search icon
என் மலர்tooltip icon
    < Back
    Kannagi
    Kannagi

    கண்ணகி

    இயக்குனர்: யஷ்வந்த் கிஷோர்
    எடிட்டர்:கே சரத் குமார்
    ஒளிப்பதிவாளர்:டி. ராம்ஜி
    இசை:ஷான் ரஹ்மான்
    வெளியீட்டு தேதி:2023-12-15
    Points:1492

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை99104
    Point669823
    கரு

    நான்கு பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை வைத்து கண்ணகி திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நாயகி அம்மு அபிராமிக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். பல காரணங்களால் திருமணம் நடைபெறாமல் இருக்கிறது.

    நாயகி வித்யா பிரதீப்பின் கணவர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் கேஸ் போடுகிறார். ஆனால், வித்யா பிரதீப் கணவருடன் சேர்ந்து வாழவே ஆசைப்பட்டு விவாகரத்து தர மறுக்கிறார்.

    நாயகி மாடர்ன் பெண்ணான ஜோயா, காதல், திருமணம் ஆகியவற்றில் விருப்பமில்லாமல் ஆண் நண்பருடன் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் அந்த ஆண் நண்பர், ஜோயாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். ஜோயாவோ திருமணம் செய்ய மறுக்கிறார்.

    கர்ப்பிணியாக இருக்கும் நாயகி கீர்த்தி, தனது கருவை கலைக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால், கரு கலைப்பு செய்ய டாக்டர்கள் மறுக்கிறார்கள்.

    இப்படி நான்கு பெண்களும் ஒவ்வொரு சிக்கலில் இருக்க, இவர்களின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நாயகி கீர்த்தி, கர்ப்பிணி பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். வயிற்றில் அடித்துக் கொள்ளும் காட்சியில் மனதை உருக வைத்து இருக்கிறார். சோயா மாடர்ன் பெண்ணாக நடித்து அசத்தி இருக்கிறார். துணிச்சலான கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடித்து இருக்கிறார்.

    குடும்ப பெண்ணாக நடித்து இருக்கும் வித்யா பிரதீப் விவாகரத்து வேண்டாம் என சொல்லும் காட்சியிலும், காதலனை நினைத்து வருந்தும் காட்சியிலும் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தி இருக்கிறார் அம்மு அபிராமி. தந்தையிடம் பேசும் காட்சியில் கண்கலங்க வைத்து இருக்கிறார். யாரும் எதிர்பார்த்திராத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மயில்சாமி, மௌனிகா ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் யஸ்வந்த் கிஷோர். குறிப்பாக அனைத்து பெண்களிடமே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். வித்தியாசமான திரைக்கதை அமைத்து இருக்கிறார். ஆனால், அது பலருக்கு புரியுமா என்பது சந்தேகம்.

    இசை

    ஷான் ரஹ்மான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

    ஒளிப்பதிவு

    ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

    படத்தொகுப்பு

    கே. சரத்குமார் படத்தொகுப்பு கதையுடன் பயணிக்க வைத்துள்ளது.

    காஸ்டியூம்

    நித்யா வெங்கடேசன் மற்றும் நஷிமா ஜீலன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூம் டிசைன் செய்துள்ளார்கள்.

    புரொடக்‌ஷன்

    ஸ்கை மூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஈ5 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து ‘கண்ணகி’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×