என் மலர்
நாமக்கல்
- பிரபாத் (37). விவசாயி. இவரது மனைவி பவானியில் உள்ள அவரது தந்தை வீட்டில் உள்ளார்.
- மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது பிரபாத் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது.
கரூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மகன் பிரபாத் (37). விவசாயி. இவரது மனைவி பவானியில் உள்ள அவரது தந்தை வீட்டில் உள்ளார். அவரை பார்ப்பதற்காக பிரபாத் தனது மோட்டார்சைக்கிளில் கரூரில் இருந்து திருச்செங்கோடு வழியாக செல்வதற்காக கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பரமத்திவேலூர் அருகே குப்புச்சிபாளையம் செல்லும் பிரிவு சாலை பகுதியில் உள்ள மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது பிரபாத் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் நிலைத்தடுமாறி பிரபாத் மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் பிரபாத்தை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரபாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பனிமலர் (56). இவர் கடந்த 23-ந் தேதி வசந்தபுரத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்று விட்டு உறவினர் வசந்த் என்பவரது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
- பனிமலருக்கு தலை சுற்றுவது போன்று இருந்ததால் மோட்டார்சைக்கிளை நிறுத்தும்படி கூறியுள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (65). இவரது மனைவி பனிமலர் (56). இவர் கடந்த 23-ந் தேதி வசந்தபுரத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்று விட்டு உறவினர் வசந்த் என்பவரது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் இரும்புபாலம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள மதுரைவீரன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது பனிமலருக்கு தலை சுற்றுவது போன்று இருந்ததால் மோட்டார்சைக்கிளை நிறுத்தும்படி கூறியுள்ளார். இதையடுத்து வசந்த் திடீரென பிரேக் போட்டதில் நிலை தடுமாறி பனிமலர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பனிமலர் நேற்று இறந்தார். இது குறித்து பனிமலரின் மகன் நிஷாந்த் (29) அளித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
- இந்த ஏலத்திற்கு 433 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 433 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர். இதில் பிடி ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6089 முதல் ரூ.7360 வரையிலும் விலை போனது. இதன்படி ரூ. 8 லட்சத்து 55 ஆயிரத்திற்கு விற்பனை நடைபெற்றது. இதேபோல் 10 மூட்டைகள் எள் விற்பனைக்கு வந்தது. இதில் சிகப்பு எள் கிலோ ரூ.133 முதல் ரூ.166 வரையிலும், கருப்பு எள் கிலோ ரூ.121 முதல் ரூ.157 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.50 ஆயி ரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அரசு மருத்துவமனை தரம் உயர்த்தி தற்போது அனைத்து வசதி களுடன் கூடிய மருத்துவ மனையாக உள்ளது.
- மருத்துவத்திற்கு தனித்தனி டாக்டர்கள் இங்கு உள்ளனர்.இங்கே தினசரி 800-க்கு மேற்பட்ட நோயாளிகள், புறநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தி தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவ மனையாக உள்ளது. இங்கு எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை மற்றும் பொதுநல வைத்தியம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது.
மருத்துவத்திற்கு தனித்தனி டாக்டர்கள் இங்கு உள்ளனர்.இங்கே தினசரி 800-க்கு மேற்பட்ட நோயாளிகள், புறநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக திகழ்கிறது. குறிப்பாக மகப்பேறு பிரிவிற்கு கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் வந்து பரிசோதனை செய்தும், பிரசவம் பார்த்தும் செல்கின்றனர்.
தற்போது கடந்த சில நாட்களாக மருத்துவ மனையில் தெரு நாய்கள் மற்றும் எலிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனை சுற்றி உள்ள பகுதிகளில் விற்கப்படும் பழங்கள் மற்றும் ஆஸ்பத்திரி வெளியே சாப்பிட்டு விட்டு சாக்கடையில் போடும் உணவு கழிவுகளுக்கு சாப்பிட எலிகள் வருகின்றனர். உணவு பற்றாக்குறை ஏற்படும்போது எலிகள் அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்து அங்கு வைத்திருக்கும் நோயாளிகளின் உணவுகளை பதம் பார்க்கின்றது.மேலும் அரசு மருத்துவமனை வளாகம் மரங்களால் சூழப்பட்டு இருப்பதால் தெருநாய்கள் அங்கு ஓய்வெடுக்கும் இடமாக மாறியுள்ளது நோயாளிகள் தெரிவித்தனர்.
- பரமத்தி வட்டாரம் வீர ணாம்பாளையம் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் “கிராம அடிப்படை பயிற்சி” நடைபெற்றது.
- பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமையில் பயிற்சி நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரம் வீர ணாம்பாளையம் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் "கிராம அடிப்படை பயிற்சி" நடைபெற்றது. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமையில் பயிற்சி நடைபெற்றது.
இதில் நாமக்கல் வேளாண்மை துணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயி களை வரவேற்று பயிற்சி அளித்தார்.
பயிற்சியில் பர மத்தி வட்டார வேளாண்மை அலுவ லர், மோகனபிரியா, துறை சார்ந்த மானிய திட்டங்கள், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கி யத்துவம் குறித்து கூறினார்.
இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன் கலந்துகொண்டு வேளாண் மானிய திட்டம் குறித்து கூறினார். மேலும் கால்நடை உதவி மருத்துவர் நளினி, வனஅலுவலர் ரமேஷ், தோட்டக்கலை அலுவலர் நிவேதா மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் பாபு ஆகியோர் தங்களது துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
முடிவில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி நன்றி கூறினார்.
நாமக்கல்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்புத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஒத்திகை மற்றும் செயல்விளக் கம் நிகழ்ச்சி நடந்தது. இதனை கலெக்டர் உமா தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர்கள் மற்றும் நிலைய அலுவலர்கள் ரப்பர் படகு, லைப் ஜாக்கெட், கியாஸ் சிலிண்டர் உதவியுடன், தீ அணைப்பு முறைகள் மற்றும் பிற தளவாடங்களை கொண்டு மீட்பு பணி செய்வது குறித்து ஒத்திகை செய்து காண்பித்தனர். இதை கலெக்டர் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு பயன் அடைந்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.இதில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழை கொட்டியது.மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்) வருமாறு : -
எருமபட்டி-12, குமாரபாளையம்-3.8, மங்களபுரம்-13, மோகனூர்-19, நாமக்கல்-36, பரமத்திவேலூர்-26, புதுச்சத்திரம்-3.30, ராசிபுரம்-14, சேந்தமங்கலம்-5, திருச்செங்கோடு-27, கலெக்டர் அலுவலகம்-69, கொல்லிமலை செம்மேடு-21 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 249.1 மில்லி மீட்டர் மழை பதிவானது.
- தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை
- கடந்த வாரம் குண்டு மல்லிகை கிலோ ரூ.600-க்கும், நேற்று குண்டுமல்லிகை ரூ.300-க்கும்
பரமத்தி வேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே தண்ணீர் பந்தல், கபிலர்மலை, சின்ன மருதூர், பெரிய மருதூர், பெரிய சோளிபாளையம், பாகம் பாளையம், நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, அரளி, ரோஜா, செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். பூக்களை வாங்கி செல்வதற்கு வேலாயுதம் பாளையம், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை வருகின்றனர்.
கடந்த வாரம் குண்டு மல்லிகை கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.150- க்கும், ரோஜா கிலோ ரூ.250- முல்லைப் பூ கிலோ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் வாங்கிச் சென்றனர்.நேற்று குண்டுமல்லிகை ரூ.300-க்கும்,சம்பங்கி கிலோ ரூ.80-க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் வாங்கிச் சென்றனர்.புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் இல்லாததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி மற்றும் அக்டோபர் மாதம் 2-ந் தேதிஆகிய 2 நாட்கள் மது பானக்கடைக ளுக்கு விடு முறை அறிவிக்கப் பட்டுள்ளது.இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
மிலாடி நபி விழா வருகிற 28-ந் தேதி நடைபெறுகிறது. காந்தி ஜெயந்தி விழா வரு கிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி 2 நாட்களும் மதுபானக்கடை களை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதைத்தொடர்ந்து இந்த 2 நாட்களும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள், பார்கள் மற்றும் லைசென்ஸ் பெற்றுள்ள பார்கள் உள்ளிட்ட அனைத் தையும் மூடிவைக்க வேண்டும். இந்த நாட்களில், மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ, சம்மந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- வேளாண்மை துணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளை வரவேற்று பயிற்சி அளித்தார்.
- விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
நாமக்கல்
நாமக்கல் அருகே உள்ள ஆவல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் "கிராம அடிப்படை பயிற்சி" நடை பெற்றது. நாமக்கல் வேளாண்மை உதவி இயக்கு நர் சித்ரா தலைமையில் பயிற்சி நடந்தது. இதில் நாமக்கல் வேளாண்மை துணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளை வரவேற்று பயிற்சி அளித்தார்.
வேளாண்மை அலுவலர், மோகன், துறை சார்ந்த மானிய திட்டங்கள், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கி யத்துவம் குறித்தும் மண்பரி சோதனை நிலைய வேளாண்மை அலுவலர், தரணியா, மண்மாதிரி, நீர் மாதிரி, மண்பரிசோதனை செய்வதன் நன்மைகள், நுண்ணூட்டசத்து, பேரூட்ட சத்து குறைபாடு அதனை நிவர்த்தி செய்யும் முறை குறித்தும் பயிற்சியளித்தனர்.
பயிற்சியில் நாமக்கல் வட்டார வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர், சாந்தி, கால்நடை உதவி மருத்துவர், கவிதா, வனஅலுவலர் நித்யா, பட்டுவளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் சாந்தி, தோட்டக்கலை உதவி தோட்டக்கலை அலுவலர், கோவிந்தராஜன், மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் மலர்கொடி ஆகியோர் தங்களது துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
மேலும் வேளாண்மை பயிற்சியின் ஒரு பகுதியாக வருகை புரிந்த விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையின் கருத்து கண்காட்சி, மற்றும் புதிய தொழில்நுட்ப செய்தி துண்டறிக்கைகள் அமைத்தும் வழங்கியும் விளக்கமளித்தனர்.
அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் மற்றும் உதவி வேளாண்மை அலு வலர் பெரியசாமி ஆகியோர் அட்மா திட்ட பணிகள் குறித்தும் அதன் செயல்பாடுகள், உழவன் செயலின் பதிவிறக்கம் அதன் பயன்கள், பிரதமரின் கவுரவ நிதி தொகை பற்றி யும், அதற்கு புதுப்பித்தல், அங்கக வேளாண்மை மற்றும் நுண்ணீர் பாசனம் பதிவு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்க மளித்து பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பயிற்சியின் இறுதியில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி நன்றி கூறினார்.