என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருவள்ளூர்
- புழல் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மஞ்சம்பாக்கம், வடப்பெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து அனுமதி இல்லை.
- ஆவடியில் அதிகபட்சமாக 28 செ.மீ. கொட்டித்தீர்த்துள்ளது.
மிச்சாங் புயல் காரணமாக சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
புழல் ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மஞ்சம்பாக்கம், வடப்பெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு 5,777 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், உபரிநீர் திறப்பு 2,000 கனஅடியில் இருந்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலை 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு:
ஆவடி - 28 செ.மீ.
சோழவரம் - 20 செ.மீ
பொன்னேரி -19 செ.மீ
செங்குன்றம் - 17 செ.மீ
தாமரைப்பக்கம் - 17 செ.மீ
கும்மிடிப்பூண்டி - 15 செ.மீ
ஊத்துக்கோட்டை - 15 செ.மீ
திருவள்ளூர் - 15 செ.மீ
பூந்தமல்லி - 14 செ.மீ
ஜமீன் கொரட்டூர் - 12 செ.மீ
திருத்தணி - 12 செ.மீ
பூண்டி - 12 செ.மீ
திருவாலங்காடு - 10 செ.மீ
பள்ளிப்பட்டு - 6 செ.மீ
ஆர்கே பேட்டை - 4 செ.மீ
- பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 830 அடியாக அதிகரித்து இருக்கிறது.
- சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 777 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
செங்குன்றம்:
தொடர்மழை காரணமாக புழல் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 522 கனஅடியாக இருந்து நீர்வரத்து இன்று காலை 1276 கனஅடியாக உயர்ந்து உள்ளது. புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. இதில் தற்போது 18.78 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கனஅடியில் 2,767 மி.கனஅடிக்கு தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பூண்டி ஏரிக்கும் நீர்வரத்து 830 அடியாக அதிகரித்து இருக்கிறது. பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் 32 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2241 மி.கனஅடி தண்ணீர் நிரம்பியுள்ளது. 25 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 777 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 890 கனஅடி தண்ணீர் வருகிறது. 612 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- பன்னீர்செல்வத்தை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உறவினர் பாபு என்பவரை கைது செய்தனர்.
அம்பத்தூர்:
சென்னை முகப்பேரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஏ.ஆர்.டி. ஜூவல்லரி மற்றும் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது. இந்த வழக்கில் அதன் உரிமையாளர்கள் 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தை சேர்ந்த டிரைவர் பன்னீர்செல்வம் (50) என்பவர், அவரது உறவினர்கள் உள்பட பலரிடம் மொத்தமாக ரூ.1 கோடி வரை வசூல் செய்து, ஏ.ஆர்.டி. நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஏ.ஆர்.டி. நிறுவனம் மோசடியில் ஈடுபட்ட தகவலறிந்ததும் பணம் கொடுத்த உறவினர்கள், பன்னீர் செல்வத்தை தகாதவார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்து, பணத்தை திருப்பி தருமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பன்னீர்செல்வம் நேற்று மாலை தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில், பன்னீர்செல்வத்தை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.
பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் பலர் போலீஸ் நிலையத்தில் ஒன்று கூடியதால் தற்போது அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இது குறித்து அம்பத்தூர் போலீஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உறவினர் பாபு என்பவரை கைது செய்தனர்.
- புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.
- கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சமீபத்தில் உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது.
இன்று (சனிக்கிழமை) காலை அந்த புயல் சின்னம் மேலும் வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறி இருக்கிறது. இது புயலாக மாறுவதற்கு முந்தைய நிலையாகும்.
இன்று பிற்பகல் இந்த புயல் சின்னம் மேலும் சென்னையை நோக்கி அருகில் நகர்ந்து வரும். அதன் பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.
வட மாவட்டங்கள் அருகே புயல் நாளை நெருங்குவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலார்ட் (பலத்த மழை) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் திங்கள் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- அணைக்கட்டு முழுமையாக நிரம்பி சுமார் 1 அடி உயரத்திற்கு 2250 கனஅடி தண்ணீர் அணைக்கட்டில் இருந்து வழிந்தோடுகிறது.
- நீர்நிலைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சீமாவரம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து வெளிவரும் தண்ணீரால் வல்லூர் தடுப்பணை முழுமையாக நிரம்பி வழிகிறது. அணைக்கட்டு முழுமையாக நிரம்பி சுமார் 1 அடி உயரத்திற்கு 2250 கனஅடி தண்ணீர் அணைக்கட்டில் இருந்து வழிந்தோடுகிறது.
இந்த தடுப்பணையில் இருந்து வழியும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குதித்து நீச்சலடித்தும், டைவ் அடித்தும், குளித்தும் குதூகலமடைந்துள்ளனர். இந்த அணைக்கட்டில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றின் வழியே எண்ணூர் கடலுக்கு செல்ல உள்ளது. கனமழையால் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் வல்லூர் அணைக்கட்டு உள்ளிட்ட நீர்நிலைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொன்னேரி ஆரணி ஆற்றில் லட்சுமிபுரம் அணைக் கட்டில் இருந்து 900 கன அடி வெளியேறும் மழை நீர் பழவேற்காட்டில் கடலில் கலக்கின்றன. பெய்து வரும் மழையினால் பொன்னேரி பகுதிகளில் 28 வார்டுகளில் மழைநீர் தேங்கியும் பொன்னேரி- மீஞ்சூர் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற முடியாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர்.
பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட துரைசாமி நகர், ஏ ஏ எம் நகர், பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.
- கடந்த சில நாட்களாக பெய்த பருவ மழையின் காரணமாக பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பி உள்ளது.
- கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியைச் சேர்ந்த காரணி ஊராட்சியில் இருந்து கொசவன்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த அஞ்சாதம்மன் கோவில் பகுதிக்கு வருவதற்கு ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப் பாலம் ஒன்று உள்ளது. இந்த தரை பாலத்தின் வழியாக எருக்குவாய், நெல்வாய், எருக்குவாய் கண்டிகை, முக்கரம்பாக்கம், சந்திராபுரம், மங்களம், பாலேஸ்வரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருவார்கள்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த பருவ மழையின் காரணமாக பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பி உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் காரணி-அஞ்சாதம்மன் கோவில் இடையில் ஆரணி ஆற்றில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. மேலும், ஆரணி சமுதாயக் கூடம் எதிரில் இருந்து மங்களம் கிராமத்திற்கு செல்லும் வழியில் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள நடைபாதையும் வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் இப்பகுதியில் ஆபத்தையும் உணராமல் கிராம மக்கள் சிலர் கடந்து சென்று வருகின்றனர்.
பெரியபாளையம் மற்றும் ஆரணி போலீசார் இப்பகுதிகளில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர்.
இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு பெரியபாளையம் வழியாக சென்று வருகின்றனர்.
- 21.2 அடி உயரம் கொண்ட ஏரியில் 19.42 அடி வரை நீர் மட்டம் உள்ளது.
- புழல் ஏரிக்கு நீர்வரத்து 570 கனஅடியும், சென்னை குடிநீருக்காக 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் டிச.2, 3 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும். அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.
இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
21.2 அடி உயரம் கொண்ட ஏரியில் 19.42 அடி வரை நீர் மட்டம் உள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 570 கனஅடியும், சென்னை குடிநீருக்காக 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
உயரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 1000 கன அடியில் இருந்து 1500 கன அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 1100 கன அடியாக உள்ளது.
- தொங்கி கொண்டிருந்த வயரில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை அறியாமல் சம்பத் குமார் அந்த மின்வயரை தொட்டதாக தெரிகிறது.
- போலீசார் வழக்கப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.
அம்பத்தூர்:
கொரட்டூர், பாடி யாதவா தெருவை சேர்ந்தவர் சம்பத் குமார் (வயது57).தி.மு.க.பிரமுகரான இவர் சென்னை ஐகோர்ட்டில் அரசு வக்கீலாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுந்தர தேவி, அம்பத்தூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
சம்பத்குமார் தினமும் காலையில் அப்பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று காலை 6 மணியளவில் வழக்கம்போல் அவர் கொரட்டூர் ஜம்பு கேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சிவன் கோவிலை சுற்றி நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது திடீரென மழை பெய்தததால் அருகில் உள்ள இரும்பு பட்டறை தொழிற்சாலை வாசலில் ஒதுங்கி நின்றார். அந்த நேரத்தில் அங்கு தொங்கி கொண்டிருந்த வயரில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை அறியாமல் சம்பத் குமார் அந்த மின்வயரை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சம்பத் குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்கப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.
- ரூ.35ஆயிரம் ரொக்கம், "வாக்கி டாக்கி" ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- பல இடங்களில் பணம் வசூலிதது மோசடியில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போரூர்:
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் பிரபல நிறுவனத்தின் இனிப்பு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு போலீஸ் என கூறி வாலிபர் ஒருவர் தினசரி இனிப்பு, காரம் உள்ளிட்ட தின்பண்டங்களை ஓசியில் பார்சல் வாங்கி சென்றார். இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த கடை ஊழியர் அருண்குமார் இதுபற்றி வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸ்காரர் தம்பிதுரை இனிப்பு கடை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த அதே வாலிபர் கையில் "வாக்கி டாக்கி"யுடன் இனிப்பு கடைக்குள் சென்று வழக்கம் போல பார்சல் வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அவர், போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டரின் மகன் ரமேஷ் (44) என்பது தெரிந்தது. போலீஸ் என்று கூறி பல இடங்களில் கைவரிசை காட்டிய அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.35ஆயிரம் ரொக்கம், "வாக்கி டாக்கி" ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் கணக்காளராக வேலை பார்த்து வரும் ரமேஷ் தீபாவளி பண்டிகையின் போது போலீஸ் என கூறி பல இடங்களில் பணம் வசூலிதது மோசடியில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- தனியார் கண்டெய்னர் யார்டு அருகே கிராமமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாலூர் அண்ணாநகர், கம்மார்பாளையம், தெலுங்கு காலனி, கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்திற்காக பொன்னேரி-மீஞ்சூர் நெடுஞ்சாலையில் இருந்து கிராமத்திற்கு செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கண்டெய்னர் யார்டு,குளிர்பதன கிடங்குகளுக்கு வரும் கனரக வாகனங்களால் இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில் சேதமடைந்த சாலை தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்க லாயக்கற்று மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் 12 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலையை சீரமைக்க கோரியும், கண்டெய்னர் யார்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் விடப்படுவதை கண்டித்தும், உயர்மின் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவை அகற்ற கோரியும்,தனியார் கண்டெய்னர் யார்டு அருகே கிராமமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த லாரியை சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், வட்டாட்சியர் மதிவாணன் மறியலில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒரு வாரத்தில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் மறியில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.