search icon
என் மலர்tooltip icon
    < Back
    7/G
    7/G

    7/G

    இயக்குனர்: ஹாரூன்
    எடிட்டர்:பிஜு வி. டான் போஸ்கோ
    ஒளிப்பதிவாளர்:கண்ணா. ஆர்
    இசை:சித்தார்த் விபின்
    வெளியீட்டு தேதி:2024-07-05
    Points:1445

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை11299163
    Point54588812
    கரு

    7/G வீட்டில் நடக்கும் அமானுஷ்யம் பற்றிய கதை

    விமர்சனம்

    கதைக்களம்

    ரோஷன் பஷீர் - ஸ்முருதி வெங்கட் தம்பதி தனது மகனுடன் அடுக்குடிமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறுகிறார்கள். பஷீர் ஐடி-யில் பணிப்புரிந்து வருகிறார். அவரது அலுவலக தோழியான சினேகா குப்தா பஷீரை அடைவதற்காக மாயமந்திர முயற்சிகளில் ஈடுப்படுகிறார். அதனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சினேகா குப்தா அவரது வீட்டில் ஒரு சூனிய பொம்மையை வைக்கிறார். இதற்கிடையே பஷீர் வேலை விஷயமாக ஊருக்கு செல்கிறார். அப்பொழுது வீட்டில் இருக்கும் ஸ்முருதி வெங்கட்டிற்கு அமானுஷயமான சில விஷயங்கள் நடைப்பெறுகிறது.

    ஒருக்கட்டத்தில் அந்த வீட்டில் உள்ள ஆன்மா வெளியே வந்து ஸ்முருதி வெங்கட்டை அந்த வீடில் இருந்து வெளியே துரத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்கிறது. இந்த ஆன்மா யாருடையது? அந்த ஆன்மாவிற்கு அந்த சூனிய பொம்மைக்கும் சம்மதம் இருக்கிறதா? ஆன்மாவிற்கும் இந்த வீட்டிற்கும் என்ன தொடர்பு? அடுத்து என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தின் முக்கியமான திருப்புமுனையாக பயணித்திருக்கும் சோனியா அகர்வால், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

    படத்தின் மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்முருதி வெங்கட், காதல், ஏக்கம், பயம், தைரியம் என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்யக்கூடிய கதாபாத்திரத்தை சரியாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.

    ஸ்முருதி வெங்கட்டின் கணவராக நடித்திருக்கும் ரோஷன் பஷீர், படத்தில் எதற்கு வருகிறார் என்று தெரியவில்லை. கணவன் என்ற கதாப்பாத்திரம் வேணுமே என்று வைத்துள்ளார்கள். சினேகா குப்தா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சித்தார்த் விபின் காமெடி கலந்த வில்லனாக அவர் நடித்த விதம் ரசிக்க வைக்கிறது.

    இயக்கம்

    ஒரு வழக்கமான திகில் கதையை ஹாரூண் இயக்கி இருந்தாலும், அதில் பிளாக் மேஜிக் போன்ற அம்சங்களை வைத்து காட்சிகளை மெழுகேற்றியுள்ளார். ஆனால் அது சிறிது நேரம் மட்டுமே வேலை செய்கிறது. படம் போக போக ஒருவித சலிப்பை தட்டிவிடுகிறது. திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    ஒரு வீட்டை அமானுஷ்யமாகவும் திகிலாகவும் காட்ட ஒளிப்பதிவாளர் கண்ணா முயற்சித்துள்ளார்.

    தயாரிப்பு

    ஹாரூண் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×