தண்ணீர் தேங்காமலும் தங்கள் பகுதிகளில் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீரை கொடுக்கவும் அறிவுரைகள் வழங்கினார்.
மாவட்டத்தின் கடைசி பகுதியாக இருக்கக்கூடிய இந்த ஊராட்சிகளில் அவ்வப்போது அரசு துறை அலுவலர்கள் மக்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்கள். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான திட்டங்களை அரசு அலுவலர்களிடம் தெரிவித்து பயன்பெற வேண்டும். மேலும் இப்பகு திக்கு கூடுதலாக கிராம நிர்வாக அலுவலர் பணிய மர்த்தப்படுவார் என கலெக்டர் கூறினார்.
நிகழ்ச்சியில் கடலாடி வட்டாட்சியர்ரெங்கராஜ், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, உச்சி நத்தம் ஊராட்சி மன்றத்த லைவர் பாமா ருக்மணி, சேதுராஜபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜமுனா ஆகியோர் உடனிருந்தனர்.
- வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்டக்கிளை மாநாடு கமுதியில் நடந்தது.
- விழா முடிவில் வட்ட கிளை செயலாளர் மங்களேஸ்வரன் நன்றி கூறினார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், தமிழ்நாடு வரு வாய்துறை அலுவலர் சங் கத்தின் வைர விழா ஆண்டை முன்னிட்டு, வட் டளை மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பழனி குமார் தலைமை தாங்கி வை ரவிழா கல்வெட்டை திறந்து கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பேர ணியாக விழா நடக்கும் தனியார் திருமண மண்டபத் திற்கு சென்றனர். இந்தப் பேரணியை கமுதி வட்டாட் சியர் சேதுராமன் சங்க கொடி கோஷமிட்டு துவக்கி வைத்தார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அம லோற்பவ ஜெயராணி மறங றும் மண்டல துணை வட் டாட்சியர் வெங்கடேஸ்வ ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டக்கிளை தலைவர் செந்தில்முருகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜமால் முகமது உட்பட அனைத்து மாவட்ட நிர்வா கிகளும் கலந்து கொண்ட னர். மேலும் துணை வட்டார வளர்ச்சி அலு வலர் பரம சிவம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர் சங்க கமுதி வட்டக்களை தலைவர் செந்தூர்பாண்டி, செயலாளர் தாமரைக் கண்ணன், கிராம உதவியாளர் சங்க கமுதி வட்டக் கிளை தலைவர் அரியப்பன், செயலாளர் உக்கிரபாண்டி யன், தலைமை நில அலுவலர் நாகவள்ளி, கிராம நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் நிர்வாகி பால சுப்பிரமணியன் மற்றும் மாவட்டத்தின் அனைத்து வட்டக்கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில், புதிய ஓய்வூ திய திட்டத்தை கைவிட்டு பழைய ஒய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும், தேர்தல் அறிவிப்பின்போது அனைத்து செலவினங்களை யும் வழங்கிட வேண்டும், வருவாய்த் துறையின் பழுதடைந்துள்ள வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வழங்கப்பட வேண்டும் உள் ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டிற்கான ஏற்பாடுகளை வட்டாட்சியர் சேது ராமன் ஆலோசனையின் படி வருவாய் அலுவலர் சங்க கமுதி வட்ட கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர். விழா முடிவில் வட்டக்கிளை செயலாளர் மங்களேஸ்வரன் நன்றி கூறினார்.
- கார்த்திகை தீப திருவிழாவில் ராமேசுவரம் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
- திருச்சுழியில் திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் கார்த்திகை பவுர்ணமியை யொட்டி சிவபெருமான் திரிபுரம் எரித்த புரா ணத்தின் அடிப்படையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெறும். அதன்படி நேற்று கோவில் முன்பு மிகப்பெரிய சொக்கப்பனை உருவாக்கப்பட்டு கொளுத்தப்பட்டது.
தொடர்ந்து கோவிலில் சுவாமி-அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜை, தீபாரதணை நடந்தது. இதன் பின் கிழக்கு கோபுரம் முன்புள்ள மண்ட பத்திற்கு சுவாமி-அம்மன் எழுந்தருளினர். கிழக்கு கோபுர வாசல் முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கபனைக்கு கோவில் தலைமை குருக்கள் உதய குமார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது.
சொக்கப்பனை கொளுத் தப்பட்ட பின்னர் சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு 3-ம் பிர காரத்தில் வீதி உலா நடந்தது.
ஏற்பாடுகளை துணை ஆணையர் சிவராம் குமார், உதவி ஆணையர் பாஸ்கரன், ஆய்வர் பிரபாகரன் செய்தி ருந்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் வனத்துறை கட்டுப் பாட்டில் இருக்கும் சஞ்சீவி மலையில் குமாரசாமி கோவிலில் உள்ள மூலவர், உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் மலை உச்சியில் அமைக் கப்பட்டிருந்த தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து சந்தான கிருஷ்ணன் கோயில் உச்சியிலும் மகா தீபம் ஏற்றப் பட்டது. இன்று மாலை 6 மணிக்கு மேல் முருகன், சந்தான கிருஷ்ணன் மற்றும் கம்பத்து பெருமாள் கோயில்களிலும் மகா தீபம் ஏற்றப் பட உள்ளது.

கார்த்திகை மகா தீபத்தையொட்டி திருச்சுழி திருமேனிநாதர்- துைண மாலை அம்மன் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்ததையும், திடியன் மலை மீது கொப்பரையில் ஏற்றப்பட்ட மகா தீபத்தையும் படத்தில் காணலாம்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருமேனிநாதர், துணை மாலையம்மன் உட்பட பஞ்சமூர்த்தி உற்சவ சிலை களுக்கு மஞ்சணை, மஞ்சள், சந்தனம், விபூதி, பால், பன்னீர், இளநீர் உள்பட 18-க்கும் மேற்பட்ட வாசனை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. பின்னர் சுவாமி, அம்ம னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தொடர்ந்து சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 15 அடி உயரத்திற்கு கோபுர வடிவில் சொக்கப்பனை உருவாக்கப்பட்டு அதற்கு தீபாராதனைகள் காட்டப்பட்டு பின்பு கொளுத்தப்பட்டது. திருச்சுழி, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சுழி சரக போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி கண்டன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மானாமதுரை
மானாமதுரை அருகே குறிச்சியில் உள்ள வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவிலில் உள்ள செந்தில் ஆண்டவர் சன்னதியில் கார்த்திகை மகாதீப விழா நடந்தது. இதில் பாலா பிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் முருக பெருமான் காட்சியளித்தார். மானாமதுரை வைகைஆற்று கரையில் உள்ள ஆனந்த வல்லி சோமநாதர் கோவில், சுந்தரபுரம் தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோவில், பைபாஸ் சாலையில் உள்ள வழிவிடு முருகன் கோவில் வேம்பத்தூர் கைலாசநாதர் கோவில், இடைக்காட்டூர் பாலமுருகன் கோவில், கட்டிக்குளம் ராமலிங்கம் சுவாமி கோவில்,
தாய மங்கலம் அருகே உள்ள அலங்காரகுளம் சோனையா சுவாமி வைகைகரை அய்யனார் கோவில் ஆகிய கோவில்களி லும் கார்த்திகை மகா தீபத்தையொட்டி சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் திடியன் மலையில் 2 ஆயிரம் அடி உயரத்தில் 100 மீட்டர் திரி, நெய் கொண்டு தயாரிக்கப்பட்ட பெரிய கொப்பரையில் கார்த் திகை மகாதீபம் ஏற்றப் பட்டது. தொடர்ந்து மலை ே மல் உள்ள தங்கமலை ராமர் கோவில், அடி வாரத்தில் உள்ள கைலாச நாதர் சமேத பெரிய நாயகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர்.