என் மலர்
தர்மபுரி
- போலீசார் சக்கரவர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- இருவரும் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்த சோளக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பாண்டு மகன் சக்கரவர்த்தி (வயது28). இவர் மொரப்பூரில் செல்போன் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது சக்கரவர்த்தி வரும் வழியில் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து சக்கரவர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
இதேபோன்று தருமபுரி மாவட்டம் துக்கப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). விவசாயியான இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே சென்றார். அப்போது அந்த வழியாக புதுகொக்காரப்பட்டியைச் சேர்ந்த பிரபு (31) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது இருவரும் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் கோபிநாதம்பட்டி கூட்ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த ரமேசை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் 3 பேர் பலியான சம்பவம் அவரவர் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
- இறந்த கார்த்திகாவுக்கு ஒரு குழந்தை உள்ளதால் கணவரின் சொத்தில் அந்த குழந்தைக்கு ஒரு பங்கு எழுதி கொடுக்க வேண்டும் என்று கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நடுப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியண்ணன்-சித்ரா தம்பதியினரின் மகள் கார்த்திகா (வயது22). இவருக்கும் பஞ்சப்பள்ளி உடையாண்டஅள்ளியை அடுத்த பாலம்பட்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு கடந்த 3ஆண்டுகளுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி அன்று கார்த்திகா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனால் கார்த்திகாவின் சாவில் மர்மம் உள்ளதாக எண்ணி, சித்ரா பஞ்சப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். கார்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆனநிலையில் கார்த்திகா வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கணவர் வெங்கடேஷ் மற்றும் உறவினர்களிடம் தருமபுரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து இறந்த கார்த்திகாவுக்கு ஒரு குழந்தை உள்ளதால் கணவரின் சொத்தில் அந்த குழந்தைக்கு ஒரு பங்கு எழுதி கொடுக்க வேண்டும் என்று கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர்.
- உறுதி மொழி ஏற்ப்பு நிகழ்ச்சி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
- சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பாப்பிரெட்டிப்பட்டி,
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துத்துறையின் சார்பாக உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்ப்பு நிகழ்ச்சி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலையில் நடைபெற்றது.
புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் ரமேஷ் உறுதிமொழி வாசிக்க பொதுமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
- 2 கிலோமீட்டர் சாலையை மலைப்பாதையில் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- இந்த இணைப்பு சாலை அமைக்கப்படும் பட்சத்தில் தருமபுரியில் இருந்து பொம்மிடி மற்றும் சேலம் மாவட்டத்திற்கு செல்வது எளிதாக இருக்கும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மிட்டாரெட்டி அள்ளியை அடுத்த கோமேரிக் கொட்டாய் கிராம மக்கள் பொம்மிடி பகுதியில் இருந்து விவசாய வேலைகள், பள்ளி, கல்லூரிகள் என சென்று வருகின்றனர். பொம்மிடி மற்றும் கோமேரிக்கொட்டாய் இடையே வனப்பகுதியில் மலை சாலையை கடந்து இப்பகுதி மக்கள் பயணித்து வருகின்றனர்.
இந்த மலைப் பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால், இந்த பகுதி மக்கள் சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றி வருகின்ற நிலை இருந்து வருகிறது. இதனால் இந்த 4 கிலோமீட்டர் உள்ள மலை சாலையை இணைக்க வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாக நீண்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பவர் கிரீட் உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக இந்த வனப் பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலை பணிகள் முடிவடைந்த உடன் இந்த சாலை முழுவதுமாக அடைக்கப்பட்டது.
இந்த சாலை இருந்தவரை பொதுமக்கள் அதை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது பயன்படுத்த முடியாத சூழலில் இருந்து வருகின்றனர். தொடர்ந்து மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, இன்று மலைப் பகுதியில் தருமபுரி-பொம்மிடி மற்றும் தருமபுரி-சேலம் மாவட்டத்தை இணைக்கும் மலை பாதை அமைய உள்ள இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேரில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது "தற்போதைய சூழலில் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் சூழலில், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மலை பாதையில் 2 கிலோமீட்டர் சாலை அமைத்து தருமபுரி மற்றும் பொம்மிடி பகுதிகளை இணைக்க முடியவில்லை என்றால் வியப்பாக உள்ளது.
இங்குள்ள விவசாய கூலி தொழிலாளிகள் பயன்பெறும் வகையில் இந்த 2 கிலோமீட்டர் சாலையை மலைப்பாதையில் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த இணைப்பு சாலை அமைக்கப்படும் பட்சத்தில் தருமபுரியில் இருந்து பொம்மிடி மற்றும் சேலம் மாவட்டத்திற்கு செல்வது எளிதாக இருக்கும். பல கிலோமீட்டர் தூரம் சுற்றி வருவது இதனால் குறையும்.
சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசு இந்த சாலை பணிகளை உடனடியாக அமைக்க தனி கவனம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதே பாதையில் பவர் கிரேட் மின் பாதை அமைக்க அனுமதி அளித்து, அதற்கான கோபுரங்களும் நிறுவப்பட்டு, தற்போது செயல்பாட்டிலும் வந்துள்ளது.
ஆனால் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இது வழித்தடத்தில் சாலை அமைக்க அனுமதி அளிக்காமல் இருப்பது வருத்தத்துக்குரியது" என தெரிவித்தார்.
- பெருமாள் சாமியை தோலில் சுமந்து கொண்டு ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்தனர்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள வீர கவுண்டனூர் கிராமத்தில் 8 ஆண்டுகளுக்கு பின்பு சக்தி மாரியம்மன், காளியம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் கிராம மக்கள் அனைவரும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் மற்றும் பெருமாள் சாமியை தோலில் சுமந்து கொண்டு ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்தனர்.
இதனையடுத்து பம்பை, மேளதாளம், வானவேடிக்கை முழங்க கடத்தூர் காளியம்மன் கோவிலில் இருந்து காளியம்மன் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வீர கவுண்டனூர் எடுத்துச் சென்றனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மாவிளக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்து சாமியை வழிபட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- அரசு பள்ளியின் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து தற்போது வளாகம் முழுவதும் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- அனைத்து அரசு பள்ளிகளிலும் இதே போல் மாணவர்கள் நலன் காக்கும் செயல்களில் பள்ளி திறப்பிற்கு முன் அனைத்து ஆசிரியர்களும் செயல்பட வேண்டும்
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள பள்ளி சுற்றுச்சுவருக்கு, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தனர்.
அதேபோல் இந்த அரசு பள்ளியின் வளாகம் முழுவதும் மாணவ, மாணவிகளின் நலன் கருதியும் பாதுகாப்பிற்காகவும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து தற்போது வளாகம் முழுவதும் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்து தற்பொழுது சுற்றுச்சுவர் அமைக்கும் பணியையும் தொடங்கியுள்ளார். பள்ளி திறப்பதற்குள் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன்கள் காக்கும் செயல்கள் அனைத்தையும் தொடங்கிட வேண்டும் என்பதில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேல் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் இதே போல் மாணவர்கள் நலன் காக்கும் செயல்களில் பள்ளி திறப்பிற்கு முன் அனைத்து ஆசிரியர்களும் செயல்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
இந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் புவனேஸ்வரிமூர்த்தி, முருகன், பள்ளி தலமை ஆசிரியர் தங்கவேல், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் மற்றும் பா.ம.க நிர்வாகிகள் குப்பன், முருகன், கிருஷ்ணமூர்த்தி, சிவபிரகாஷ், மனோகரன், வளர்மதி, பள்ளி பிடிஏ நிர்வாகி வீரமணி, கிராம வளர்ச்சிகுழு தலைவர் மூர்த்தி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நெல் காணாமல் போனதாக வந்த தகவலை அறிந்து திறந்தவெளி நெல்சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு விசாரிக்க வந்தனர்.
- அட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாகவும் ஒருசில அட்டிகளில் குறைவாகவும் மூட்டைகள் உள்ளதாகும் தெரிவித்தனர்.
தருமபுரி,
குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் காமினி உத்திரவின்படி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, சேலம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மோகன் ஆகியோர் அதியமான் கோட்டை அருகே அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல்சேமிப்பு கிடங்கில் 7000 டன் நெல் காணாமல் போனதாக வந்த தகவலை அறிந்து திறந்தவெளி நெல்சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு விசாரிக்க வந்தனர்.
அப்போது ஏற்கனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் விழிப்புபணி (விஜிலென்ஸ்) அலுவலர் லோகநாதன் தலைமையிலான துணை மேலாளர் கமலக்கண்ணன் மற்றும் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் அட்டிகளை கணக்கெடுத்ததில் அட்டி கணக்கு சரியாக உள்ளதாகவும், அட்டிகளில் உள்ள மூட்டைகளின் எண்ணிக்கையில் ஒரு சில அட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாகவும் ஒருசில அட்டிகளில் குறைவாகவும் மூட்டைகள் உள்ளதாகும் தெரிவித்தனர்.
அதனால் கடந்த பிப்ரவரி முதல் டெல்டா மாவட்டங்களில் இருந்து வாங்கப்பட்ட நெல்லின் அளவிலிருந்து அரவைமில் முகவர்களுக்கு கொடுக்கப்பட்ட நெல் போக மீதமுள்ள நெல்லை இன்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் மீண்டும் அரவை மில் முகவர்களுக்கு அரவைக்காக ஏற்றி அனுப்பிய பிறகு தான் மூட்டைகள் குறைகிறதா இல்லையா என கண்டறிய இயலும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- சிறுபாலம் அமைக்கும் பணிகளில் அனுமதிக்கப்பட்ட கம்பிகள் பயன்படுத்தப் படுவதில்லை என்றும் புகார் தெரிவிக்கிறார்கள்.
- கூட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வரவேண்டும் என்று தொடர்ந்து 3 முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் சரஸ்வதி முருகசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் கருணாநிதி வரவேற்று பேசினார். கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஊராட்சி மாநில நிதிக்குழு மானியத் திட்டம் மற்றும் 15-வது மத்திய நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே நிர்வாக ஒப்புதல் வழங்கி மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகளுக்கு ரூ.3 கோடியே 59 லட்சத்து 53 ஆயிரத்து 615 நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும் மாநில நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் வரப்பெற்றுள்ள ரூ. 2 கோடியே 48 லட்சம் நிதிக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பணிகளை தேர்வு செய்து ஒப்புதல் அளித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் கூறுகையில், தருமபுரி-அரூர் இடையே புதிய 4 வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தரமற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
இந்தப் பணிகளை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்களா? என்பது தெரியவில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மழை நீர் வடிகால் முறையாக அமைக்கப்படுகிறதா? என்பதும் தெரியவில்லை.
மேலும் சிறுபாலம் அமைக்கும் பணிகளில் அனுமதிக்கப்பட்ட கம்பிகள் பயன்படுத்தப் படுவதில்லை என்றும் புகார் தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வரவேண்டும் என்று தொடர்ந்து 3 முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை.
எனவே மாவட்ட கலெக்டர் நேரடியாக இந்த சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டு தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து தருமபுரி-அரூர் இடையே 4 வழிச்சாலை பணிகள் ஆய்வு குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மீண்டும் கடிதம் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.
- போலீஸ் அதிகாரிகள் நடத்திய இந்த விசாரணையில் 111 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
- முகாமையொட்டி பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் மற்றும் ரத்த அழுத்தம்- சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தருமபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோவன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சனை, குடும்பத் தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 112 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் அதிகாரிகள் நடத்திய இந்த விசாரணையில் 111 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள ஒரு மனு மட்டும் தொடர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், ராமச்சந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமையொட்டி பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் மற்றும் ரத்த அழுத்தம்- சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் புகார் மனு கொடுக்க வந்தவர்கள் மற்றும் அவருடன் வந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.
- இறுதி கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் கோவில் பூசாரி சுப்பிரமணி குற்றம் செய்தது உறுதியானது.
- நீதிபதி சையத்பர்க்கதுல்லா குற்றவாளி சுப்பிரமணிக்கு 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கோவில் பூசாரி சுப்பிரமணி (67). இவர் கடந்த 2017 -ம் ஆண்டு ஜுலை மாதம் 6 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் எ.பள்ளிப்பட்டி போலிஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலிசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இறுதி கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் கோவில் பூசாரி சுப்பிரமணி குற்றம் செய்தது உறுதியானது.
இந்நிலையில் தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட் நீதிபதி சையத்பர்க்கதுல்லா குற்றவாளி சுப்பிரமணிக்கு 13 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் கல்பனா வாதாடினார்.