search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    மத்திய அரசு ஒலிம்பிக் போட்டிக்காக ரூ.1.5 கோடி வழங்கியதா?- அஸ்வினி மறுப்பு
    X

    மத்திய அரசு ஒலிம்பிக் போட்டிக்காக ரூ.1.5 கோடி வழங்கியதா?- அஸ்வினி மறுப்பு

    • இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து தகவல் வெளியாகி இருந்தது.
    • அஸ்வினி மறுத்துள்ளார். யார் ரூ.1.5 கோடி வழங்கியது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பேட்மின்டன் ஆட்டத்தில் 7 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாமல் போனது ஏமாற்றமே.

    இதில் லக்ஷயா சென் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி வரை வந்து தோற்றார். சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதியில் வெளியேறியது. இதே போல பி.வி.சிந்துவும் கால் இறுதியில் தோற்றார்.

    பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி 3 ஆட்டத்திலும் தோற்று தொடக்க சுற்றிலேயே வெளியேறியது.

    இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து தகவல் வெளியாகி இருந்தது. பிரணாய்க்கு ரூ.1.8 கோடி வழங்கப்பட்டதாகவும், அஸ்வினி பொன்பப்பா-தனிஷா கிரஸ்டோ இருவருக்கும் தலா ரூ.1.5 கோடி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

    இதை அஸ்வினி மறுத்துள்ளார். யார் ரூ.1.5 கோடி வழங்கியது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    உண்மையை சரியாக பெறாமல் எப்படி அந்த தகவலை வெளியிட முடியும்? இப்படி ஒரு பொய்யை எவ்வாறு கூறலாம். தலா ரூ.1.5 கோடியா? யாரிடமிருந்து? எதற்காக? எனக்கு இந்த தொகை வழங்கப்படவில்லை.

    நிதியுதவிக்காக எந்த அமைப்பிலோ அல்லது ஒலிம்பிக் பதக்க இலக்க திட்டத்தின் ஒரு பகுதியாகவோ நான் இருக்கவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் வரை நான் கலந்து கொண்ட போட்டிகளுக்கு எனக்கு நானே நிதியுதவி செய்தேன். அணியில் இணைவதற்கான தகுதியை அடைந்த பிறகுதான் இந்திய அணியுடன் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டேன்.

    பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற பிறகுதான் நான் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டேன், அவ்வளவுதான். எங்களுடைய பயிற்சியாளரும் எங்களோடு பயணம் செய்ய வேண்டும் என்று நாங்கள் முன்வைத்த கோரிக்கை கூட நிராகரிக்கப்பட்டது".

    இவ்வாறு அஸ்வினி பொன்னப்பா கூறியுள்ளார்.

    Next Story
    ×