என் மலர்
கரூர்
- மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
கரூர்:
தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கல்லடை அண்ணாநகரில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் மது விற்ற அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி ஜல்ஜா (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.தென்னிலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செஞ்சேரிவலசை சேர்ந்த சதீஷ்குமார் ( 37) என்பவர் அப்பகுதியில் உள்ள காட்டுபகுதியில் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 10 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- குளித்தலையில் நர்சிங் மாணவி மாயமானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்., ஈச்சம்பட்டி காலனியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மகள் மேனகா தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 30-ந் தேதி இரவு குடும்பத்துடன் அனைவரும் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலையில் எழுந்து பார்த்த போது மேனகாவை காணவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து காமாட்சி, தன் மகளை காணவில்லை என கொடுத்த புகார்படி குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகிளிப்பட்டி கிராமத்தில் வெண்டைக்காய் சாகுபடி தீவிரம் அடைந்து வருகிறது
- வெண்டைக்காய்களுக்கு ஓரளவு விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கரூர்,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது வெண்டைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. விவசாயிகள் வெண்டைகாய்களை பறித்து உள்ளூர் வாரச்சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள். தற்போது கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெண்டைக்காய்களுக்கு ஓரளவு விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- கரூர் அருகே கல்லூரி மாணவி மாயமானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவி கோபிகாவை தேடி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகள் கோபிகா. இவர் புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கோபிகா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை வேல்முருகன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவி கோபிகாவை தேடி வருகின்றனர்.
- க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
- சூடாமணியில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் நுாலக கட்டடம் புனரமைக்கும் பணியை ஆய்வு செய்தார்
கரூர்,
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்., பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். இதில் பெரியதாதம் பாளையத்தில் ரூ.1.05 லட்சம் மதிப்பில் நடந்து வரும் சமையல் கூடம் புனரமைக்கும் பணி, சூடாமணியில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் நுாலக கட்டடம் புனரமைக்கும் பணி, வீடுகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள 78 வீடுகளை ரூ.3.90 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணி, தென்னிலை மேற்கில் ரூ.25.99 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஞ்., அலுவலக கட்டட பணிகளை பார்வையிட்டு விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை வாணி ஈஸ்வரி, உதவி பொறியாளர்கள் இளஞ்சேரன், பூர்ணமாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, நீலகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.
- சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சோதனையில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கரூர்:
கரூரில் கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர்.
இதனால் சோதனையை கைவிட்டு அதிகாரிகள் சென்றனர். இதனையடுத்து மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் தொடர்ந்து கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது ஒரு சில இடங்களுக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்தனர். மேலும் ஒருவருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில் 8-வது நாளாக இன்றும் கரூர் ராமகிஷ்ணபுரம், மாயனூர், ராயனூர் என பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தசோதனையின் போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் சோதனையின் போது அதிகாரிகளை தாக்கியதாக வந்த புகாரின் பேரில் போலீசார் 18 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் 11 பேர் ஜாமீன் கேட்டு கரூர் ஜேஎம்கோர்ட் 1-லும், 7 பேர் ஜேஎம்கோர்ட் 2-லும் மனுதாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், 11 பேர் ராயவேலூரில் தங்கி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திலும், 7 பேர் கடலூரில் தங்கியிருந்து கடலூர் போலீஸ் நிலையத்திலும் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- மலர்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
கரூர்:
நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள்உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தோட்டக்குறிச்சி சேங்கல்மலை வரதராஜ் பெருமள் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியகளால், அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
- புகழூர் பகுதியில் கரும்பு லோடுடன் சென்ற டிராக்டர் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நீண்ட நேரத்திற்குப் பிறகு அனைத்து கரும்புகளையும் தார் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்.
கரூர்:
கரூர் மாவட்டம் புகழூர் செம்படாபாளையம் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை வெட்டி செல்வதற்காக கரூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். விவசாயிகள் பதிவு செய்து வெட்டும் தருவாயில் உள்ள கரும்புகளை சர்க்கரை ஆலை நிர்வாகம் கூலி ஆட்கள் மூலம் கரும்புகளை வெட்டி எடுத்து டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் சர்க்கரை ஆலைக்கு இரவு பகலாக கொண்டு வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு சுமார் 100 -க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே சர்க்கரை ஆலைக்கு டிராக்டர் டிப்பர் மூலம் கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும்போது வாகனத்தை தளவாபாளையம் பிரிவு சாலையில்திருப்பும் பொழுது திடீரென எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி டிராக்டர் வாகனம் கரும்பு டிப்பருடன் தார் சாலையில் கவிழந்தது.
இதனால் டிராக்டர் டிப்பரில் இருந்த கரும்புகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையில் எனகொட்டியது.இதனால் அப்பகுதியில் தார் சாலை வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பின்னர் உடனடியாக ெபாக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே தார் சாலையில் கொட்டி மலைபோல் குவிந்து கிடந்த கரும்பு குவியல்களை சிறிது சிறிதாக தார் சாலையின் ஓரத்திற்கு தள்ளப்பட்டது. நீண்ட நேரத்திற்குப் பிறகு அனைத்து கரும்புகளையும் தார் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகு அந்த வழியாக அனைத்து வாகனங்களும் சென்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ரூ.7 லட்சத்துக்கு விற்பனையானது
- இந்த வாரம் 297 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது.
கரூர்:
கரூர் ெநாய்யல் அருகே உள்ள சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்நிலக்கடலை 96.23 குவிண்டால் எடை கொண்ட 297 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.71.50-க்கும், சராசரி விலையாக ரூ.76.50-க்கும் என ரூ.6 லட்சத்து 91 ஆயிரத்து 310-க்கு விற்பனையானது.
- மின்சார வாரிய ஊழியர் உயிரிழந்தார்
- இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் புகழூர் மின்சார வாரிய குடியிருப்பில் வசிப்பவர் செந்தில்குமார் (வயது 45). இவர் மின்சார வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக (எல்ஐ) பணியாற்றி வந்தார். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில்குமார் மூலிமங்கலம் செல்லும் பிரிவு சாலையில் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்பிகா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது
- இதனை தொடர்ந்து கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் மா விளக்கு, பால்குடம், அக்னி சட்டி, அலகு காவடி உள்ளிட்டவை எடுத்து வந்து நேர்த்திக் கடன் ெசலுத்தினர்.
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 14-ந் தேதி கம்பம் வழங்கல் மற்றும் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 19-ந் தேதி பூச்சொரிதல், 21-ந் தேதி காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 28-ந் த