என் மலர்
அரியலூர்
- புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன
- இது போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்துவோம். எங்களின் ரேஷன் அட்டைகளை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்போம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
அரியலூர்
அரியலூர் கீழப்பழுவூர்: அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த தூத்தூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த ஆட்சியின்போது தூத்தூர், குருவாடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் திட்டம் செயல்படுத்த இருந்த நிலையில், தற்போதைய தி.மு.க. அரசு அதனை ரத்து செய்து ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க முயற்சிப்பதால், தங்களது நீராதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டி தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று குருவாடி கிராமத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள், அ.தி.மு.க.வினர் உள்ளிட்ட பலர் ஒன்றிணைந்து கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு எங்களின் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் தொடர்ந்து இது போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்துவோம். எங்களின் ரேஷன் அட்டைகளை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்போம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
- அரியலூர் மாவட்டஊர்க்காவல் படைக்கு ஆள்தேர்வு
- 28 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிப்புரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள செய்தி குறிப்பில், ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 27 ஆண்கள், 1 பெண் என மொத்தம் 28 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 28,29,30 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு அக்டோபர் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருக்கலாம். தேர்வு நடைபெறும் நாள்களில் 20 வயது நிறைந்தவராகவும், 45 வயது நிறைவ டையாதவராகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். கல்விச்சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வர வேண்டும். தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 எடுத்து வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து கூட்டம்பகுதிகளை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு
- , 9384056231 என்ற எண்ணு க்கும் பாதிப்புகள் குறித்து தகவல் அளிக்கலாம் என்றார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில்நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது, அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல், பலவீனமான மரங்கள்,மரக்களைகள் அகற்றுதல், பாலங்கள் மற்றும் மதகுகளுக்கு அடியில் உள்ளஅடைப்புகளை அகற்றுதல், பழைய மற்றும் பாழடைந்த கட்டிடங்களைஅடையாளம் கண்டு பயன்படுத்துவதை தடை செய்தல், பலவீனமான மின்கம்பங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றை கண்டறிந்து அவைகளை மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மீட்பு உபகரணங்களை திட்டமிட்டு முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் 29 பதற்றமான பகுதிகளை கண்காணிக்க வேண்டும். உணவுப் பொருள்கள் இப்பருவமழை காலங்களில் 2 மாதங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றார். மேலும், பொதுமக்கள் பேரிடர் காலத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணுக்கும், 9384056231 என்ற எண்ணு க்கும் பாதிப்புகள் குறித்து தகவல் அளிக்கலாம் என்றார். தொடர்ந்து, ஆட்சியர் வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது மற்றும் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்சி அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அரியலூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு
- விண்ணப்பிக்க கலெக்டர் ஆனிமேரி சொர்ணா அழைப்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரூ.12 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிகமாக பள்ளி மேலான்மைக்குழுவின் மூலம் நிரப்படவுள்ள மேற்கண்ட பணியிடத்துக்கு கீழ்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருபவர்கள் (இல்லையெனில்). வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி, இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை. பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கீழ்காணும் பகுதியிலுள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளிகளில் காலிப்பணியிட விவரம்:
தா.பழூர்-1, மணக்கால்-2, விளந்தை-1, ஜெயங்கொண்டம்-1, த.கீழவெளி-1, இளையபெருமாள் நல்லூர்-2, வடவீக்கம்-1, வெத்தியார்வெட்டு-2, பாப்பாகுடி-1, கங்கை கொண்டசோழபுரம்-1, கொல்லாபுரம்-1, இளந்தைக்கூடம்-1, தூத்தூர்-1, கீழகொளத்தூர்-1, பூவாணிப்பட்டு-2.
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரம்: இலைக்கடம்பூர்-1, ஜெயங்கொண்டம்-1, வடவீக்கம்-1. விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில்
நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 29.9.2023 மாலை 5 மணிக்குள் ஒப்படைக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- ஜெயங்கொண்டம் பகுதிகளில் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 கோடி மதிப்பில் சாலை பணி
- சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 கோடி மதிப்பில் சாலை பணி
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், தேவாமங்கலம் ஊராட்சியில், முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.53.95 லட்சம் மதிப்பீட்டில் தேவாமங்கலம் காந்திநகர் சாலை அமைக்கும் பணி, தழுதாழைமேடு ஊராட்சியில், முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.34.05 லட்சம் மதிப்பீட்டில் தழுதாழைமேடு ஆதிதிராவிடர் தெரு முதல் வாணதிரையன்குப்பம் வரையில் சாலை அமைக்கும் பணி,
பிள்ளைப்பாளையம் ஊராட்சியில், முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.70.73 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளைப்பாளையம் முதல் கொல்லாபுரம் நியாய விலை கடை வரையில் சாலை அமைக்கும் பணி, இடைக்கட்டு ஊராட்சியில் ரூ.225.00 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி- சிதம்பரம் சாலையிருந்து இடைக்கட்டு செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணியை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
உடன் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா,க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ ,கட்சி சட்டத்திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் இரா.மணிமாறன் மற்றும் அரசு அலுவலர்கள், கோட்டாட்சியர் பரிமளம் வட்டாட்சியர் துரை, கட்சி தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- அரியலூர் மாவட்டம் நம்மங்குணம் கிராமத்தில் சுத்திகரிப்பு நிலையம் மூலம் குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை
- அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், நம்மங்குணம் கிராம மக்களுக்கு சுத்திகரிப்பு நிலையம் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா விடம், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் மாவட்டச் செயலர் அங்கனூர் சிவா கோரிக்கை மனு அளித்தார்.
அவர் அளித்த மனுவில், நம்மங்குணம் கிராமத்தில் 1000-த்துக்கும் மேற்பட்ட குடுபங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் கால்சியம் அளவானது கூடுதலாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்க ப்பட்டுள்ளனர். எனவே இப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அல்லது குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் குடிநீர் வழங்க வேண்டும்.மேலும்,அங்கனூர் அய்யனார் தெருவில் சாலையை சீரமைக்க வேண்டும். சாலையக்குறிச்சி அருந்ததியர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் மயனாக்கொ ட்டகை அமைத்து தரவே ண்டும். அஸ்தி னாபுரம் ஆதிதிரா விடர் மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். அய ன்தத்தனூர் கிராமத்தி லுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு செல்லும் சாலையை, அகலப்ப டுத்தி சிமென்ட் சாலையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகள் அடங்கிய மனு க்களை அவர் அளித்தார்.
- பா..ஜக. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகியது மகிழ்ச்சி என்று சீமான் தெரிவித்துள்ளார்
- அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்
அரியலூர்,
அரியலூர் அண்ணாசிலை அருகே நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த சீமான் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசும்போது, பாஜகவிலிருந்து, அ.தி.மு.க. விலகியது காலம் தாழ்த்திய முடிவு என்றாலும் அது மகிழ்ச்சி தான். இதுபோன்ற முடிவை திமுக எடுக்குமா? கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுப்பதற்கு, தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக போராடவில்லை. அப்படி இருக்கையில் ஏன் அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும். கச்சத்தீவை எடுத்து க்கொடுத்தது, தமிழர்களை கொன்றது, நீட் தேர்வு, மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தது காங்கிரஸ். அப்போதும், தற்போதும் அவர்களுடன் திமுக கூட்டணி வைத்து ள்ளது. அதிமுக எடுத்த முடிவை, திமுக எடுக்குமா என கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து அவர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார். கூட்டத்துக்கு, அக்கட்சியின் மண்டலச் செயலர் நீலமகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் குமார், மாவட்டத் தலைவர் சுதாகர், மாவட்டப் பொருளாளர் கபில்ராஜ், தொகுதிச் செயலர் லட்சுமணன், செய்தி தொடர்பாளர் பிரபாகரன், மகளிரணி ஹேமலதா, சுகுணா குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
- அரியலூரில் இடைநிலை ஆசிரியர்கள் 14-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
- 28-ந்தேதி சென்னையில் போராட்டம் நடத்தபோவதாக அறிவிப்பு
அரியலூர்,
அரியலூர் ஒன்றியத்தில், அர்ஜனாபுரம், அருங்கால், வண்ணாரப்பேட்டை, கரு.பொய்யர், கரு.சேனாபதி, இடையத்தான்குடி, கல்லக்குடி, ஒ. கூத்தூர், மண்னுழி, முனியங்குறிச்சி, பள்ள கிருஷ்ணாபுரம், ஆதனூர், ஆண்டிப்பட்டாக்காடு, பூ. ஓட்டக் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து 14-வது நாளாக நேற்றும் பணியாற்றினர். இதே போல் திருமானூர், செந்துறை, ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய ஒன்றியங்களில் பணிபுரியும் 350 ஆசிரியர்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
வரும் 27-ந்தேதிக்குள் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், வரும் 28-ந்தேதி முதல் பருவத்தேர்வு விடுமுறை நாள்களில், சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
- அரியலூர் மற்றும் செந்துறை ஒன்றியங்களில் ரூ.6.38 கோடியில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது
- போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்
அரியலூர்,
அரியலூர் மற்றும் செந்துறை ஒன்றியங்களில் ரூ.6.38 கோடியில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டது.அரியலூர் ஒன்றியம் ராயம்புரம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அங்கு ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் ராயம்புரம், பொட்டவெளி சாலை மேம்படுத்துதல், சிறுபாலம் திரும்ப கட்டுதல் மற்றும் 129 மீட்டர் நீளத்துக்கு தடுப்புச் சுவர் கட்டுதல் போன்ற பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.தொடர்ந்து செந்துறை ஒன்றியம், வாளரக்குறிச்சி கிராமத்தில் ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் இரும்புலிக்குறிச்சி, பாளையபாடி , மணகெதி வரையிலும், நாகல்குழி ஊராட்சியில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் உஞ்சினி , வாரியங்காவல் வரையிலும் சாலையை அகலப்படுத்தல் பணியையும், அதே போல் இலை க்கடம்பூர் ஊரா ட்சியில் ரூ.1 கோடி மதிப்பீ ட்டில் செந்துறை , மாத்தூர் வரை சாலை மேம்படுத்துதல் பணியையும் தொடக்கி வைத்த அமைச்சர் சிவ சங்கர், பணியை தரமான பொரு ள்களை கொண்டு விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சம்ப ந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகி த்தார். உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்டப் பொறியாளர்கள் சிட்டிபாபு, ராஜா, செந்துறை வட்டாட்சியர் பாக்கியம்விக்டோரியா மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் காம்பவுண்ட் சுவர் கட்டித்தர கோரிக்கை
- மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இப்பள்ளியில் சின்னவளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் மட்டும் சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியானது ஜெயங்கொண்டத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலை இந்த வட்டாரத்தின் முக்கிய சாலை என்பதால் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். பெரும்பாலான மாணவர்கள் இந்த சாலையை கடந்துதான் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.பள்ளி கட்டிடத்தின் முன்புறத்தில் காம்பவுண்ட் சுவர் இல்லாத நிலையில் உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும், வரும் மாணவ, மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இன்மை நிலை நிலவுகிறது. காம்பவுண்ட் சுவர் இல்லாத காரணத்தினால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையில் பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர் இல்லை. வகுப்பறைகளிலும் உரிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.பெரிய அளவில் விபத்தோ அல்லது அசம்பாவிதமோ நடைபெறுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறையினர் மாணவ, மாணவிகளின் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுத்து காம்பவுண்ட் சுவர், சுகாதாரமான குடிநீர், வகுப்பறை மேம்பாடு பணிகளை செய்திட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.